For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சீன ராணுவ வீரர்கள் 43 பேர் மரணமா? உண்மை என்ன? சீனா செய்த குள்ளநரித்தனம்

Google Oneindia Tamil News

லடாக்: லடாக் எல்லையில் சீன தரப்பில் 43 பேர் இறந்ததாக சொல்லப்படுவது உண்மையில்லை என்றும் தவறான தகவல் என்றும் கூறப்படுகிறது. ஏஎன்ஐ செய்தி நிறுவனம் 43 சீன வீரர்கள் காயம் மற்றும் மரணம் அடைந்திருக்கலாம் என்று தான் கூறியிருந்தது. ஆனால் ஊடகங்களில் 43 பேர் மரணம் என்று வெளியானது. உண்மையில் சீனா இதுவரை எத்தனை பேர் இறப்பு, எத்தனை பேர் காயம் என்பதை இதுவரை தெரிவிக்கவில்லை

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு, பாங்காங் ஏரி, டெம்சேக், தவுலத் பெக் ஓல்டி ஆகிய எல்லைப் பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக இந்தியா சீனா இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இரு தரப்பிலும் படைகளை குவிந்து வந்தன. இதனால் பதற்றமாக காணப்பட்டது இந்தியா லடாக் எல்லைப்பகுதியில் சாலை பணிகளை மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து சீனா மோதலில் ஈடுபட்டு வருகிறது.

லடாக் எல்லைக்கு வந்த ஹெலிகாப்டர்கள்.. அதிகாலையில் மீட்கப்பட்ட சீன வீரர்களின் உடல்கள்.. பரபர பின்னணி!லடாக் எல்லைக்கு வந்த ஹெலிகாப்டர்கள்.. அதிகாலையில் மீட்கப்பட்ட சீன வீரர்களின் உடல்கள்.. பரபர பின்னணி!

சீனா வீரர்கள் உயிரிழப்பு

சீனா வீரர்கள் உயிரிழப்பு

இந்நிலையில் கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளாதாக்குப் பகுதியில் திங்கள்கிழமை இரவு இந்திய, சீன ராணுவத்தினரிடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்ததாக நமது ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, சீன ராணுவம் தரப்பில் 43 பேர் வரை மரணம் அடைந்திருக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால் இதை சீனா உறுதி செய்யவில்லை.

பேச்சுவார்த்தை

பேச்சுவார்த்தை

சீன ராணுவத்தினர் அத்துமீறி இந்திய எல்லையில் கூடாரம் அமைத்ததே பிரச்சனைக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இந்த மோதலால். இரு நாட்டு எல்லைகளிலும் பெரும்பதற்றம் நீடிக்கிறது. வெளியுறவுத்துறை அளவிலான பேச்சுவார்த்தைக்க பின் இரு நாட்டு படைகளும் அங்கிருந்து திரும்பப்பெறுவது என முடிவு செய்யப்பட்டு படைகள் வாபஸ் பெற்று வந்த நிலையில் இப்படி ஒரு மோசமான தாக்குதல் நடந்துள்ளது.

சீன தரப்பில் எவ்வளவு பேர்

சீன தரப்பில் எவ்வளவு பேர்

இந்திய தரப்பில் 20 பேர் வீர மரணம் அடைந்தது அறிவிக்கப்பட்ட உடனேயே இந்திய ஊடகங்களில் சீனாவில் 43 பேர் உயிரிழப்பு என்று வெளியானது. உண்மையில் 43 பேர் சீன தரப்பில் மரணம் அடைந்ததாக கூறப்படுவது தவறான தகவல்கள் என்றும் பல்வேறு ஊடகங்களில் வெளியானது தவறான செய்தி என்றும் கூறப்படுகிறது.

 43 பேர் காயம் மற்றும் மரணம்

43 பேர் காயம் மற்றும் மரணம்

இந்நிலையில் கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளாதாக்குப் பகுதியில் திங்கள்கிழமை இரவு இந்திய, சீன ராணுவத்தினரிடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்ததாக நமது ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, சீன ராணுவம் தரப்பில் 43 பேர் வரை மரணம் அடைந்திருக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால் இதை சீனா உறுதி செய்யவில்லை.

தவிர்த்த சீனா

தவிர்த்த சீனா

சீன ராணுவம் தரப்பிலோ அல்லது சீன அரசு தரப்பில் இருந்தோ இதுவரை எத்தனை பேர் லடாக் எல்லை மோதலில் உயிரிழப்பு என்பதை தெரிவிக்கவிலலை. உயிரிழப்புகுறித்தும் காயம் அடைந்த தகவல்கள் குறித்து சீனா எதையும் வெளியிடாமல் மறைத்துவிட்டது. உயிரிழப்பு விவரத்தை வெளியிட்டால் இருநாட்டுக்கும் இடையே ஒப்பீடு வரும் என்பதால் குள்ளநரித்தனமாக அதை தவிர்த்துவிட்டதாக கூறப்படுகிறது. எனினும் இந்த விவகாரத்தில் இந்தியா மீது சீனா வேண்டுமென்றே பழிபோடுகிறது.

English summary
indian Army says a total of 20 Indian soldiers have died in Ladakh's Galwan Valley. ANI claimed based on “Chinese intercepts” that “43 Chinese soldiers [were] killed in the clashes
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X