For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உயரும் செல்வாக்கு? பிரதமர் மோடியை பின்னுக்கு தள்ளிய ராகுல் காந்தி! தீயாக பரவும் ஃபோட்டோ உண்மையா

Google Oneindia Tamil News

டெல்லி: பாத யாத்திரை தொடங்கிய பின், பிரதமர் நரேந்திர மோடியை ஓவர்டேக் செய்யும் அளவுக்கு ராகுல் காந்தியின் செல்வாக்கு உள்ளதாக இணையத்தில் தகவல் பரவி வருகிறது.

காங்கிரஸ் கட்சி இப்போது இக்கட்டான சூழலில் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக நடந்த எந்தவொரு தேர்தலிலும் காங்கிரஸ் கட்சியால் வெல்ல முடியவில்லை.

அப்படியே வென்றாலும் கூட அவர்களால் ஆட்சியைத் தக்க வைக்க முடியவில்லை. கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா எனப் பல மாநிலங்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

3 வயது குழந்தை கடத்தல்.. 24 மணி நேரத்தில் மீட்ட போலீஸ்.. 'சிசிடிவியில் இளம்பெண் உருவம்’.. யார் அவர்?3 வயது குழந்தை கடத்தல்.. 24 மணி நேரத்தில் மீட்ட போலீஸ்.. 'சிசிடிவியில் இளம்பெண் உருவம்’.. யார் அவர்?

 ராகுல் காந்தி

ராகுல் காந்தி

இதன் காரணமாகக் காங்கிரஸ் கட்சியில் இருந்து பல மூத்த தலைவர்கள் வரிசையாக விலகி வருகின்றனர். கட்சியில் இருந்து வெளியேறும் பலரும் தலைமை செயல்பாடுகளைத் தான் விமர்சிக்கின்றனர். இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் அடுத்த மக்களவை தேர்தல் நடைபெறுவதால் இது முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில் காங்கிரஸ் கட்சிக்குப் புத்துணர்ச்சியை அளிக்கும் வகையில் ராகுல் காந்தி நடைப்பயணம் தொடங்கி உள்ளார்.

 செல்வாக்கு

செல்வாக்கு

கன்னியாகுமரியில் கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி ராகுல் காந்தி இந்த பயணத்தைத் தொடங்கினார். தமிழ்நாடு மற்றும் கேரளாவில் நடைப்பயணம் முடிந்துள்ள நிலையில், அடுத்தகட்டமாக அவர் கர்நாடகாவில் நடைப்பயணத்தைத் தொடங்கி உள்ளார். இதற்கிடையே இந்த பாத யாத்திரைக்குப் பின்னர், ராகுல் காந்தியின் செல்வாக்கு மக்களிடையே அதிகரித்ததாகக் கூறி இணையத்தில் வேகமாக ஃபோட்டோ ஒன்று பரவியது.

 பரவிய தகவல்

பரவிய தகவல்

ட்விட்டரில் நிலவும் பாசிட்டிவ் சென்டிமென்ட் என்று இருந்த அந்த ஃபோட்டாவில் ராகுல் காந்தி 66 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளார். பிரதமர் மோடி 15 சதவீதத்துடன் இரண்டாம் இடத்தில் அதில் இருக்கிறார். இவர்கள் இருவருக்குப் பின்னர் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஏழு சதவீதமும், அகிலேஷ் யாதவ் ஐந்து சதவீதமும், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நான்கு சதவீதமும் பெற்றுள்ளனர்.

 உண்மையா

உண்மையா

இந்த ஃபோட்டோவை காங்கிரஸ் தலைவர்கள் பலரும் தங்கள் ட்விட்டரில் பகிர்ந்து வருகின்றனர். இதற்கிடையே சிலர் இதன் உண்மைத்தன்மை குறித்து தொடர்பாகக் கேள்வியும் எழுப்பி உள்ளனர். இது குறித்து நாம் தேடியதில் இது மிஸ்லீடிங் ஒன்று என்பது தெரிகிறது. இந்தப் படம் புதிய சர்வே-இன் படம் இல்லை. இதற்கும் ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரைக்கும் எவ்வித தொடரும் இல்லை. ஏனென்றால் இது 2017இல் எடுக்கப்பட்ட சர்வே முடிவாகும்.

 பழைய படம்

பழைய படம்

இந்த சர்வே கடந்த 2017 குஜராத் சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு எடுக்கப்பட்ட சர்வே ஆகும். இது தொடர்பான வீடியோ பிரபல ஆங்கில ஊடகமான டைம்ஸ் நவ் யூடியூப் பக்கத்தில் டிசம்பர் 17, 2017இல் அப்டேட் செய்யப்பட்டு உள்ளது. இந்த இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே இணையத்தில் பரவும் அந்த ஃபோட்டோ போலியான ஒன்று என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. உண்மையில் அது குஜராத் தேர்தல் தொடர்பான சர்வே. அந்த சமயத்தில் குஜராத்தில் ட்விட்டரில் யாருக்குச் செல்வாக்கு என்பதே அந்த சர்வே ஆகும்.

ஒரிஜினல் சர்வே

ஒரிஜினல் சர்வே

குஜராத் தேர்தல் தொடர்பானது என்பதால் ஒரிஜினல் சர்வே-இல் அகிலேஷ் யாதவ், மம்தா பானர்ஜி மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரின் ஃபோட்டக்கள் இல்லை. அதற்குப் பதிலாக, குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி, ஹர்திக் படேல் மற்றும் சுயேச்சை எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி ஆகியோரின் படம் தான் அதில் இருந்தது. அந்த சர்வே-இல் ராகுல் காந்தி முன்னிலையில் இருந்த போதிலும், 2017 குஜராத் சட்டசபைத் தேர்தலில் பாஜகவே வென்றது குறிப்பிடத்தக்கது.

பொய்

பொய்

சரி அதில் கூறப்பட்ட விஷயத்திற்கு வருவோம் சமூக வலைத்தளங்களில் ராகுல் காந்தியின் செல்வாக்கு பிரதமர் மோடியை விட அதிகரித்து உள்ளதா என பார்க்கலாம். கடந்த ஒரு மாதத்தில் ராகுல் காந்தியை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை சுமார் 1.61 லட்சம் அதிகரித்துள்ளது. இதே காலகட்டத்தில் பிரதமர் மோடியின் ட்விட்டரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை சுமார் 9.18 லட்சம் அதிகரித்துள்ளது. அதேபோல பிரதமர் மோடியின் ஃபேஸ்புக் பக்கம் சுமார் 86 லட்சம் interaction இருந்த நிலையில், ராகுல் காந்தியின் பேஸ்புக் பக்கத்தில் சுமார் 72 லட்சம் interaction மட்டுமே இருந்து உள்ளது.

Fact Check

வெளியான செய்தி

பரவிய செய்திபாத யாத்திரைக்கு பின்னர், சமூக வலைத்தளங்களில் ராகுல் காந்தியின் செல்வாக்கு பிரதமர் மோடியை ஓவர்டேக் செய்துவிட்டது.

முடிவு

முடிவுஇணையத்தில் பரவி வரும் அந்த ஃபோட்டோ, 2017ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட பழைய படமாகும்.

ரேட்டிங்

False
பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]
English summary
Is Rahul Gandhi overtakes Modi in popularity with Bharat JodoYatra
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X