குழந்தைகளால் மட்டுமே...

குழந்தைகளின் உலகம் விசாலமானது
மேகம் கடந்து வானம் பார்க்க முடிகிறது
நிலாவில் நடக்க முடிகிறது
குழந்தைகளால் மட்டுமே
கடவுள்களோடும் தேவதைகளோடும்
விளையாட முடிகிறது
நட்சத்திரத்தை விளக்கமாறால் கூட்டி
குப்பையென குவித்து நிலாக்களை
நீள்சதுரமாய் உண்டுபன்ன முடிகிறது
வானமெங்கும் நிலாக்கள்...
குழந்தைகளோடு கரடிகளும்
முயல்களும் இன்னும் சில
மிருகங்களாலும் பேச முடிகிறது
பொம்மைகளாயினும்...
குழந்தைகளால் தவறுகளையும்
மிருகத்தனமான கோபங்களையும்
மறக்கவும் மன்னிக்கவும் முடிகிறது
அழுதவுடன் சிரிக்கவும்
சிரிப்போடு அழவும் அவர்களால் மட்டுமே முடிகிறது...
குழந்தைகள் கூறும் கதைகளில்
அவர்களும் ஒரு பாத்திரமாகிறார்கள்
பெரும்பாலும் அவர்கள் கதைகள்
ஆச்சர்யங்களோடே முடிகிறது
ஆச்சர்யங்களை அடுத்த நாளுக்காக
ஒளித்துவைதுக் கொள்ள
முடிவதில்லை அவர்களால்...
சின்னசின்ன வீடுகளை
கதவில்லாமல் வரைந்து
சில பறவைகளும் பல
மிருகங்களும் வரைந்து
வாழ்ந்தும் முடிக்கிறார்கள்
நாளை வேறு வீடு
கூடவே வேண்டும் மரங்களும்
பல நிறங்களில் பூக்களும்...
நிலாவை வரை என்கிறேன்
அப்பா பகல் என்கிறாள்
சரி வெயிலின் நிறம் வரை என்கிறேன்
வானவில்லை வரைந்து சிரிக்கிறாள்
நான் ஆமோதித்து அதிசயிக்கிறேன்...
சிறு கை அளாவிய கூழ் ருசிக்கும்போதெல்லாம்
திருவள்ளுவரை நினைத்து பிரமிக்கிறேன்...
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications