தங்கம் அணிவதால் அதிர்ஷ்டம் பெறும் ராசியினர் யார்.. எந்த ராசியினர் அணியக் கூடாது - முழு விவரம்
Gold Secrets: தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இருப்பினும் தங்க நகை மீதான ஆர்வம் இன்னும் மக்கள் மத்தியில் குறையவில்லை. உலகில் உள்ள அனைத்து மக்களாலும் விரும்பக்கூடிய தங்க நகைகளை அணிவதால் அதிர்ஷ்டம் பெறும் ராசியினர் யார், எந்தெந்த ராசியினர் தங்கத்தை அணியக் கூடாது, தங்கத்தை யார் எல்லாம் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
உலகளவில் அனைத்து மக்களாலும் தங்கம் நகைகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. தங்கத்தை சிலர் அழகுக்காகவும், ஆடம்பரத்துக்காகவும், அதிர்ஷ்டத்துக்காகவும் அணிகின்றனர். இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக அளவில் தங்க நகைகள் மக்களால் விரும்பப்படுகின்றன. பொதுவாக தங்கத்திற்கு ஆன்மீக சக்திகளை ஈர்க்கும் தன்மை உள்ளதோடு, தீய சக்திகளையும் அண்டவிடாது என்பதால் பெரும்பாலானோர் தங்க நகைகளை விரும்புகின்றனர்.

மகாலட்சுமியின் அம்சம்
இந்துக்களைப் பொருத்தவரை தங்கம் என்பது மகாலட்சுமியின் அம்சம் என்று கருதப்படுகிறது. அதனால் தான் மங்கள நிகழ்வுகள் அனைத்திலும் தங்கம் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன. எல்லா மக்களாலும் விரும்பப்படும் ஆபரணமாக தங்கம் இருந்தாலும், தங்க நகை எல்லோருக்கும் பொருந்துமா என்றால் இல்லை. பெரும்பாலானோருக்கு தங்க நகைகள் அதிர்ஷ்டத்தை தந்தாலும், ஒரு சிலருக்கு தங்கத்தை அணிவதால் பிரச்சனைகள் மட்டுமே ஏற்படும்.
மவுசு குறையாத தங்கம்
எவ்வளவு விலை உயர்ந்த கற்கள், உலோகங்கள் வந்தாலும் இன்று வரை தங்கத்திற்கான மவுசு என்பது குறையவில்லை. இந்தியர்களைப் பொருத்தவரை தங்கம் என்பது மிகப்பெரிய முதலீடாகவும் பார்க்கப்படுகிறது. தங்கத்துடன் பலவிதமான ராசிக் கற்களைப் பயன்படுத்தும் பழக்கம் எல்லா மதத்தினரிடமும் உள்ளது. அமைதி, மகிழ்ச்சி, அதிர்ஷ்டம், ஆன்மீக அமைதி உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக மக்கள் பயன்படுத்துகின்றனர்.
அந்த வகையில், தங்கம் அணிவதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள், எந்தெந்த ராசியினர் தங்கத்தை அணியக் கூடாது, எப்படி எல்லாம் தங்கத்தைப் பயன்படுத்தக் கூடாது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.தங்கத்தை தலைக்கு அடியில் வைத்து தூங்குவதை தவிர்ப்பது நல்லது.
யாரெல்லாம் தங்கத்தை தவிர்க்க வேண்டும்
வயிற்றில் பிரச்சனை அல்லது உடல் பருமன் பிரச்சனை இருந்தால் தங்கத்தை தவிர்ப்பது நல்லது.
தங்கம் உஷ்ணத்தை ஏற்படுத்தும் என்பதால் அதிகம் கோபப்படுபவர்கள் தங்கம் அணிவதை கட்டாயமாக தவிர்ப்பது நல்லது.
உங்கள் ஜாதகத்தில் குரு பகவான் உச்சம் பெற்றிருந்தால் தங்கம் அணிவதை தவிர்ப்பது நல்லது.
தங்கத்தை தலைக்கு அடியில் வைத்து தூங்குவதை தவிர்ப்பது நல்லது.
கனவில் தங்கம் வந்தால்..
இரும்பு, நிலக்கரி, சனி பகவானுக்குரிய பொருள்களை மேற்கொள்பவர்கள் தங்கத்தை அணிவதை தவிர்க்க வேண்டும்.
கர்ப்பிணிகள், வயதான பெண்கள் தங்கத்தை தவிர்த்துக் கொள்வது நன்மை பயக்கும்.
பணம் அல்லது தங்கத்தை கனவில் கண்டால் நல்லது கிடையாது. முகம், தோல் வியாதிகளால் பாதிக்கப்படுவதை இது குறிக்கும்.
தங்கத்தை கனவில் கண்டால் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு பணம் கிடைக்கும்.
பண்டைய கால தங்க நகைகளை கண்டால் உங்கள் வேலை அல்லது தொழிலில் பிரச்சனை ஏற்படும்.
இப்படி அணியக் கூடாது
இடுப்புக்கு கீழ் தங்கத்தை அணிந்தால் துரதிர்ஷ்டத்தையும், பண இழப்பையும் சந்திக்க நேரிடும்.
தேவைப்பட்டால் மட்டுமே தங்கத்தை இடது கையில் அணிய வேண்டும்.
தங்கத்தை அணிந்து கொண்டு அசைவம், மருந்து சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
நெருக்கமானவர்கள், பிரியமானவர்களுக்கு தங்கத்தை பரிசாக அளிக்கலாம்.
அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்
மேஷம், கடகம், சிம்மம், தனுசு ராசிக்காரர்களுக்கு தங்கம் மிகவும் ஏற்றதாக இருக்கும். மங்களகரமான பலன்களைக் கொடுக்கும்.
விருச்சிகம், மீனம் ராசிக்காரர்களுக்கு கலவையான பலன்களைத் தரும்.
தங்கத்தால் சிக்கல்
மிதுனம், கன்னி, கும்ப ராசியினருக்கு சிக்கலை உருவாக்கும்.
துலாம், மகர ராசிக்காரர்கள் தங்கம் அணிவதைத் தவிர்ப்பது நல்லது.












Click it and Unblock the Notifications