Arasan movie: நேராக ஷூட்டிங் தான் போறேன், அதுவும் மதுரைக்கு..! அரசன் அப்டேட் கொடுத்த சிம்பு
சென்னை: சிம்பு நடிக்கும் அரசன் என்கிற படம் சில மாதங்களுக்கு முன்பே துவங்கப்பட்டது. இந்த படத்தின் ப்ரோமோ வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டானது. ஆனால் அதற்குப் பிறகு படத்தை பற்றிய பெரிதாக அப்டேட் வராத நிலையில் இன்று நடிகர் சிம்பு இந்த படத்தை பற்றி புது அப்டேட் கொடுத்திருக்கிறார்.
தயாரிப்பாளர் ஐசரி கணேஷிடம் மூன்று படங்களில் நடித்துக் கொடுப்பதற்காக அட்வான்ஸ் வாங்கிய சிம்பு ஒரு படம் மட்டுமே நடித்துக் கொடுத்திருக்கிறார். அதற்குப் பிறகு சிம்பு அவருக்கு கால்ஷீட் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே அரசன் படத்தை தொடங்கினால் ஐசரி கணேஷ் பிரச்சனை செய்வார் என்பதால் அவரிடம் தொடர்ந்து வெற்றி மாறனும் கலைப்புலி தாணுவும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் வெளியானது.

இதனால் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்காமல் இருந்தது. ஆரம்பத்தில் ஐசரி கணேஷ் ஓரளவு கன்வென்ஸ் செய்து தான் அரசன் படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியிட்டார்கள் என்று கூட பேசப்பட்டது. இந்த நிலையில் ஆரம்பத்தில் சில பிரச்சனைகள் காரணமாக இந்த படம் கிடப்பில் போடப்பட்டது. ஆனால் இந்த படத்தின் ப்ரோமோ காட்சிகள் பார்த்த பிறகு இந்த படம் எப்போது சூட் தொடங்கும்? படம் எப்போ வெளியாகும் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கிறது.
கடந்த சில மாதங்களாகவே சிம்பு துபாயில் தான் இருந்து வருகிறார் ஏற்கனவே நவம்பர் 24ஆம் தேதி அரசன் சூட்டிங் துவங்கும் என்று ஆரம்பத்தில் சொன்னார்கள். ஆனால் அது நடக்கவில்லை இந்த நிலையில் வருகிற டிசம்பர் 9ஆம் தேதி இந்த படத்திற்காக சூட்டிங் தொடங்கப் போவதாக சிம்பு இன்று சொல்லி இருக்கிறார். நடிகர் சிம்பு இன்று மலேசியாவில் நடந்த ஒரு நகைக்கடை திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அப்போது செம ஸ்டைலாக சிம்பு அந்த நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்தார் அவரிடம் அரசன் படத்தின் அப்டேட் பற்றி ரசிகர்கள் கேட்டிருக்கிறார்கள். அதற்கு அவர், நான் இங்கிருந்து நேராக மதுரைக்கு தான் போகிறேன். அங்கே தான் சூட்டிங் தொடக்கப் போகிறார்கள். ஒன்பதாம் தேதி அரசன் ஷூட்டிங் தொடங்குகிறது. எப்போதும் போல இப்போதும் நீங்கள் எனக்கு சப்போர்ட் கொடுக்க வேண்டும் என்று ரசிகர்களிடம் கேட்டுக் கொண்டார்.
அப்போது ரசிகர்கள் அனைவருமே கத்தி ஆர்ப்பாட்டம் செய்து தங்களுடைய அன்பை வெளிப்படுத்தினர். இதற்கு ஐசரி கணேஷ் ஒத்துக்கொள்வாரா? அவரிடம் சம்மதம் வாங்கிவிட்டு தான் இப்போது சிம்பு அரசன் படத்தில் நடிக்க போகிறாரா என்ற கேள்விகளும் ஒரு பக்கம் எழுந்து வருகிறது.
அதுபோல சிம்பு கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தன்னுடைய திருமணத்தைப் பற்றியும் பேசி இருந்தார். அவர் பேசும்போது, நடக்க வேண்டிய நேரத்தில் எல்லாமே சரியாக நடக்கும். எனக்கு இதுவரைக்கும் 120க்கும் மேற்பட்ட திருமணங்களை சோசியல் மீடியாவில் நடத்தி வைத்து விட்டார்கள். அதைப்பற்றி நான் கண்டுகொள்ளவதே கிடையாது. எல்லாம் கைகூடி வரும்போது தானாக நடக்கும் என்று தன்னை பற்றிய வதந்திகளுக்கு பதில் கொடுத்தார்.
மேலும் ஒரு நல்ல நண்பனை எப்படி கண்டு கொள்ளலாம் என்றால் நாம பிரச்சனையிலும், கஷ்டத்திலும் இருக்கும்போது தான் புரிந்து கொள்ள முடியும். அதுபோல எனக்கு பிரச்சனையிலும் கஷ்டத்திலும் இருக்கும்போது தோள் கொடுத்து சப்போர்ட் செய்தது ரசிகர்கள் தான். அதனால் எப்போதுமே என்னுடைய ரசிகர்கள் தான் முக்கியம் என்று ரசிகர்களை பற்றி பெருமையாகவும் பேசி இருந்தார்.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications