For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

Fact Check: கொலுவில் எட்டிப்பார்த்த பெரியார்.. மோடி எங்கே? திரும்பி பார்த்த வடக்கு.. இதான் தமிழ்நாடு

Google Oneindia Tamil News

மதுரை: நவராத்திரியை முன்னிட்டு மதுரையில் வைக்கப்பட்டு உள்ள கொலு ஒன்று தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.

நவராத்திரியை முன்னிட்டு நாடு முழுக்க பல இடங்களில் கொலு வைக்கப்பட்டு வருகிறது. மொத்தம் 9 படிகளாக இதற்கு கொலு வைப்பார்கள். எதிரிகளை அழிப்பதற்காக மகாராஜா சுரதா செய்த வழிபாடுதான் கொலுவின் தொடக்கம்.

போருக்கு முன்பாக காளி தெய்வத்தை பொம்மையாக உருவாக்கி வழிபாடு செய்து, அதில் வெற்றியும் பெறுவான். அதில் இருந்து உருவங்களை பொம்மைகளாக உருவாக்கி நவராத்தியில் கொலு வைப்பது வழக்கமாகி உள்ளது.

நவராத்திரி 2022: வாழ்க்கையில் படிப்படியாய் முன்னேற்றம் தரும் கொலு படிகள்..எப்படி வைக்க வேண்டும்? நவராத்திரி 2022: வாழ்க்கையில் படிப்படியாய் முன்னேற்றம் தரும் கொலு படிகள்..எப்படி வைக்க வேண்டும்?

டிரெண்டிங்

டிரெண்டிங்

எல்லா வருடமும் கொலு வைக்கும் போதெல்லாம் அதில் பயன்படுத்தப்படும் பொருட்கள், உருவங்கள் கவனம் பெறும். ஒவ்வொரு வருடமும் கொலுவில் புதிய புதிய பொம்மைகள் இடம்பெறுவது வழக்கம். விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் எப்போது அப்போது டிரெண்டிங்கில் இருக்கும் விஷயத்தை வைத்து சிலைகளை செய்வார்கள். அதேபோல்தான் கொலுவிலும் அவ்வப்போது டிரெண்டிங்கில் இருக்கும் பொம்மைகளை வைப்பார்கள். இது போன்ற உருவங்கள் டிரெண்டிங் ஆவது வழக்கம்.

கொலு

கொலு

மதுரையில் நவராத்திரியில் வைக்கப்பட்டு உள்ள கொலு ஒன்று கவனம் பெற்றுள்ளது. இதில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் புகைப்படம் இடம்பெற்று உள்ளது. அதேபோல் சுப்ரமணிய பாரதியார், வி.ஓ. சிதம்பரம் பிள்ளை, பி.ஆர்.அம்பேத்கர், இந்திரா காந்தி, பெரியார், சி.என்.அண்ணாதுரை, ஏபிஜே அப்துல் கலாம், இயேசு கிறிஸ்து ஆகியோரின் உருவங்கள் இதில் இடம்பெற்று உள்ளன. முக்கியமாக பெரியாரின் பொம்மை இடம்பெற்று உள்ளது.

மதுரை

மதுரை

ஆனால் இதை வடஇந்திய ஊடகங்கள் சில தவறாக ரிப்போர்ட் செய்துள்ளன. பெரியார் புகைப்படத்தை பார்த்து அடையாளம் தெரியாமல் அவர்கள் செய்தி வெளியிட்டு உள்ளனர். அது மோடியின் புகைப்படம் என்று நினைத்துக்கொண்டு.. மோடி பொம்மை இருக்கு பாருங்க என்று நியூஸ் வெளியிட்டு உள்ளனர். வெள்ளை நிறம், வெள்ளை தாடி, வயதான முகம் என்பதால் அதை மோடி என்று நினைத்துக்கொண்டு செய்தி வெளியிட்டுள்ளனர்.

மோடியா?

மோடியா?

இதையடுத்து தமிழர்கள் பலர் இது மோடி இல்லை பெரியார் என்று விளக்கம் அளித்துள்ளனர். அதே சமயம் இந்த கொலு பொம்மைகளை பலர் பாராட்டியும் வருகின்றனர். கொலு என்பது இந்து பண்டிகை. இதில் இறை மறுப்பாளர் பெரியார் பொம்மை உள்ளது. இஸ்லாமியர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் பொம்மை உள்ளது. அதேபோல் இயேசு பொம்மை இல்லை. இதுதான் மத நல்லிணக்கம். இதுதான் தமிழ்நாடு என்று பாராட்டி வருகின்றனர்.

Fact Check

வெளியான செய்தி

நவராத்திரியை முன்னிட்டு மதுரையில் வைக்கப்பட்டு உள்ள கொலு ஒன்றில் பிரதமர் மோடி உருவம் இருப்பதாக செய்தி வெளியாகி வருகிறது.

முடிவு

கொலுவில் இருப்பது மோடி உருவம் இல்லை. அது பெரியார் உருவம்.

ரேட்டிங்

False
பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]
English summary
Fact Check: Is it Periyar or Modi Image in the trending Madurai Kolu photos?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X