கும்பம், மீன ராசிக்கு நல்ல நேரம் ஆரம்பம்.. இனி தொட்டதெல்லாம் ஹிட்டு.. ஆனாலும் சிறிது கவனம்

Subscribe to Oneindia Tamil

வார ராசி பலன்: வைகாசி மாதம் ஜூன் 1 ஆம் தேதி வரையில் கும்பம், மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரத்திற்கான பலன்கள் குறித்து பார்க்கலாம். இரண்டு ராசிக்காரர்களுக்கும் இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். அந்த வகையில், இந்த வாரத்தில் கும்பம், மீன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

weekly-rasi-palan-kumbam-meenam-capricorn-pisces-people-will-get-lots-of-benefit-in-may-27-to-j

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு எல்லா விதத்திலும், ஏற்றம், அனுகூலம் உண்டாகும். ரத்தத்தில் பரவக்கூடிய தொற்று நோய்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். மற்றபடி நீங்கள் நினைத்த காரியங்கள் எல்லாம் நடக்கும். பயணங்களில் அனுகூலம் உண்டாகும். தொலைத்தூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். உறவினர்கள் விஷயத்தில் ஏற்றம் உண்டாகும்.

தாய் வழி உறவு, தந்தை வழி உறவு அவர்களுடைய தேக ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பெரிய சொத்துகளுக்காக காத்திருப்பவர்களுக்கு கட்டாயம் கிடைக்கும் காலகட்டமாக இருக்கும். முதலீடுகளுக்கு குறையிருக்காது. குறிப்பாக 60, 70 வயது உள்ளவர்களுக்கு நிறைய விஷயங்கள் அனுகூலத்தைப் பெற்றுத் தரும். மிகப்பெரிய நம்பிக்கையைப் பெற்றுத் தரும் வாரமாக இருக்கும்.

20 நிமிடமாவது உடற்பயிற்சி செய்வது மன நிம்மதியைத் தரும். தூக்கமின்மையால் பாதிக்கப்படுபவர்கள் கோளார் பதிகத்தை படிப்பது அற்புத பலன்களைத் தரும். சிவனுக்கும், பார்வதிக்கும் நல்லெண்ணெய் கொடுத்து வந்தாலே அதி அற்புதம் ஏற்படும். பார்வதிக்கு மட்டும் 7 எலுமிச்சை கொடுத்து ஒரு பழத்தை மட்டும் வாங்கி உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

தொழில் ரீதியாக அதிஅற்புதங்கள் காணப்படும். பதவி உயர்வில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கும். உத்தியோகத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். கும்பம் இருக்கும் வீட்டில் சுப காரியத் தடைகளில் இருந்து பாதிப்புகள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். யோக பலத்தை அதிமாகப் பெறக்கூடிய ராசிகளில் கும்ப ராசியும் ஒன்று. முதலீடுகளுக்கு குறைவிருக்காது.

எடுத்த காரியத்தில் ஜெயம் ஏற்படும். தாய் வழி உறவு, தந்தை வழி உறவு அனுகூலத்தை ஏற்படுத்தும். இழுபறியாக இருந்த நிலைமைகள் படிப்படியாக மாறுவதை கண்கூடாகப் பார்க்கலாம். கும்பத்துக்கு வாகன அமைப்பில் மாற்றங்களும், நினைத்த காரியங்களும் பயணங்களும் இனிதாக முடியும்

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு அபிராமி அந்தாதியைப் படிப்பது மிக மிக முககியம் 40, 54, 59, 75, 90 ஆவது பாடல்களைப் படிப்பது அற்புதத்தை ஏற்படுத்தும். விநாயகர் வழிபாடு, துர்கை வழிபாடு மனதில் இருந்து வந்த சங்கடத்தை நிவர்த்தி செய்யும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு அமைப்புகளில் அனுகூலமான அமைப்புகள் ஏற்படும்.

சனிக்கிழமை தோறும் எலுமிச்சை சாப்பாடு, எலுமிச்சை சாறு தானமாக கொடுப்பது சுப விரைய பிராப்தம் அதிகரிக்கும். குடும்பத்தில் அனுகூலம் காணப்படும். பிரிந்த தம்பதி ஒன்று சேரும் அமைப்பு ஏற்படும். தேக ஆரோக்கியத்தில் முதுகுத் தண்டுவடம், கழுத்துப் பகுதி, கழிவுப் பாதை, கால் பிரச்சனைகள், பூச்சிக் கடி பிரச்சனைகளில் கவனமாக இருப்பது நல்லது. பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பண வரவு நன்றாக இருக்கும்.

வாகன அமைப்பு அனுகூலத்தை ஏற்படுத்தும். எந்தப் பயணங்கள் வந்தாலும் அதனை எடுத்துக் கொள்வது நல்லது. பிள்ளைகள் விஷயத்தில் கோபதாபத்தை தவிர்ப்பது நல்லது. அவர்களின் தேக ஆரோக்கியத்தில் அதீத கவனமாக இருக்க வேண்டும். முதலீடுகளுக்கும் குறைவிருக்காது. தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு விஷயங்களில் ஏற்றம், சந்தோஷம், அனுகூலம், நம்பிக்கையும் ஏற்படும் அருமையான காலகட்டம். தாய் வழி, தந்தை வழி உறவு விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கையாக இருப்பது நல்லது. குடும்ப உறவுகளிடம் வெள்ளைக் கொடி காட்டிச் செல்வது மிகவும் நல்லது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+