Viruchigam Rasi Palan: விருச்சிகத்துக்கு ஆவணியில் காத்திருக்கும் அதிர்ஷ்டம்.. கோபம் மட்டும் வேண்டாம்

Subscribe to Oneindia Tamil

ஆவணி மாத பலன்கள்: அம்மனுக்குரிய விசேஷ மாதமான ஆடி மாதம் முடிந்து ஆவணி மாதம் தொடங்கப் போகிறது. இந்த ஆவணி மாதத்தில் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

ஆவணி மாத கிரக நிலை

எல்லா விதமான சுப காரியங்களை செய்யவும் மக்கள் காத்துக் கொண்டிருக்கும் மாதமாகும். ஆவணி மாதம் என்பது சூரிய மாதம். சூரியனுடைய வீடான சிம்மத்திற்கே சூரியன் வரக்கூடிய மாதம் தான் ஆவணி. கார்காலம், சிம்ம மாதம் என்று ஆவணி மாதம் அழைக்கப்படும். ஏற்கனவே சிம்மத்தில் கேது இருக்கிறார். 7 ஆம் இடத்தில் ராகு, 8 இல் சனி, 11 இல் குரு அமர்ந்திருக்கின்றனர். இந்த ஆவணி மாதத்தில் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

viruchigam-rasi-palan-what-kind-of-benefits-will-get-viruchigam-scorpio-rasi-people-during-the-mo

விருச்சிகம்

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு எதிர்பார்த்த அனைத்து சந்தோஷங்களும், காரியங்களும் நடக்கக்கூடிய காலகட்டம். பெருமாள் வழிபாடு செய்து வருவது அனுகூலத்தை ஏற்படுத்தும். வயிறு, கீழ் முதுகு, பாதம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகுந்த கவனம் தேவை. புதிய கெளரவம் ஏற்படும். கொடுத்த வாக்கை குடும்பத்திலும், வெளிவட்டாரத்திலும் காப்பாற்றக்கூடிய அதிஅற்புதமான அமைப்பு ஏற்படும்.

கோபம் வேண்டாம்

பிள்ளைகளுடன் கோபதாபத்தை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகள் வண்டி வாகனத்தில் செல்லும்போது மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். குலதெய்வத்தை மனதாரா வழிபடுவது, தினந்தோறும் தீபம் ஏற்படுவது குழந்தைகள் விஷயத்தில் இருந்து வந்த பாதிப்புகள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். தொழில், உத்தியோகம், வியாபாரம், புதிய முயற்சிகள் அனைத்தும் அனுகூலத்தை ஏற்படுத்தி தரும்.

நம்பிக்கை

அரசுத் துறையில் இருப்பவர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு மிகப்பெரிய ஏற்றமும், நம்பிக்கையும் பெறுவார்கள். பெருமாள் மந்திரங்களை உச்சரிப்பதும், ஜெபிப்பதும் மிகப்பெரிய நம்பிக்கை, யோகத்தை ஏற்படுத்தும். முதலீடுகளுக்கு குறைவிருக்காது. மாதாமாதம் குடும்பத்தில் இருப்பவர்களின் பெயரில் ஏதாவது முதலீடு செய்யத் தொடங்குவீர்கள்.

மாற்றம் முன்னேற்றம்

தொழில், வியாபாரம், உத்தியோகம் போன்றவற்றில் அனுகூலமும், நல்ல பலன்களும் கிடைக்கும். ஆவணி மாதத்தில் உத்தியோகம், படிப்பு, தொழில், வியாபாரம் சார்ந்த மாற்றங்கள் அனைத்துமே உங்களுக்கு ஏற்றத்தை ஏற்படுத்தும். இதனால், வரும் மாற்றங்களை மனதார ஏற்றுக் கொள்வது நல்லது. எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி ஏற்படும்.

பண வரவு

பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பண வரவு அதிகரிக்கும். வேலை, தொழில், வியாபாரம் என அனைத்திலும் நல்ல முன்னேற்றத்தையும், லாபத்தையும் காண்பீர்கள். மாற்றங்கள் நிறைந்த காலகட்டமாக இருக்கும். ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் மட்டும் கவனம் தேவை. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் காலகட்டமாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+