ஜூலை மாதத்தில் மீன ராசிக்கு நடக்க போகும் சூப்பர் மாற்றம்.. ஜென்ம சனியிலும் காத்திருக்கும் அதிர்ஷ்டம்
மாத பலன்: ஜூன் மாதம் நிறைவடைந்து ஜூலை மாதம் தொடங்கவுள்ளது. இந்த ஜூலை மாதத்தில் மீனம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
ஒன்பது கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகப் பெயர்ச்சிகளானது ஒவ்வொரு ராசியிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த மாதத்தில் ரிஷப ராசியில் சுக்கிரனும், மிதுனத்தில் குருவும், சூரியனும் இணைந்திருக்கின்றனர். கடகத்தில் புதனும், சிம்மத்தில் கேதுவும், செவ்வாயும் உள்ளனர்.

கும்பத்தில் ராகு பகவானும், மீனத்தில் சனி பகவானும், மாதத் தொடக்கத்தில் சிம்ம ராசியில் சந்திர பகவானும் உள்ளனர். இந்த மாதத்தின் 17 ஆம் தேதி சூரியன் கடக ராசிக்கு வருகிறார். கடக ராசியில் இருக்கும் புதன் பகவான் மிதுன ராசிக்குச் செல்கிறார். 26 ஆம் தேதி சுக்கிர பகவான் மிதுன ராசிக்கும், 29 ஆம் தேதி சிம்மத்தில் இருக்கும் செவ்வாய் துலாம் ராசிக்குள் வருகிறார்.
அந்த வகையில், இந்த ஜூலை மாதத்தில் மீன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், தெய்வ வழிபாடுகள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
மீனம் ராசி பலன்
மீனம் ராசிக்காரர்களுக்கு குரு பகவான் கேந்திர ஸ்தானத்தில் இருக்கிறார். ராசியில் சனி அமர்ந்து கொண்டிருக்கிறார். ஏழரை சனியில் ஜென்ம சனியாக இருந்துகொண்டு அலைச்சல், மந்தம், சோம்பேறித்தனம், முடிவெடுப்பதில் குழப்பம், மனதில் குழப்பங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கும். ஏதாவதொரு இடத்தில் சிக்கிக் கொண்டு அதை நினைத்து வருந்திக் கொண்டிருப்பீர்கள். மீன ராசி உத்திரட்டாதி, பூராட்டாதி நட்சத்திரத்தில் இருப்பவர்களுக்கு அதிகமான குழப்பம் இருக்கும்.
சுறுசுறுப்பு பெறுவீர்கள்
ஜூலை 13 ஆம் தேதிக்குப் பிறகு சனி வக்கிரமடைவதால் இதுவரை இருந்த குழப்பங்கள் எல்லாம் நீங்கி தெளிவான முடிவெடுப்பீர்கள். கிடப்பில் போட்டிருந்த விஷயங்களை எடுத்துச் செய்து சுறுசுறுப்பாக முடித்து வெற்றி பெறுவீர்கள். மாற்றத்துக்கான நேரமாக இருக்கும். வேலை மாற்றம், உத்தியோகம் மாற்றம், இடமாற்றம், ஊர் மாற்றம், பதவி உயர்வு என அனைத்து மாற்றங்களும் கிடைக்கும்.
சிவராஜ யோகம்
10 ஆம் அதிபதியாக இருக்கக்கூடிய குரு பகவான் 10 ஆம் இடத்தைப் பார்ப்பதால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சூரியனும், குருவும் இணைவதால் சிவராஜ யோகத்தை உங்களுக்கு கொடுக்கப் போகிறது. அதிகாரம், நிர்வாகம் கிடைக்கும். தலைமைப் பண்பு அதிகரிக்கும். கடந்த சில மாதங்களாக செவ்வாய் பகவான் நீச்ச தன்மையில் இருந்ததால் பணப் பற்றாக்குறையை சந்தித்து வந்திருப்பீர்கள். செவ்வாய் தற்போது 6 ஆம் இடத்தில் அமர்ந்திருப்பதால் பண வரவு உண்டாகும்.
தொழில் வருமானம்
தனக்காரகன் தொழில் ஸ்தானத்தையும், 12 ஆம் இடத்தையும் பார்ப்பதால் முதலீடு செய்யும் காலகட்டமாக இருக்கும். வெளிநாடு மூலம், தொழில் மூலம் பணம் வரும். கூடுதல் தொழில் செய்து வருமானத்தைப் பெருக்குவீர்கள். மறைந்திருந்த பணங்கள் அனைத்தும் வந்து சேரும். லாட்டரி, பங்குச்சந்தை மூலம் பணம் வரும். பாதிப்புகளையும், கஷ்டங்களையும் மட்டுமே சந்தித்து வரும் நபர்களுக்கு அந்த நிலை மாறும்.
கடன் தீரும்
கடன்களை தீர்க்கும் தன்னம்பிக்கை உணர்வு அதிகமாகும். எதிரிகள் உங்களை விட்டு விலகிப் போவார்கள். நெடுநாட்களாக உடல்நலம் சார்ந்த விஷயங்களில் குறைபாடு உள்ள மீன ராசியினர் இந்த மாதம் அதிலிருந்து தேர்ச்சி பெறும் யோகம் உண்டாகும். வலிகள் நிவர்த்தியாகும். நல்ல மருத்துவர்கள், மருத்துவ ஆலோசனைகள் உங்களுக்கு கிடைக்கும்.
வெளிநாடு யோகம்
12 ஆம் இடத்தை ராகுவை குரு பார்ப்பதால் வெளிநாடு, வெளிமாநிலம் செல்லும் யோகம் உண்டாகும். விசா, வெளிநாட்டு வேலைவாய்ப்பு, வெளிநாடு தொடர்பான விஷயங்கள் சிறப்பு பெறும். வெளிநாட்டு நிறுவனங்களில் இங்கிருந்தே வேலை செய்யும் யோகம் உண்டாகும். புதிய நண்பர்கள் உங்களுக்கு கிடைப்பார்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். இதுவரை இருந்து வந்த அனைத்து தடைகளும் நீங்கும்.
மாணவர்கள்
5 ஆம் இடத்தில் புதன் இருப்பதால் மாணவர்களுக்கு படிப்பில் நல்ல முன்னேற்றத்தை தரும். அவர்களுடைய ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். மந்தமாக இருக்கும் குழந்தைகள் இனி வேகமெடுக்க ஆரம்பிப்பார்கள். மதிப்பெண்கள் நன்றாக உயரும் காலகட்டமாக இருக்கும். வெளிநாட்டில் உயர்கல்வி படிப்பவர்களுக்கு வெற்றி உண்டாகும். புதன் பகவான் வக்கிரமாவதால் புதன்கிழமைதோறும் பெருமாளைச் சென்று வழிபடுவது அனைத்து விதமான பாக்கியங்களையும் அள்ளிக் கொடுக்கும்.
-
Simmam: ஜூன் 15க்கு பிறகு சிம்மத்தின் வாழ்க்கையில் பெரிய மாற்றம்!.. குரு பார்வையால் வரும் அதிர்ஷ்டம் -
ராஜயோகம் பெறும் கடக ராசி.. ஜூன் மாதத்தில் அடிக்கும் லக்கி ஜாக்பாட் -
Mithunam: சிக்ஸர் அடிக்கும் மிதுன ராசி.. அள்ளிக் கொடுக்கும் கிரகங்கள்.. யோக காலம் -
ஜூன் மாத பலன்: மேஷ ராசிக்கு ஜூனில் வரப்போகும் சூப்பர் மாற்றம்.. நினைத்தது நிறைவேறும் யோகம் -
ஜூன் மாத பலன்: ரிஷப ராசி வாழ்க்கையில் ஏற்பட போகும் திருப்பம்.. தூக்கிவிடும் சுக்கிரன் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications