1st ஹால்ப் ஓவர்.. 2nd ஹால்ப் மோசமாக இருக்கும்.. தங்கம் விலை தாறுமாறாக சரியுமாம்.. வல்லுநர் வார்னிங்

Subscribe to Oneindia Tamil

சென்னை: உலக அளவில் தற்போது தங்கத்தின் விலை சாதனை அளவை எட்டியுள்ளது. சென்னை நகரில் இன்று 1 கிராம் 24 கேரட் தங்கம் விலை ₹12,983 ஆக உள்ளது, இதேபோல் 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை ₹11,901 ஆகவும், 1 கிராம் 18 கேரட் தங்கம் விலை ₹9,831 ஆகவும் உள்ளது.

ஆனால் அடுத்த ஆண்டு இதன் விலை குறையலாம் என்று ANZ வங்கி கணித்துள்ளது. உலகெங்கிலும் நிலவும் அரசியல், பொருளாதார நிச்சயமற்ற தன்மைகள் காரணமாக முதலீட்டாளர்கள் தங்கம் நோக்கி திரும்பியதால், இந்த தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டது.

gold rate silver investment

தங்கத்தின் விலை

அமெரிக்காவில் வட்டி விகித குறைப்பு மற்றும் டாலரின் மதிப்பு பலவீனமடைவது போன்ற காரணிகள் தங்கத்தின் விலைக்கு மேலும் உத்வேகம் அளித்தன. Spot தங்கம் ஒரு அவுன்ஸ் $4,225.69 என்ற புதிய உச்சத்தைத் தொட்ட பிறகு, 0.4% உயர்ந்து $4,224.79 ஆக வர்த்தகமானது. டிசம்பர் மாதத்திற்கான அமெரிக்க தங்க எதிர்கால ஒப்பந்தங்கள் 0.9% அதிகரித்து $4,239.70 ஆக இருந்தது.

நிச்சயமற்ற காலங்களில் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கம், குறைந்த வட்டி விகித சூழல்களில் சிறப்பாக செயல்படும். இந்த ஆண்டு மட்டும் இதன் விலை 61% உயர்ந்துள்ளது. அமெரிக்க டாலர் குறியீடு 0.1% சரிந்து, ஒரு வார குறைந்த நிலைக்கு அருகில் வர்த்தகமானது. இதனால் டாலர் மதிப்பில் தங்கம் வாங்குவது வெளிநாட்டு வாங்குபவர்களுக்கு மலிவானதாக மாறியுள்ளது.

டாலர் மதிப்பில் தங்கம் வாங்குவது

ANZ வங்கி தனது கணிப்பில், இந்த ஆண்டின் இறுதிக்குள் தங்கம் ஒரு அவுன்ஸ் $4,400 ஆக உயரும் என்றும், ஜூன் 2026-க்குள் $4,600 என்ற உச்சத்தை எட்டும் என்றும் தெரிவித்துள்ளது. அமெரிக்க மத்திய வங்கி அதன் வட்டி விகித குறைப்பு சுழற்சியை முடித்த பிறகு, அடுத்த ஆண்டில் தங்கம் விலை குறைய வாய்ப்புள்ளதாகவும் ANZ குறிப்பிட்டது.அதாவது சென்னை நகரில் இன்று 1 கிராம் 24 கேரட் தங்கம் விலை ₹12,983 ஆக உள்ளது, இதேபோல் 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை ₹11,901 ஆகவும், 1 கிராம் 18 கேரட் தங்கம் விலை ₹9,831 ஆகவும் உள்ளது. இது 1 கிராம் 24 கேரட் தங்கம் விலை ₹10000 ஆக குறைய நிறைய வாய்ப்புகள் உள்ளன,

மத்திய வங்கியின் தங்க கொள்முதல், அரசியல் நிச்சயமற்ற தன்மை, வர்த்தக தடைகள், புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் அதிகரித்து வரும் கடன்கள் ஆகியவை தங்கத்தின் மீதான முதலீட்டு ஆர்வத்தை தொடர்ந்து வலுவாக வைத்திருக்கும்.. ஆனால் அது நீடிக்காது. ஒரு course correction தேவைப்படும். அது கண்டிப்பாக அடுத்த வருடம் இரண்டாம் பாதியில் நடக்கும். இதனால் கண்டிப்பாக விலை குறையும் என்று ANZ வங்கி தெரிவித்தது.

மேலும், 2026 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் வெள்ளி ஒரு அவுன்ஸ் $57.50 ஐ எட்டும் என்றும் அந்த வங்கி கணித்துள்ளது. இருப்பினும், அமெரிக்க மத்திய வங்கி கடுமையான நிலைப்பாட்டை எடுத்தால் அல்லது அமெரிக்க பொருளாதார வளர்ச்சி எதிர்பார்ப்பை விட வலுவாக இருந்தால், தங்கம் விலை இன்னும் வேகமாக குறையவும் வாய்ப்புள்ளது என்று ANZ எச்சரித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+