24 காரட் தங்கத்தின் விலை.. ரூ.8700க்கும் கீழ் சரியப்போகிறது.. தயாராக இருங்கள்.. எக்ஸ்பர்ட் வார்னிங்
சென்னை: நாடு முழுக்க 24 காரட் தங்கத்தின் விலை 1 கிராமிற்கு ரூ.8700க்கு கீழ் சரிய வாய்ப்பு உள்ளதாக வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை நகரில் இன்று 1 கிராம் 24 காரட் தங்கம் விலை ₹9,513 ஆக உள்ளது, இதேபோல் 1 கிராம் 22 காரட் தங்கம் விலை ₹8,720 ஆகவும், 1 கிராம் 18 காரட் தங்கம் விலை ₹7,185 ஆகவும் உள்ளது.
அமெரிக்க-சீன வர்த்தக பேச்சுவார்த்தைகள், அமெரிக்க-ஈரான் அணுசக்தி பேச்சுவார்த்தைகள் மற்றும் ரஷ்யா-உக்ரைன் போர் ஆகியவற்றில் எதிர்பார்க்காத முன்னேற்றங்கள் ஏற்பட்டு உள்ளன. எல்லாமே நல்ல படியாக முடியும் சூழல் ஏற்பட்டு உள்ளது. எல்லாம் மோசமாக செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முடிவுகள் நேர்மறையாக மாற தொடங்கி உள்ளன.
இதனால் உலகம் முழுக்க உள்ள பங்குச் சந்தைகளில் புதிய உத்வேகம் ஏற்பட்டு உள்ளது. பங்கு சந்தேகத்தி முன்னேற்றம் அடைய தொடங்கி உள்ளது. இதனால் டாலர் மதிப்பும் உயர தொடங்கி உள்ளது. டாலர் மதிப்பு உயர்வதால் தங்கத்தின் மதிப்பு சரிய தொடங்கி உள்ளது. இந்தியாவில், 24 காரட் தங்கத்தின் விலை ரூ.95,000 க்கும் கீழே குறைந்துள்ளது. இந்தியாவில் தங்கம் வாங்குபவர்களுக்கும், நீண்ட காலத்திற்கு, குறிப்பாக வரவிருக்கும் திருமண சீசனுக்கு முன்னதாக, தங்கத்தில் முதலீடு செய்ய ஆர்வமுள்ளவர்களுக்கும் விலை சரிவு ஒரு சாதகமான அம்சமாக மாறி உள்ளது.

மும்பையில், காலை நேரத்தில் 22 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.86,140 ஆகவும், 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.93,870 ஆகவும் இருந்தது. வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.96,900 ஆக இருந்தது.
வல்லுநர் வார்னிங்
இந்திய தங்க நகை வியாபாரிகள் சங்கத்தின் (IBJA) துணைத் தலைவரும், ஆஸ்பெக்ட் குளோபல் வென்ச்சர்ஸின் நிர்வாகத் தலைவருமான அக்ஷா காம்போஜ் இது தொடர்பாக கூறுகையில், உலகம் முழுவதும் தங்கத்தின் விலை கடந்த ஒரு மாதத்தில் மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளது. அமெரிக்கா-சீனா வரி பதட்டங்கள், ரஷ்யா-உக்ரைன் போர் ஆகியவை கிட்டத்தட்ட முடிவிற்கு வந்துவிட்டன. தற்காலிகமாக ஏற்பட்ட இந்தியா பாகிஸ்தான் போரும் முடிவிற்கு வந்துவிட்டது.
பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட ஏற்ற இறக்கம் உள்ளிட்ட தங்க விலைகளை உயர்த்திய அனைத்தும் சரியாகி வருகிறது. இதனால் சர்வதேச அளவில் தங்கம் விலை குறைய தொடங்கி உள்ளது. இது இந்திய சந்தையில் தங்க விலைகளையும் பாதித்துள்ளது. நாடு முழுக்க 24 காரட் தங்கத்தின் விலை 1 கிராமிற்கு ரூ.8700க்கு கீழ் சரிய வாய்ப்பு உள்ளது. இதனால் அச்சப்பட வேண்டாம். இப்போது திருமண சீசனுக்கு தங்கம் வாங்குபவர்களுக்கு இது சாதகமாக இருக்கும்.
நீண்ட காலத்திற்காக தங்கம் வாங்குபவர்களுக்கு இது சாதகமாக இருக்கும். தங்கம் விலை சரியும் போது வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். உயரும் போது அது பெரிய அளவில் பலன் அளிக்கும். அமெரிக்காவில் வரி விகிதம் குறைக்கப்படும் என்று பெரிதாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த காலாண்டில் வரி விகிதம் குறைக்கப்பட்டது என்று அந்நாட்டு பெடரல் வங்கி அறிவித்துள்ளது.
வர்த்தகப் போர், நாட்டில் மந்தமான பொருளாதார வளர்ச்சி மற்றும் நிலையற்ற பணவீக்கப் போக்குகள் ஆகியவற்றால் வரி விகிதத்தை குறைக்க மாட்டோம் என்று அந்நாட்டு பெடரல் வங்கி அறிவித்துள்ளது. அந்நாட்டு வட்டி விகிதங்களை 4.25% முதல் 4.5% வரை மாற்றாமல் வைத்திருக்க முடிவு செய்துள்ளனர். இதுவும் கூட தங்கம் விலை சரிய முக்கிய காரணமாக மாறிவிட்டது என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications