Thulam: துலாம் ராசிக்கு குறி வச்சா இரை விழும் யோகம்.. தொட்டதெல்லாம் ஹிட்டாகும்

Subscribe to Oneindia Tamil

March month rasi palan: மார்ச் மாதத்தில் பல முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெற்றுள்ளன. இந்த கிரக மாற்றமானது 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் துலாம் ராசியினருக்கு மார்ச் மாதத்தில் கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

மார்ச் மாதத்தில் கும்ப ராசியில் ராகு, செவ்வாய், புதன் ஆகிய கிரகஹ்கள் மாதம் முழுவதும் அங்கேயே இருக்கின்றன. குரு பார்வையில் இருப்பதால் பெரிய அளவில் முன்னேற்றத்தைத் தரும். மாதத்தின் பிற்பகலில் சுக்கிரன் உச்சத்தை அடைகிறார். குருவுக்கு நிகரான மிகப்பெரிய சுபரான சுக்கிரன் உச்சத்தை அடைவதால் பெண்கள் விஷயத்தில் ஏற்றம் உண்டாகும். பெண்கள் தங்களுடைய திறமைகளை வெளிக்காட்டக் கூடிய தன்மை ஏற்படும். [Thulam]

thulam-rasi-palan-what-kind-of-benefits-will-get-thulam-rasi-people-during-this-march-month

ஆண்களால் ஏற்படும் பிரச்சனைகள் எல்லாம் நீங்கும். சனி பகவான் உச்ச சுக்கிரனோடு சேர்ந்து சுபத்துவத்தை அடைவதால் தொழிலாளர் உள்ளிட்ட உழைக்கும் வர்க்கத்தினருக்கு நன்றாக இருக்கும் காலகட்டம். சிலருக்கு காதல் மலரும். அந்த வகையில் இந்த மார்ச் மாதத்தில் துலாம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்துப் பார்க்கலாம்.

துலாம் மார்ச் மாத பலன்

துலாம் ராசிக்காரர்களுக்கு ராசிநாதன் இந்த மாதம் 6 ஆம் இடத்தில் உச்சத்தை அடைகிறார். ஏற்கனவே சனியுடன் சேர்ந்து வலிமையாக இருக்கிறார். மாதத்தின் ஆரம்பத்தில் ராசியையும், ராசிநாதனையும் பார்ப்பதால் யோக பலன்களைப் பெற்றிருப்பீர்கள். அனைத்துப் பிரச்சனைகளையும் சரி செய்து கொடுக்கக்கூடிய மாதமாக இந்த மாதம் அமையும். இன்னும் ஓராண்டு முதல் ஒன்றரை ஆண்டு வரை பெரிய சிக்கல்கள், பாதிப்புகள் எதுவும் ஏற்படாது.

குரு பார்வை

எதிர்ப்புகளை விலக்கி வைக்கக்கூடிய மாதமாக இருக்கும். எதிரியும் நண்பனாகக் கூடிய காலகட்டம். முதல் 15 நாட்களுக்கு ராசிநாதன், ராசி இரண்டும் குருவின் பார்வையில் இருப்பதால் உங்களுடைய இலக்கை நிர்ணயிக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். இளைய பருவத்தினருக்கான லட்சியத்தை உறுதி செய்து அதனுடன் பயணிப்பீர்கள். குழப்பத்தை நீக்கி தெளிவான முடிவை எடுப்பீர்கள்.

வெற்றி

மாணவர்களுக்கு இந்த வருடம் முழுவதுமே சிறப்பான ஆண்டாக இருக்கும். நினைப்பதை விட கூடுதல் மதிப்பெண்களை எடுக்கும் யோகம் உண்டாகும். நீட், இன்ஜினியர், யுபிஎஸ்சி, சிவில் தேர்வுகளுக்கான முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். மாணவர்களுக்கு எல்லாம் நினைத்தது பலிக்கக்கூடிய அற்புதமான யோகம் உண்டாகும்.

மன அழுத்தம் தீரும்

பெண்களுக்கு பெரிய நிம்மதி ஏற்படும். திருமணமான அனைத்துப் பெண்களுக்கும் எதை விரும்புகிறீர்களோ அவை அமையக் கூடிய அற்புதமான மாதமாக இந்த மாதம் அமையும். குடும்பத்தில் இருந்து வந்த, பணியில் இருந்து வந்த மன அழுத்தங்கள் எல்லாம் பரிபூரணமாக நீங்கும். வெளியிலும் வேலை, வீட்டிலும் வேலை என ஒருவித மன அழுத்தத்தில் இருந்து வந்த துலாம் ராசியினர் எல்லோருக்குமே மன அழுத்தத்தில் இருந்து வெளியில் வருவீர்கள்.

முன்னேற்றம்

கடன் தீரும். திட்டமிட்டு கடனை அடைப்பீர்கள். கடனை அடைப்பதற்கான முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள். பண வரவு நன்றாக இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள். நோய் தீரும் மாதம். நீண்ட நாட்களாக இருந்து வந்த நோய் பாதிப்புகளுக்கு உரிய மருத்துவம், மருத்துவ ஆலோசனை, மருந்துகள் கிடைக்கும். துலாம் ராசியினருக்கு அடுத்தடுத்து வரும் மாதங்கள் இன்னும் நன்மைகளை அள்ளித் தரும் மாதமாக இந்த ஆண்டு முழுவதும் இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+