மீன ராசிக்கு குருவின் அருளால் மிகப்பெரிய ஜாக்பாட்.. தொட்டதெல்லாம் துலங்கும் யோகம்.. குஷியோ குஷி

Subscribe to Oneindia Tamil

வார ராசி பலன்: ஆனி மாதம் 9 முதல் 15 ஆம் தேதி வரையிலான அதாவது ஜூன் 23 முதல் 29 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மீன ராசி பலன்கள் குறித்து பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

2025 ஆம் ஆண்டில் சனி, குரு, ராகு கேது ஆகிய முக்கியமான கிரகப் பெயர்ச்சிகள் நடைபெற்றுள்ளன. ஜூன் 28 ஆம் தேதி சுக்கிரப் பெயர்ச்சியும் நடைபெறவுள்ளது. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

Weekly rasi palan Meenam Lucky zodiac signs

கிரகப் பெயர்ச்சியானது சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். அந்த வகையில், இந்த வாரத்தில் ஜூன் 23 முதல் 29 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் மீன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மீன ராசி பலன்

மீன ராசிக்காரர்களுக்கு பெருமாள், கிருஷ்ணர், நரசிம்மர் வழிபாடு என விஷ்ணு சம்பந்தப்பட்ட வழிபாடுகளைச் செய்து வருவது வாழ்க்கையில் முன்னேற்றத்தையும், வளர்ச்சியையும் ஏற்படுத்தும். தொழில் அபிவிருத்தி உண்டாகும். அடுத்தடுத்து ஏற்றங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். சுபகாரியங்கள் அடுத்தடுத்து நடக்கும்.

சுபகாரியங்கள்

குடும்பத்தில் சுபகாரியங்கள் நிச்சயமாக நடக்கும். சுப விரையங்களைச் செய்து மகிழ்வீர்கள். புதிய கடன்கள் கிடைப்பதற்கான வாயப்புள்ளது. முதலீடுகளுக்கு எந்த வித குறையும் ஏற்படாது. ஆரோக்கியத்தில் ரத்தத்தில் பரவக்கூடிய தொற்று நோய்கள், ரத்த அழுத்தம், ரத்தத்தில் பரவும் தொற்று நோய்கள், கொழுப்பு, சர்க்கரை தொடர்பான விஷயங்களில் கவனமாக இருப்பது நன்மையை ஏற்படுத்தும்.

தொட்டதெல்லாம் ஜெயம்

தொழில் சார்ந்த விஷயங்களில் அனுகூலம் ஏற்படும். நம்பிக்கை பிறக்கும். சனிக்கிழமை தோறும் மதிய வேளைகளில் சாப்பாடு, எலுமிச்சை ஊறுகாயை தானமாகக் கொடுப்புது அற்புதத்தை ஏற்படுத்தும். எடுத்த காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். கோளார் பதிகத்தை தினந்தோறும் சொல்லி வருவது தடைகள் அனைத்தையும் பரிபூரணமாக விலகச் செய்யும்.

வழிபாடு

தெய்வத்தின் அருள், மகான்கள் தரிசனம் கிடைக்கும் காலகட்டம். தாய் வழி, தந்தை வழி உறவுகளுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. பெற்றோர்,பெரியோர், உறவினர்களின் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது. அவர்கள் தொலைதூரப் பயணங்கள் மேற்கொள்ளும் போது குலதெய்வத்தை வழிபாடு செய்வது நன்மையைத் தரும்.

தொழிலில் முன்னேற்றம்

உங்கள் ராசிக்கு குருவின் பார்வை தொழில் ஸ்தானத்தில் விழுவதால் எடுக்கும் முடிவுகள் எல்லாம் நன்மையையும், முன்னேற்றத்தையும் தரும். படிப்பு, உத்தியோகம், தொழிலில் இருந்த தடைகள் அனைத்தும் நீங்கும். வளர்ச்சியைத் தரும் காலகட்டமாக இருக்கும். இதனைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+