ரஜினிகாந்த் 3 மணி நேரமே நடிக்கிறாரா? ராம்குமார் காட்டில் மழை போல.. தலைவர் 173யில் அடிச்ச அதிர்ஷ்டம்
சென்னை: தலைவர் 173 படத்தில் இருந்து சுந்தர் சி விலகியதையடுத்து, கமல் தயாரிக்கும் ரஜினி படத்தை யார் டைரக்ட் செய்ய போகிறார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.. இதில் கார்த்திக் சுப்புராஜ் பெயரும் அடிபட்டது. இறுதியில், ராம்குமாரை ரஜினி தேர்ந்தெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பிரபல சினிமா விமர்சகரும், மூத்த பத்திரிகையாளருமான பிஸ்மி தன்னுடைய கருத்தை பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
கூலி படத்துக்கு பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்துவரும் ரஜினிகாந்த், இந்த படத்துக்கு பிறகு, தன்னுடைய நண்பர் கமல் தயாரிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் தலைவர் 173 படத்தில் நடிப்பதாக இருந்தது.

ஆனால் சில காரணங்களால் சுந்தர்.சி வெளியேறிவிட்டார்.. இதனால் புது இயக்குநரை தேடும் படலம் ஆரம்பமானது.. இந்நிலையில்தான், ராம்குமார் பாலகிருஷ்ணன் பெயர் அடிபட்டது.. இவர்தான் ரஜினியின் படத்தை இயக்க போவதாக தகவல்கள் வருகின்றன.
முதல்பட சம்பளம்
'பார்க்கிங்' என்ற முதல் படத்தை இயக்கியவர் ராம்குமார் பாலகிருஷ்ணன்.. தன்னுடைய முதல் படத்துக்கு ராம்குமாருக்கு 6 லட்சம் ரூபாய் மட்டுமே சம்பளமாக தரப்பட்டதாம்.. அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு சிம்புவின் 49-வது படம் பேசப்பட்டபோது அவருக்கு 2 கோடி சம்பளம் பேசப்பட்டதாம்.
இப்போது ரஜினி படம் என்பதால் ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கு 10 கோடி சம்பளம் கொடுக்க ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் முன் வந்திருப்பதாக கூறுகிறார்கள். இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12ம் தேதி வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது.
ராம்குமார்
இந்நிலையில், Accord Tamil என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பிஸ்மி, "ராம்குமாரை படத்தின் இயக்குனராக ரஜினி தரப்பில் 99 சதவீதம் ஓகே செய்துவிட்டார்கள்.. ஆனால், இன்னும் 100 சதவீதம் ராம்குமார்தான் டைரக்டரா என்பது கன்பார்ம் ஆகவில்லை..
மார்ச் மாதம் தேதி தந்துள்ளதால், அதற்கு முன்பாகவே ஷூட்டிங் துவங்கப்பட வேண்டும் என்று ரஜினி நினைக்கிறார்.. அதனால்தான் ஏற்கனவே கதையுடன் தயாராக இருந்த ராம்குமார் பாலகிருஷ்ணன் (பார்க்கிங் பட இயக்குநர்) இந்த படத்துக்காக தேர்வாகி உள்ளார்..
ஏற்கனவே இந்த படத்தின் கதையை சிம்புவிடம் சொல்லப்பட்டுள்ளது.. ஆனால் அந்த ப்ராஜக்ட் கைவிடப்பட்டு விட்டது.. அந்த கதை தயாராக ராம்குமாரிடம் இருந்தாலும், ரஜினிக்கு கதை தேவைப்படும் தகவல் கிடைத்ததாலும், சிம்புவுக்காக வைத்திருந்த கதையை ரஜினிக்குக் சொல்லி உள்ளார் ராம்குமார்.
சிம்புவுக்கான கதையா
ஆனால், சிம்புவுக்காக எழுதப்பட்டிருந்த கதையில், காலேஜ் மாணவராக எழுதப்பட்டிருந்தது. இப்போது ரஜினி என்பதால் பேராசிரியர் அல்லது கல்லூரி ஊழியர் என கல்லூரிக்குள் செல்லும் ஒரு முதிர்ச்சியுள்ள கேரக்டராக கதையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
லைட்டர் வெயிட்
தொடர்ந்து ஆக்ஷன் படங்களில் நடித்துவிட்டதாலும், போதாக்குறைக்கு கூலி படத்தில் ரத்தத்திலேயே குளித்தாகி விட்தாலும், லைட்டர் வெயிட் படங்களில் நடிப்பதிலேயே தற்போது ரஜினி விரும்புகிறாராம்..
அதுமட்டுமல்ல, 73 வயதாகிவிட்டதால், உடல் மிகவும் தளர்ந்துவிட்டது.. இதனால் 3 மணி நேரம் மட்டுமே ரஜினி நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.
அதனால்தான், ஆக்ஷன் படங்களுக்காக சிரமப்படாமல், சற்று சௌகரியமாக நடிக்கக்கூடிய கதைகளை தேர்ந்தெடுக்கிறார். அதனால்தான், காமெடி படங்களை சூப்பராக எடுக்கக்கூடிய டைரக்டர் என்பதால், சுந்தர் சியிடம் அதுபோனற் கதையை எதிர்பார்த்தார்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications