Fact Check: ஹெல்மெட் அணிவது தனிப்பட்ட விருப்பம்! நடவடிக்கை வேண்டாமென முதல்வர் உத்தரவு? உண்மை என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை : தலை கவசம் ( ஹெல்மெட் ) அணிவது , அவர்களின் தனிப்பட்ட விருப்பம் .உயிரின் மேல் விருப்பம் உள்ளவர்கள் அணிந்துகொள்ளட்டும் .ஹெல்மெட் அணியாதவர்களின் மேல் நடவடிக்கை எதுவும் எடுக்க வேண்டாம் என காவல் துறைக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு போலியான செய்தி பகிரப்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்லும் நிலையில் போக்குவரத்து விதிகளும் மீறப்பட்டு விபத்துகள் அதிகளவில் நடந்து வருகிறது. இதனைதொடர்ந்து போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களுக்கான அபராத கட்டணத்தை மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு உயர்த்தியது.

அதன்படி வாகன ஓட்டிகளுக்கு பல்வேறு விதிமீறல்களுக்காக அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு மாநகரங்களில் கடந்த 26-ந்தேதி முதல் இந்த நடைமுறை அமலுக்கு வந்தது.

அபராதம் உயர்வு

அபராதம் உயர்வு

பெரும்பாலும் இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமலும் ஒரு வாகனத்தில் 2க்கும் மேற்பட்டோர் செல்வதும், குடிபோதையில் வாகனங்கள் ஓட்டுவது போன்ற விதிமீறல் சம்பவங்களே அதிகளவில் நடக்கிறது. இதுபோன்ற நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவது சரியே என்று ஒரு தரப்பினர் கூறிவந்தாலும், பெரும்பாலானோர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அபராதம் விதிப்பது என்பது வாகனஓட்டிகள் எச்சரிக்கையுடன் வாகனங்கள் ஓட்டவேண்டும் என்பதற்காகத்தான். அபராதம் வசூலிப்பது மிரட்டுவதற்கோ, பணம் வசூலிப்பதற்கோ இல்லை என போலீசார் கூறுகின்றனர்.

 தனிப்பட்ட விருப்பம்

தனிப்பட்ட விருப்பம்

இந்நிலையில், தலை கவசம் ( ஹெல்மெட் ) அணிவது , அவர்களின் தனிப்பட்ட விருப்பம் .உயிரின் மேல் விருப்பம் உள்ளவர்கள் அணிந்துகொள்ளட்டும் .ஹெல்மெட் அணியாதவர்களின் மேல் நடவடிக்கை எதுவும் எடுக்க வேண்டாம் என காவல் துறைக்கு முதல்வர் உத்தரவு... ஹெல்மெட்டுக்காக காவல்துறை அபராதம் கேட்டால்.9894******.இந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்.அனைத்து குரூப்பிர்க்கும் பகிரவும்" என ஒரு செய்தி பகிரப்பட்டு வருகிறது.

மிக பழைய தகவல்

மிக பழைய தகவல்

தற்போது இந்த செய்தி முகநூல், டெலிகிராம் மற்றும் பல 'வாட்ஸ் அப் குரூப்களிலும் உலவவிட்டுள்ளனர். இது வாட்ஸ் கண்டுபிடித்த போது உருவாக்கப்பட்ட மிகப் பழைய செய்தி என்றாலும், தற்போது மீண்டும் பரப்பி இருசக்கர வாகன ஓட்டிகள் மத்தியில், குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர். சில நாட்களுக்கு முன்னர் ஹெல்மெட் அணியாத நபருக்கு அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், முதல்வர் உத்தரவிட்டுள்ளார் அதனை மீறலாமா என போலீசாரிடம் ஒருவர் வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளார்.

போலி செய்தி

போலி செய்தி

இந்நிலையில் முதல்வரின் உத்தரவு என சமூக வலைதளங்களில் ஒரு போலியான செய்தி பகிரப்பட்டு வருகிறது எனவும், அது போன்ற உத்தரவு இல்லை எனவும், பழைய செய்தியை விஷமிகள் மீண்டும் வெளியிட்டுள்ளனர் என போலீசார் கூறியுள்ளனர். மேலும் அந்த செய்தியில் இதேபோல் ஏராளமான மொபைல் போன் எண்கள் உண்மை இல்லை என்றும், சிலர் தங்களுக்கு பிடிக்காத நபர்களின் எண்களை புதிதாக மாற்றம் செய்து பரப்பி வருவதாகவும், கூறுகின்றனர்.

Fact Check

வெளியான செய்தி

தலை கவசம் ( ஹெல்மெட் ) அணிவது , அவர்களின் தனிப்பட்ட விருப்பம் .உயிரின் மேல் விருப்பம் உள்ளவர்கள் அணிந்துகொள்ளட்டும் .ஹெல்மெட் அணியாதவர்களின் மேல் நடவடிக்கை எதுவும் எடுக்க வேண்டாம் என காவல் துறைக்கு மு

முடிவு

ஹெல்மெட் அணியாதவர்களின் மேல் நடவடிக்கை எதுவும் எடுக்க வேண்டாம் என காவல் துறைக்கு முதல்வர் உத்தரவு என்ற செய்தி போலியானது ஆகும்

ரேட்டிங்

Misleading
பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+