காரைக்கால் மாங்கனி திருவிழா..பிள்ளை வரம் பெற இறைவனை தரிசிக்க குவியும் பக்தர்கள்
காரைக்காலில் மாங்கனி திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்கிய விழாவின் முக்கிய அம்சமான மாங்கனி இறைக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது.
காரைக்கால்: காரைக்காலில் மாங்கனி திருவிழாவின் முக்கிய அம்சமான புனிதவதியார் பரமதத்தர் திருமணம் நேற்று காலை கோலாகலமாக நடைபெற்றது. இன்று காலை மாங்கனியை இறைவன் மீது வீசி வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக ஏராளமான பக்தர்கள் காரைக்காலில் திரண்டுள்ளனர்.
63 நாயன்மார்களில் ஒருவராக போற்றப்படும் அம்மையார் காரைக்கால் அம்மையார். நான்காம் நூற்றாண்டில் தோன்றி தமிழுக்கும், சைவ சமயத்துக்கும் பெரும் தொண்டாற்றியவர் காரைக்கால் அம்மையார். திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் 11 பாடல்கள், திருவிரட்டை மணிமாலை 20 பாடல்கள், அற்புதத் திருவந்தாதி 101 பாடல்கள் என இவர் எழுதிய பாடல்கள் அனைத்துமே தமிழ் இலக்கியத்தில் முக்கியமானவை.
இறைவனின் திருவாயால் அம்மையே என்று அழைக்கப்பட்டவரும், 63 நாயன்மார்களில் அமர்ந்த நிலையில் அருள்பாலித்து வருபவர் காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனி திருவிழா மாப்பிள்ளை அழைப்பு, திருமணம் என கோலாகலமாக நடைபெற்றது.

மாங்கனி திருவிழா
காரைக்கால் பாரதியார் வீதியில் தனிக்கோயிலில் காரைக்கால் அம்மையார் அருள்பாலிக்கிறார். ஒப்பற்ற சிவனடியாராக வாழ்ந்த இந்த அம்மையாரின் வாழ்க்கையையும் தொண்டுகளையும் மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஆனி மாத பௌர்ணமி தினத்தையொட்டி மாங்கனி திருவிழா நடைபெறுகிறது.
இந்த ஆண்டுக்கான மாங்கனி திருவிழா திங்கட்கிழமையன்று மாலை மாப்பிளை அழைப்புடன் தொடங்கியது. செவ்வாய்கிழமை காலை 11 மணிக்கு பரமதத்தருக்கும், ஸ்ரீபுனிதவதியார் என்றைழைக்கப்பட்ட காரைக்கால் அம்மையாருக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.

காரைக்கால் அம்மையார் திருக்கல்யாணம்
நேற்றைய தினம் ஸ்ரீபரமதத்தருக்கும், ஸ்ரீபுனிதவதியார் என்றைழைக்கப்பட்ட காரைக்கால் அம்மையாருக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வினை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர். மாலையில் ஈசன் பிச்சாண்டவர் வெள்ளை சாற்றி உலா நடைபெற்றது. இரவு புனிதவதியாரும், பரமதத்தரும் தம்பதிகளாக முத்துச் சிவிகையில் வீதியுலா வந்தனர்.

பிச்சாண்டவர் அபிஷேகம்
இன்றைய தினம் அதிகாலை 3 மணி தொடங்கி 6 மணிக்குள் பஞ்சமூர்த்திகள் மற்றும் பிச்சாண்டவர் மூர்த்திக்கு மகா அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது. இன்று மாலை பிச்சாண்டவர் மூர்த்தி மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது.

மாங்கனி இறைக்கும் நிகழ்ச்சி
பரமசிவன் அடியார் கோலத்துடன் பவளக்கால் விமானத்தில் அமர்ந்து வீதியுலா நடக்கிறது. காலை 7 மணிக்கு ஈஸ்வரன், காரைக்கால் அம்மையிடம் பிட்சை வாங்கி உண்ட சிவனடியார் கோலத்தில் பவளக்கால் விமானத்தில் புறப்பட்டு திருவீதி உலா செல்லும் போது நகரெங்கும் கூடியிருக்கும் பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றும் பொருட்டு, மாங்கனிகளை வாரி இறைத்து அருள்பெறுவார்கள்.

குழந்தை வரம் கிடைக்கும்
பிள்ளை வரம் வேண்டி காரைக்கால் அம்மையார் கோயிலுக்கு வந்து மாங்கனி திருவிழாவின்போது மாங்கனிகளை இறைப்போருக்கு கண்டிப்பாக குழந்தை பிறக்கும் என்பது பலரது அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. இன்றைய தினம் மாலை 6 மணிக்கு ஈசனுக்கு அமுது படையல் படைக்கும் நிகழ்ச்சி நடைபெறும். மாங்கனி விழாவின் கடைசி நாளான நாளைய தினம் வியாழக்கிழமையன்று அதிகாலை 5 மணிக்கு காரைக்கால் அம்மையார் எலும்புருவுடன் திருக்கயிலாயம் செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

குலசேகரபட்டினத்தில் மாங்கனி திருவிழா
குலசேகரபட்டினத்தில் பேயுருவம் பெற்று கயிலாயத்திற்கு தலையால் நடந்து சென்று ஈசனால் அம்மையே என்று அழைக்கப்படும் பெருமைக்கு உரியவர் காரைக்கால் அம்மையார். அவரது வரலாற்றினை எடுத்துக்கூறும் வகையில் குலசையில் மாங்கனி திருவிழா இன்றைய தினம் நடைபெறுகிறது. அம்மைக்கு ஆயிரக்கணக்கான மாங்கனிகளை படையலிட்டு வணங்கி அதனை பக்தர்களுக்கு பிரசாதமாக அளிக்கின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications