திருப்பதி ஏழுமலையான் பக்தர்களுக்கு குட்நியூஸ் - 10,000 இலவச டிக்கெட்டுகள் நேரடியாக விநியோகம்
ஏழுமலையான் பக்தர்கள் இலவச தரிசன டிக்கெட்டுகளை, அலிபிரியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ், திருப்பதியில் உள்ள ஸ்ரீநிவாசம் தங்கும் விடுதியில் உள்ள டிக்கெட் கவுண்ட்டர்களிலும் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதி: ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் வசதிக்காக, திருமலையில் வரும் 16ஆம் தேதி முதல், நேரடி கவுண்ட்டர்களின் மூலம் பக்தர்களுக்கு நாள்தோறும் கூடுதலாக 10,000 இலவச தரிசன டிக்கட்டுகள் வழங்கப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இலவச தரிசன டிக்கெட்டுகளை, அலிபிரியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ், திருப்பதியில் உள்ள ஸ்ரீநிவாசம் தங்கும் விடுதியில் உள்ள டிக்கெட் கவுண்ட்டர்களிலும் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் ஓமிக்ரான் நோய்த் தொற்றின் தாக்கம் அதிகரித்ததைத் தொடர்ந்து, வழிபாட்டுத் தலங்களில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதே போல் திருமலையில் ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கும் இலவச தரிசனம் மற்றும் 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகளின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டு, டிக்கெட்டுகள் அனைத்தும் ஆன்லைனில் மட்டுமே வழங்கப்பட்டு வந்தன.

தற்போது கொரோனா நோய்த் தொற்றின் வேகம் அதிரடியாகக் குறைந்து வருவதால், கொரோனா கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளர்த்தப்பட்டு வருகிறது. இதனையடுத்து, திருமலையில் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச டிக்கெட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி வரும் 16ஆம் தேதி முதல் ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு நாள்தோறும் கூடுதலாக 10,000 இலவச தரிசன டிக்கெட்டுகளை திருமலையில் உள்ள டிக்கெட் கவுண்ட்டர்களின் மூலம் வழங்க திருப்பதி திருமலை தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
பக்தர்கள் இலவச தரிசன டிக்கெட்டுகளை, அலிபிரியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ், திருப்பதியில் உள்ள ஸ்ரீநிவாசம் தங்கும் விடுதி மற்றும் கோவிந்தராஜசுவாமி 2ஆவது சத்திரம் ஆகிய 3 இடங்களில் உள்ள டிக்கெட் கவுண்ட்டர்களிலும் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
இது பற்றி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திருப்பதி திருமலை தேவஸ்தான நிர்வாக அதிகாரி ஜவஹர் ரெட்டி, தேவஸ்தான அறங்காவலர் குழுவின் ஒப்புதலின் பேரில் கூடுதலாக 10,000 இலவச தரிசன டிக்கெட்டுகளை வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதே போல், திருப்பதியில் கட்டப்பட்டு வரும் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு ஒரு கோடி ரூபாய் மற்றும் ஒன்றரை கோடி ரூபாய் வரை நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு திருமலையில் உதயஸ்தமன சேவை டிக்கெட் ஒன்றும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. உதயஸ்தமன சேவை டிக்கெட் பெறும் பக்தர்கள், வருடத்தில் ஒரு நாள் கோயிலில் ஏழுமலையான் கோயிலில் நடைபெறும் அனைத்து விதமான சேவைகளையும் தரிசிக்க முடியும்.
நன்கொடையை ஆன்லைன் மூலம் செலுத்தி உதயஸ்தமன சேவை டிக்கெட்டுகளை பெறுவதற்குத் தேவையான தொழில்நுட்ப ஏற்பாடுகள் நிறைவடைந்து வரும் 16ஆம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வருகிறது. மேலும், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெறும் கட்டண சேவைகளில் பக்தர்கள் கலந்து கொள்வது பற்றி, இம்மாதம் நடைபெற இருக்கும் தேவஸ்தான அறங்காவலர் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications