Dhanush: வதந்திகளுக்கு மத்தியில், தமிழின் பெருமையை துபாயில் ஜொலிக்க செய்த தனுஷ்.. குவியும் பாராட்டு
சென்னை: நடிகர் தனுஷ் பற்றிய செய்திதான் சில நாட்களாக சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே சர்ச்சைக்கு பெயர் வாங்கிய தனுஷ் பற்றி சீரியல் நடிகை ஒருவர் பேசியது பலரையும் அதிர்ச்சியடைய வைத்திருந்தது. ஆனால் அவர் தனுஷை நேரடியாக குற்றம் சாட்டவில்லை என்றாலும் தனுஷின் பெயரை சொல்லி திரை உலகில் சிலர் நடிகைகளிடம் அட்ஜஸ்ட்மென்ட் தொந்தரவு செய்வதாக கூறி இருந்தார். இந்த நிலையில் தனுஷ் துபாயில் தமிழின் பெருமை பற்றி கெத்தாக பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் தனுஷ் ஆரம்பத்தில் சினிமாவில் நடிக்க தொடங்கிய போது அதிகமான உருவகேலிக்கு உள்ளானார். அவருடைய ஒல்லியான தேகம் மற்றும் ஆட்டிட்யூட் பற்றி பலர் விமர்சித்து வந்தாலும் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் தனுஷ் படிப்படியாக முன்னேறி இன்று தமிழில் மட்டுமல்லாமல் பல மொழிகளிலும் நடிக்கும் நடிகராக மாறி இருக்கிறார்.

தனுஷின் திறமை
நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர் என்று பல திறமைகளோடு வலம் வரும் தனுஷ் பற்றி சில நாட்களுக்கு முன்பு சீரியல் நடிகை பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது சன் டிவியில் வானத்தைப்போல உட்பட பல சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகை ஒருவர் தனக்கு சினிமா துறையில் நடந்த அட்ஜஸ்ட்மென்ட் குறித்து பேசி இருந்தார்.
அந்த நடிகை பேசும்போது, தனுஷின் மேனேஜர் என்று ஒருவர் தனக்கு போன் செய்து ஸ்கிரிப்ட் ரெடியா இருக்கு நடிக்கிறீங்களா என்று கேட்டார். அதற்கு நானும் கவர்ச்சியா நடிக்க மாட்டேன் என்று சொன்னதும் அதற்கு எதிர்முனையில் பேசிய நபர் தனுஷுடன் அட்ஜஸ்ட்மென்ட் இருக்கும் என்று சொன்னாரு என்று பேசி இருந்தார். இதுதான் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அவர், தனுஷின் மேனேஜர் தான் எனக்கு போன் செய்தாரா? என்று தெரியவில்லை, அவருடைய பெயரை சொல்லி ஒருவர் பேசினார் என்று அந்த நம்பரையும் தனுஷ் டீமுக்கு தான் கொடுத்திருப்பதாகவும் சொல்லியிருந்தார்.
தனுஷ் மேனேஜர் அறிக்கை
இந்த நிலையில் தனுஷ் உடைய மேனேஜர் அந்த நடிகையிடம் தவறாக பேசிய நபர் குறித்து தாங்கள் விசாரித்து வருவதாக ஒரு அறிக்கையும் வெளியிட்டு இருந்தார். ஏற்கனவே சினிமாத்துறையில் யார் டைவர்ஸ் செய்தாலும் அதற்கு காரணம் தனுஷ் தானா என்று சிலர் விமர்சித்து வருகிறார்கள். இந்த பஞ்சாயத்து ஒரு பக்கம் இருக்க இதற்கு தனுஷ் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை.
தமிழின் பெருமை
அதே நேரத்தில் அவர் சமீபத்தில் துபாயில் நடைபெற்ற துபாய் வாட்ச் வீக் நிகழ்வில் பேசிய வீடியோ தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் தமிழ் உலகில் மிகவும் பழமையான மொழிகளில் ஒன்று என தமிழின் பெருமையை எடுத்துக் கூறியிருக்கிறார். அதோடு "நான் தமிழ்நாட்டில் இருந்து வருகிறேன். தமிழ் உலகில் மூத்த மொழிகளில் ஒன்று" என்று பெருமையாக பேச எங்கிருந்தோ ரசிகர்கள் தனுஷின் பேச்சுக்கு ஆரவாரம் செய்திருக்கின்றனர். இந்த வீடியோ வெளியான சில நிமிடங்களிலேயே மில்லியன் கணக்கான வியூஸ் பெற்று வருகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications