உலக வரலாற்றில் நடக்காத சம்பவம்.. சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட மிக நீண்ட தங்க சுரங்கம்.. வரலாறு மாறும்
பெய்ஜிங்: உலக வரலாற்றிலேயே மிக நீண்ட தூரம் செல்ல கூடிய தங்க சுரங்கம் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
மத்திய சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள பிங்ஜியாங் கவுண்டியின் மலைகளுக்கு அடியில், புவியியலாளர்கள் குழு சமீபத்திய நடத்திய ஆய்வில் இந்த சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. உலக வரலாற்றில் மிகவும் நீண்ட தூரம் செல்ல கூடிய தங்க இருப்புகளில் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது. இரண்டு கிலோமீட்டருக்கும் அதிகமாக நிலத்திற்கு அடியில் செல்லும் வகையில் இந்த சுரங்கம் அமைக்கப்பட்டு உள்ளது.
இதன் உள்ளே 1,000 மெட்ரிக் டன் தங்கம் இருக்கலாம் - தோராயமாக 78 பில்லியன் யூரோக்கள் அல்லது சுமார் 600 பில்லியன் யுவான் மதிப்புள்ளவை இது என்று கணிக்கப்பட்டு உள்ளது. அதாவது 75 லட்சம் கோடி ரூபாய் ரூபாய் மதிப்பு கொண்டது ஆகும்.
இந்த பூமியில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதிலேயே மிக நீண்ட தூரம் செல்ல கூடிய தங்க டெபாசிட் இதுதான். நரம்புகள் போல சாரை சாரையாக பூமிக்கு அடியில் தங்கம் விரிந்து சென்று கொண்டு இருக்கிறதாம். இதுவரை இங்கே 40 க்கும் மேற்பட்ட தனிப்பட்ட தங்க நரம்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன, அவை 3,000 மீட்டர் ஆழத்தில் பாறை வழியாக நீண்டுள்ளன.

2,000 மீட்டர் ஆழத்தில் உள்ள தங்கம் மட்டுமே சுமார் 300 டன் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் சீனாவின் தங்க இருப்பு திடீரென இன்னும் பல ஆயிரம் மடங்கு உயரலாம் என்று கூறப்படுகிறது. இந்த தங்க சுரங்கம் சீனாவின் வரலாற்றையும், அதன் தங்க மதிப்பையும் மாற்றலாம்.
சீனா விற்பனை
சமீபத்தில்தான் சீனா தனது தங்க இருப்பை திடீரென குறைத்தது. உலக அளவில் இப்படி தங்கம் விலை உயர் முக்கிய காரணங்களில் ஒன்று சீனா. அங்கே தங்கம் குவிக்கப்பட்டது. சீனா தொடர்ந்து தங்கத்தை வாங்கி குவித்தது. மார்ச் 2025 நிலவரப்படி சீனாவின் அதிகாரப்பூர்வ தங்க இருப்பு தோராயமாக 2,292 மெட்ரிக் டன்கள் ஆகும். இது சீனாவை உலகின் முன்னணி தங்கம் வைத்திருக்கும் நாடுகளில் ஒன்றாக ஆக்குகிறது, சீனாவில் கடந்த சில ஆண்டுகளாக தங்க இருப்புக்கள் சீராக அதிகரித்து வருகின்றன.
சீன மக்கள் வங்கி (PBoC) அதன் தங்க இருப்பை தீவிரமாக உயர்த்தி வந்தது, பிப்ரவரி 2025 இல் 50 டன்களும் மார்ச் 2025 இல் 5 டன்களும் அதிகரித்தது. இதனால் சர்வதேச அளவில் தங்கம் விலை உயர்ந்தது.
விற்பனை:
ஆனால் சீனா திடீரென தங்கத்தை விற்க தொடங்கி உள்ளது. இதனால் தங்கம் விலையும் சரிய தொடங்கி உள்ளது. கடந்த வாரம் 10 லட்சம் அவுன்ஸ் தங்கத்தை விற்றது. அதற்கு முதல் வாரமும் 10 லட்சம் அவுன்ஸ் தங்கத்தை விற்றது.
இதனால் சர்வதேச மார்க்கெட்டில் தங்கத்தின் விலை சரிந்து.. பெரிய சரிவு ஏற்பட்டது. சர்வதேச அளவில் தங்கம் விலை சரிய தொடங்கி உள்ளது. அமெரிக்காவில் ஸ்பாட் தங்கம் ஒரு அவுன்ஸ் 0.9 சதவீதம் குறைந்து $3,289.97 ஆக உள்ளது. அமெரிக்க தங்க எதிர்கால வர்த்தகம் 0.1 சதவீதம் குறைந்து $3,301 ஆக உள்ளது. அமெரிக்க டாலர் குறியீடு 0.3 சதவீதம் உயர்ந்து உள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் உலக வரலாற்றிலேயே மிக நீண்ட தூரம் செல்ல கூடிய தங்க சுரங்கம் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது












Click it and Unblock the Notifications