துலாம், விருச்சிக ராசிக்கு அதிர்ஷ்டமும் இருக்கு.. ஆபத்தும் இருக்கு.. ரொம்ப கவனம் கவனம்
வார ராசி பலன்: வைகாசி 5 முதல் 11 வரையிலான மே 19 முதல் 25 ஆம் தேதி வரை துலாம், விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரத்திற்கான பலன்கள் குறித்து பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். அந்த வகையில், இந்த வாரத்தில் துலாம், விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு எல்லாவற்றிலும் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். பயணங்கள் மேற்கொள்வீர்கள். எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் நடக்கும். வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். யோக பலன்கள் அதிகரிக்கும். தொழில் ரீதியாக, உத்தியோகம் ரீதியாக, வியாபாரம் ரீதியாக படிப்படியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
ராகவேந்திரர் வழிபாடு தைரியம் மற்றும் நம்பிக்கையையும் கொடுக்கும். கண், தலைவலி, சளி, மன யோசனை தொந்தரவு சம்பந்தப்பட்ட விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மற்றபடி அனைத்துமே ஏற்றமும், நம்பிக்கையையும் ஏற்படுத்தும். இழுபறியாக இருந்து வந்த நிலைமைகள் அனைத்தும் படிப்படியாக மாறுவதை கண்கூடாகப் பார்க்கலாம்.
தொடர்ச்சியாக இருந்து வந்த கஷ்டங்கள் விலகக்கூடிய நிலை ஏற்படும். எடுத்த காரியத்தில் ஜெயம், அனுகூலம், நம்பிக்கை ஏற்படும். நீண்டநாட்களாக இருந்த பிரச்சனைகள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். கையெழுத்திடுவதற்கு முன்பு யோசித்துப் பார்த்து செய்வது நம்பிக்கையான சூழ்நிலையையும், சந்தோஷமான அமைப்பையும் ஏற்படுத்தும்.
மேலதிகாரிகள் விஷயங்களில் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது. வியாபாரம், தொழில், உத்தியோகம், படிப்பு தொடர்பான விஷயங்கள் உங்களுக்கு எதிராகச் செல்வதற்கான வாய்ப்புள்ளது. எட்டாம் இடத்தில் சூரியன் இருப்பதால் சிறிய வாக்குவாதம் கூட வம்பு, வழக்கு என்று கொண்டு சென்றுவிடும். உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்ப்பது நல்லது. வேலையாட்களால் கூட தொந்தரவு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு துணை விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். ஜோடியுடன் இருக்கக்கூடிய தெய்வங்களைச் சென்று வழிபடுவது நல்ல பலன்களைத் தரும். குடும்பத்தில் அந்நியர் தலையீடு, பிறர் குடும்பத்தில் உங்கள் தலையீடு கூடவே கூடாது. வயிறு, கழுத்துப் பகுதியில் பிரச்சனை ஏற்படும். வண்டி, வாகனத்தில் வித்தைகள் காட்டாமல் இருப்பது நல்லது..
எதிரிகளுடைய பிரச்சனைகளால் பாதிப்பு ஏற்படும். பெரிய அளவு வெற்றிகள், பெயர், புகழ் ஏற்படும். அனுகூலம் உண்டாகும். கெளரவம் ஏற்படும். திடீரென நீங்கள் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் தோல்வியில் முடிவதற்கான வாய்ப்புள்ளது. எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் கைகொடுக்கக்கூடிய நல்ல காலகட்டமாக இருக்கும். கோபதாபமில்லாமல் இருப்பது நல்லது. தொழில் ரீதியாக முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
எடுத்த காரியத்தில் ஜெயம் ஏற்படும். புதிய முதலீடுகளை செய்து மகிழ்வீர்கள். சுபகாரிய தடைகள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். சுப காரியங்களை மகிழ்ச்சியாக செய்து மகிழ்வீர்கள். சுப விரைய பிராப்தம் அனுகூலத்தை ஏற்படுத்தும். துணையின் உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பயணங்கள் சமயத்தில் மிகுந்த கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்.












Click it and Unblock the Notifications