Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“கல்யாணத்துக்கு ராஷ்மிகா எந்த பாடலுக்கு டான்ஸ் ஆடியிருக்காங்க பாருங்க!” ஸ்டன்னான விஜய் தேவரகொண்டா

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய ரசிகர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த நடிகர் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா ( Vijay Deverakonda Rashmika Mandanna Wedding) திருமணம் நேற்று ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் நகரில் மிக விமர்சையாக நடைபெற்றது. பல ஆண்டுகளாக கிசுகிசுக்கப்பட்டு வந்த இவர்களின் காதல் திருமண பந்தத்தில் இணைந்துள்ளது.

Vijay Deverakonda Rashmika Mandanna Virosh

இரு கலாச்சார முறையில் நடைபெற்ற திருமணம்

இருவரின் குடும்ப பாரம்பரியத்தையும் மதிக்கும் வகையில் திருமணம் இரண்டு விதமான முறைகளில் நடத்தப்பட்டது. காலை 10.10 மணி விஜய் தேவரகொண்டாவின் தெலுங்கு (ஆந்திரா) பாரம்பரிய முறையில் தாலி கட்டும் வைபவம் நடைபெற்றது.

மாலை 5.00 மணி ராஷ்மிகாவின் பூர்வீகமான கூர்க் (Kodava) கலாச்சார முறையில் திருமண சடங்குகள் நடைபெறுகின்றன. இதில் பாரம்பரிய கொடவா சேலை அணிந்து ராஷ்மிகா கலந்துகொண்டார்.

Vijay Deverakonda Rashmika Mandanna Virosh

அரண்மனை போல் காட்சியளித்த திருமண இடம்

இந்தத் திருமணம் ITC Mementos (Ekaaya) என்ற பிரம்மாண்ட ஹோட்டலில் நடைபெற்றது. ஆரவல்லி மலைத்தொடர்களுக்கு நடுவே அமைந்துள்ள இந்த இடம் முழுக்க ராஜபாட்டை அலங்காரத்தில் வடிவமைக்கப்பட்டிருந்தது.

'VIROSH' - ரசிகர்களின் அன்பு பெயர்

ரசிகர்கள் நீண்ட காலமாக இந்த ஜோடியை "Virosh" என்று அழைத்து வந்தனர். அந்த அன்பை மதிக்கும் வகையில் திருமணத்திற்கு அதிகாரப்பூர்வமாக "The Wedding of VIROSH" என்று பெயரிடப்பட்டது.

Vijay Deverakonda Rashmika Mandanna Virosh

சங்கீத் விழாவின் சிறப்பு தருணங்கள்

சங்கீத் நிகழ்ச்சி திருமணத்தின் ஹைலைட்டாக அமைந்தது. விஜய்யின் அம்மா, ராஷ்மிகாவுக்கு குடும்ப பாரம்பரிய தங்க வளையல்களை பரிசாக வழங்கினார். ராஷ்மிகா, தனது புகழ்பெற்ற Saami Saami பாடலுக்கு நடனமாடி அனைவரையும் உற்சாகப்படுத்தினார். அதேபோல விஜய், Gangnam Style பாடலுக்கு நடனமாடி விருந்தினர்களை கவர்ந்தார்.

திருமணத்திற்கு முன்னதாக நண்பர்களுக்காக 'Virosh Premier League' என்ற பெயரில் கிரிக்கெட் போட்டி, பூல் வாலிபால் போட்டி நடத்தப்பட்டன.

கலந்து கொண்ட பிரபலங்கள்

இந்தத் திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். திரைப்படத் துறையிலிருந்து சந்தீப் ரெட்டி வங்கா, தருண் பாஸ்கர், ஈஷா ரெப்பா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஹைதராபாத்தில் பிரம்மாண்ட வரவேற்பு

திருமணம் முடிந்ததும் இந்த ஜோடி ஹைதராபாத் திரும்புகிறது. வரும் மார்ச் 4, 2026 அன்று Taj Krishna ஹோட்டலில் திரைத்துறையினருக்காக பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

நேஷனல் கிரஷ் - பான் இந்தியா ஸ்டார் வரை

கன்னட படமான Kirik Party மூலம் அறிமுகமான ராஷ்மிகா, பின்னர் தெலுங்கில் முன்னணி நடிகையாக உயர்ந்தார். Geetha Govindam, Dear Comrade போன்ற படங்களில் விஜய்யுடன் இணைந்து நடித்ததிலிருந்தே இவர்களின் நெருக்கம் குறித்து பேசப்பட்டது. புஷ்பா ( Pushpa) படத்தின் மூலம் பான் இந்தியா அளவில் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். தமிழில் கார்த்தியுடன் நடித்த Sulthan படமும் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது. "National Crush" என்ற பட்டத்தை ரசிகர்களிடமிருந்து பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நீண்ட நாட்களாக ரசிகர்கள் காத்திருந்த காதல் நேற்று திருமணமாக மாறியுள்ள நிலையில், திருமண விழாவின் ஒவ்வொரு நிகழ்வும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. "Virosh" என்ற பெயரில் தொடங்கிய ரசிகர்களின் கொண்டாட்டம், இப்போது அவர்களின் வாழ்கையின் புதிய அத்தியாயமாக மாறி இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+