மிதுனம், கடக ராசிக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும் தேவதை.. பெரிய மாற்றம் வரப்போகுது
வார ராசி பலன்: வைகாசி 5 முதல் 11 வரையிலான மே 19 முதல் 25 ஆம் தேதி வரை மிதுனம், கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரத்திற்கான பலன்கள் குறித்து பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். அந்த வகையில், இந்த வாரத்தில் மிதுனம், கடக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை பிரச்சனைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். சுப விரையங்கள் ஏற்படும். அனுகூலங்கள் காணப்படும். புதிய பொறுப்புகள், புதிய உத்தியோக மாற்றங்கள் வரும். உத்தியோகத்தில் ஏற்றம் உண்டாகும். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். தாய் வழி உறவு, தந்தை வழி உறவு மேன்மை அடையும். குடும்பத்தில் மிதுன ராசிக்காரர்கள் இருந்தாலே சுப விரையம் நடக்கும்.
வீடு கட்டுவது, புனரமைப்பது போன்றவற்றை செய்து மகிழ்வீர்கள். எடுத்த காரியத்தில் ஜெயம் ஏற்படும். தந்தை வழி உறவுகளுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. தாய் வழி உறவுகளுடன் மனஸ்தாபத்தை தவிர்ப்பது நல்லது. உறவுக்காரர்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. மிதுன ராசிக்காரர்களுக்கு தனிப்பட்ட முறையில் மனக் குழப்பங்கள் அனைத்தும் நீங்கும்.
தெய்வீக தரிசனங்கள், குருமார்க்க தரிசனங்கள் ஏற்படும். சூரியன் 12 இல் இருப்பதால் விரையங்கள் ஏற்படக்கூடிய காலகட்டமாக இருக்கும். விலையுயர்ந்த பொருள்களை பத்திரமாக வைத்துக் கொள்வது நல்லது. 3 ஆம் அதிபதி 12 இல் இருப்பதால் மாற்றங்களைச் செய்வதற்கு சரியான நேரமாக இருக்கும். மேலதிகாரிகள் விஷயத்தில் அவர்கள் சொல்வதற்கு நிதானமாக பதில் சொல்வது நல்லது. அவர்களிடம் கோபத்தைக் காட்டாமல் இருப்பது நல்லது.
யோகம், அனுகூலம், ஜெயம் உண்டாகும். எடுத்த காரியங்களில் வெற்றியைக் காண்பீர்கள். உத்தியோகம், வியாபாரம், படிப்பு சம்பந்தப்பட்ட விஷயத்தில் அனுகூலங்கள் காணப்படும். இடமாற்றம், வீடு மாற்றம், மனை மாற்றம், உத்தியோக மாற்றம், தொழில் மாற்றம் ஏற்படும். மாற்றங்கள் அனைத்தும் வெற்றியைத் தரும். தைரியமாக ரிஸ்க் எடுக்கலாம்.
சிறு சிறு கஷ்டங்கள் வந்தாலும் பெரிய அளவில் அனுகூலங்கள் ஏற்படும். உழைப்புக்கான தீர்வுகள் வந்து சேரும். மிதுனத்துக்கு மாற்றத்துக்கான வாரமாக அமையும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு லாபம், அனுகூலம் உண்டாகும். மன அழுத்தம் தீரும். வயிறு தொடர்பான பிரச்சனைகளில் கவனம் தேவை. அடிவயிறு, கழிவுப் பாதை, கீழ் முதுகு தண்டுவடம் பகுதியில் ஏற்படும் பிரச்சனைகளை சரியாகப் பார்த்துக் கொள்வது நல்லது. துர்கை வழிபாடு அருமையான பலன்களைத் தீரும். பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள்.
எதிரிகள் விஷயத்தில் இருந்து வந்த பதட்டங்கள் குறையும். அடுத்தடுத்து தொட்ட காரியங்கள் அனைத்தும் துலங்கும். தொலைதூரத்தில் இருந்து நன்மைகள் ஏற்படும். தாய் வழி உறவு, தந்தை வழி உறவு மேன்மை அடையும். எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் ஏற்படும். வியாபாரத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். தொழிலில் அதி அற்புதம் ஏற்படும். பூமி சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல ஏற்றம் காணப்படும்.
வாகனங்களில் மாற்றம் காணப்படும். மனதில் அனுகூலம் அமைப்பு நிலவும். இழுபறியாக இருந்த நிலைமை மாறும், உத்தியோகம். தொழில், வியாபாரம், படிப்பு என அனைத்திலும் ஏற்றம் ஏற்படும். எதிர்பார்த்த அனைத்து விஷயங்களும் நடக்கும். நீண்ட நாட்களாக இருந்த பாதிப்புகள் அனைத்திலும் நிவர்த்தி உண்டாகும்.
சமுதாயத்தில் கெளரவம் உண்டாகும். கொடுத்த வாக்கை குடும்பத்திலும், வெளிவட்டாரத்திலும் காப்பாற்றக்கூடிய இனிமையான சூழல் ஏற்படும். முருகன், துர்கையை வழிபடுவது அமோகமான பலன்களைத் தரும். மேலதிகாரிகளின் நம்பிக்கைக்குப் பாத்திரம் ஆவீர்கள். பதவி உயர்வுகளில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கும்.
-
Magaram: அடித்தாடும் மகர ராசி.. ஜாக்பாட் யோகம்.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம்?.. இந்த வார பலன்.. முழு விவரம் இதோ -
Dhanusu: தனுசு ராசிக்கு அள்ளிக் கொடுக்கும் குரு.. ராஜா வாழ்க்கை வாழ போறீங்க -
Kumbam: வெற்றியை குவிக்கும் கும்ப ராசி.. இந்த விஷயங்களில் எச்சரிக்கையாக இருங்க..! -
Meenam: குரு சுக்கிரன் அருளால் மீன ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமான மாற்றம் காத்திருக்கு -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications