"யாரு ப்ரீத்தி இது?".. நிலவுக்கு நெருப்பென்று பெயர் (5)
- சுதா அறிவழகன்
வாசலில் அம்மா..
"யாரு ப்ரீத்தி இது..."
"இ..இது.. என்னோட பிரண்ட்மா.. சுனில்.. இங்கதான் பக்கத்துலதான் வீடு.. ஆக்சிடன்ட் கேள்விப்பட்டு வந்து.. பார்க்க வந்தார்"
"ஆமாங்கம்மா.. வணக்கம்மா.. என் பேர்தான் சுனில்.. ஆமா.. நான்தான் சுனில்"

(அடேய் நான்தான் இன்ட்ரோ கொடுத்துட்டேன்ல.. நீ வேற ஏன் உள்ள புகுந்து நசநசங்குற..ப்ரீத்தியின் மைன்ட் வாய்ஸ்.. சுனிலின் மண்டையில் கொட்டியது)
"வணக்கம் தம்பி.. உக்காருங்க.. " சொல்லி விட்டு, வீட்டிலிருந்து கொண்டு வந்த சாப்பாட்டை எடுத்து டேபிளில் வைத்தார் அம்மா.
"டாக்டர் வந்து பார்த்தாரா ப்ரீத்தி.. எப்ப வீட்டுக்குப் போகலாமாம்"
"இனிதான் வருவார்மா.. இன்னும் வரலை.."
சுனிலுக்கு ரொம்ப சங்கடமாக இருந்தது.. அடுத்து என்ன பேசுவது.. எப்படி தொடருவது என்று தெரியவில்லை.. இருந்தாலும் "மாமியாரை" அட்ராக்ட் பண்ணனும்னு துடிப்பா இருந்தது.. வாய் வேற நமநமங்குதே.. பேசுடா சுனிலு.. உளறாம பேசு..
"ஏம்மா உங்க வீடும் பக்கத்தில்தானா இருக்கு"
"என்ன தம்பி கேட்டீங்க.. ஆமாங்க. பக்கம்தான்.. நீங்க என்ன பண்றீங்க, வீடு எங்க"
"இங்கதாம்மா பக்கத்துலதான்,, மயிலாப்பூர்தான்.. நான் வேலை பார்க்கிறேன்.. பிரைவேட் கம்பெனில மேனேஜரா இருக்கேன்.."
"ஓ நல்லதுப்பா.. சரி இருங்க.. மாத்திரை வாங்க போயிருந்தேன்.. பாக்கி சில்லறை தரலை அந்தப் பொண்ணு.. போய் பார்த்துட்டு வந்துர்றேன்.. இல்லாட்டி மறந்துருவாங்க.. நீங்க பேசிட்டிருங்க.. வந்துர்றேன்"
அப்பாடா.. சூப்பர்.. இப்படித்தான் இருக்கணும் குட் மாமியார்.. குதூகலித்தான் சுனில் மனதுக்குள்.. அதே வேகத்தில் ப்ரீத்தியிடம் திரும்பினான்.. "ஏங்க.. நிஜமாவே லவ் பண்றீங்களா என்னை"
"யாரு உங்களையா.. இல்லையே.. நான் எப்ப அப்படிச் சொன்னேன்"
"ஹலோ எங்கம்மாவை அத்தைன்னு சொன்னீங்களே.. அது எதுக்கு"
"அத்தைன்னு சொன்னா தப்பாப்பா.. ஆன்ட்டியோட தமிழ் வார்த்தைதானே அத்தை.. அதான் தமிழில் சொன்னேன்.. உடனே லவ்வுன்னு வந்துருவீங்களா.. அய்யே ஆளைப் பாரு"
"என்னது ஆன்ட்டியோட தமிழ் வார்த்தையா.. என்னங்க நீங்க குழப்பறீங்க.. லவ் பண்றீங்களா இல்லையா"
"கண்டிப்பா பண்ணனுமா"
"பண்ணலாமே.."
"எதுக்கு.."
"பிடிச்சிருக்கு"
"என்ன பிடிச்சிருக்கு"
"உங்களைத்தான்"
"ஏன் பிடிக்கணும்"
"தெரியலை.. ஆனால் பிடிச்சிருக்கு.."
"சரி நாம அதிகமாக பேசலை. பழகலை.. அப்படி இருக்கும்போது எப்படி இப்படி"
"எனக்கும்தான் ஆச்சரியமா இருக்கு"
"எனக்கு உங்களை முதல்ல பார்த்தவுடனேயே ஏதோ மாதிரி ஆயிருச்சு தெரியுமா"
"நிஜமாவா"
"ஆமா. உங்க வாய்ஸ்தான் முதல்ல ஸ்டிரைக் ஆச்சு.. அது ரொம்பப் பிடிச்சுப் போயிருச்சு... அதுக்கு மேல எதையும் திங்க் பண்ணத் தோணலை"
"ஓ காட்.. இவ்வளவு நடந்திருக்கு.. சொல்லவே இல்லை.."
"எங்க சொல்ல விட்டீங்க.. தக்காளியில்தான் நீங்க கவனமா இருந்தீங்க.. என் முகத்தைப் பார்த்து பேசவே இல்லையே"
"ஹாஹாஹா.. ஆமாங்க.. அந்த இடத்தை விட்டு தப்புனா போதும்டா சாமின்னுதான் இருந்துச்சு எனக்கு தெரியுமா"
"ஏன் அவ்வளவு ராட்சசி போலவா நான் நடந்துக்கிட்டேன்"
"அப்படிச் சொல்ல வரலை. ஊர் ஒன்னு கூடி டின்னு கட்டிட்டா.. நம்ம ஊர்லதான் பொண்ணுங்கன்னா ஓடி வந்துருமே ஊரு ஜனமே"
"ஹிஹிஹி.. அப்படிச் சொல்றீங்களா.. உண்மைதான்"
"எனக்கு தூங்கறப்போ கூட தக்காளி ஞாபகம்தான்.. அப்படி பாதிச்சிருச்சு அந்த சம்பவம்.."
"அடச்சே.. அப்ப என்னைப் பத்தி நினைக்கலை.. தக்காளிதான் ஞாபகம் வருதாக்கும்"
"ஹிஹிஹி.. உங்களைப் பத்தி நினைச்சாலே அந்த தக்காளிதாங்க நினைவுக்கு வருது.. மறக்க முடியுமா"
" ஐ லவ்யூ ப்ரீத்தி"
"இதுக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியலை எனக்கு"
"யூ டூதான்.. 2 வார்த்தைதானே.. சொல்ல வேண்டியதுதானே"
"ம்ம்.. சொல்லியே ஆகணுமோ.." நமட்டுச் சிரிப்பை உதிர்த்தாள் ப்ரீத்தி.. பதிலுக்கு சுனில் முகத்தில் சந்தோஷ தாண்டவம்...
கலகலவென்ற இருவரின் சிரிப்பும் ஒன்று கலந்து அந்த அறையில் ஒரு காதல் சங்கமம் அழகாக நடந்தேறியது.
"சுனில் நீங்களா"
டக்கென்று கேட்ட திடீர் குரலால் விசுக்கென்று திரும்பினான் சுனில்.
வாசலில்.. திரையை விலக்கியபடி... மலர்விழி!
(தொடரும்)
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications