கும்பம், மீன ராசிக்கு கொட்டும் அதிர்ஷ்டம்.. பிரச்சனைகளுக்கு எல்லாம் எண்டு கார்டு.. கொஞ்சம் கவனம்

Subscribe to Oneindia Tamil

வார ராசி பலன்: வைகாசி 5 முதல் 11 வரையிலான மே 19 முதல் 25 ஆம் தேதி வரை கும்பம் மீனம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரத்திற்கான பலன்கள் குறித்து பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். அந்த வகையில், இந்த வாரத்தில் கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Weekly rasi palan Lucky zodiac signs

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு ரத்த பந்த உறவுகள், தாய் வழி உறவுகளை சிறிது கவனமாகப் பார்த்துக் கொள்வது நல்லது. பிள்ளைகளிடத்தில் கோபதாபத்தை தவிர்க்க வேண்டும். தொலைத்தூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வருவது ஆனந்தத்தையும், பேரானந்தத்தையும் தரும். லாபமும், சந்தோஷமும் மிகப்பெரிய ஏற்றத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்திக் கொடுக்கும்.

பைரவர் வழிபாடு நம்பிக்கையான அமைப்பையும், பைரவர் காயத்ரி எதிர்பார்த்த நல்ல விஷயத்தை நடத்திக் கொடுக்கும். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை மகிழ்ச்சியைத் தரும். முதலீடுகளுக்கு குறைவிருக்காது. வேலையாட்களால் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்திலும் பரிபூரண நிவர்த்தி ஏற்படும். பிள்ளைகள் வாழ்க்கையில் இதுவரை இருந்து வந்த ஏதாவதொரு குறை ஒன்று நிவர்த்தியாகும்.

அபிராமி அந்தாதியில் இருந்த 40, 59, 75, 90 ஆவது பாடல் எப்போதும் கேட்பதும், சொல்வதும் சகலவிதத்தில் நன்மையை ஏற்படுத்தி தரும். கேது ஏழாம் இடத்தில் இருப்பதால் கணவன், மனைவிக்குள் தேக ஆரோக்கியத்திலும், சண்டை சச்சரவுகளிலும் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. 5 இல் உள்ள குரு யோக பலன்களைத் தரப் போகிறார்.

லாப ஸ்தானத்தை குரு பார்ப்பதால் பணத்திற்கு உள்ள பாதிப்புகள் அனைத்தும் படிப்படியாகக் குறையும். குரு உங்கள் ராசியைப் பார்ப்பதால் கும்ப ராசியினர் உள்ள வீட்டில் நல்ல காரியங்கள் அத்தனையும் நடக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு தினமும் தோப்புக்கரணம் போடுவது நல்லது. வேர்வை வரக்கூடிய பயிற்சிகளை செய்வது நல்லது. எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் அனுகூலத்தை தரும். தொழில் ரீதியாக வீடு மாற்றம், மனை மாற்றம், உத்தியோக மாற்றம் நிச்சயமாக நடக்கும். அடிமைத் தொழிலில் இருந்து தனிப்பட்ட தொழில் தொடங்குவது அனுகூலத்தை ஏற்படுத்தும்.

திடீர் முடிவுகள் ஆச்சரியத்தக்க அளவுக்கு முன்னேற்றத்தை ஏற்படுத்தும். இழுபறியாக இருந்த நிலைமை படிப்படியாக மாறும். தாய் வழி உறவு, தந்தை வழி உறவு அனுகூலத்தை ஏற்படுத்தும். உத்தியோகத்தில் சிறப்பான ஏற்றம் நன்மையை ஏற்படுத்திக் கொடுக்கும். நீண்டநாட்களாக இருந்த சிக்கல் படிப்படியாகத் தீர்வதை கண்கூடாகப் பார்க்கலாம்.

உத்தியோகத்தில் பெரிய மாற்றங்கள் காணப்படும். நீண்டநாட்களாக உத்தியோகம், படிப்பு, வியாபாரத்தை தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு அடுத்தடுத்து நல்ல செய்திகள் கிடைக்கும். பழைய கடன்களை தீர்த்து முடிப்பீர்கள். புதிய கடன்கள் கிடைக்கும். கிருஷ்ணர் வழிபாடு, நாராயணியத்தின் 100 ஆவது பாடலை கேட்பது அனுகூலத்தை உண்டாக்கும்.

திடீர் அலர்ஜி வருவது, வயிற்றில் உபத்திரவம் வருவது, உணவு செரிமானமாகாமல் இருக்கும் பிரச்சனைகளை கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். மற்றபடி அனைத்து விஷயங்களுமே மீன ராசியினருக்கு ஏற்றத்தையும், அனுகூலத்தையும் கொடுக்கும். உத்தியோகத்தில் இருக்கும் சிக்கல் தருவது மன மகிழ்ச்சியைத் தரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+