Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரெட் அலர்ட்.. Gold விலை தாறுமாறாக சரிகிறது.. ஆனால் தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்! ஏன்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் விலை கடந்த 2 வாரமாக வேகமாக சரிந்து வருகிறது. சர்வதேச அளவில் தங்கம் விலை சரியும் இந்த சூழல்தான் தங்கம் வாங்க சரியான நேரம் என்று வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜனவரி மாத இறுதியில் தங்கம் விலை அதன் வரலாற்று உச்சத்தைத் தொட்டது, ஜனவரி 29 அன்று ஒரு கிராம் ₹16,800 வரை விற்பனையானது. பிப்ரவரி மாதத் தொடக்கத்தில் இருந்து தங்கம் விலையில் பெரும் வீழ்ச்சி காணப்பட்டது.

gold rate silver investment

ஜனவரி 31 அன்று ஒரு கிராம் ₹14,900 ஆக இருந்த 22 கேரட் தங்கம், பிப்ரவரி 15 அன்று ₹14,560 ஆகக் குறைந்தது. கடந்த 15 நாட்களில் மட்டும் சென்னையில் 22 கேரட் தங்கம் கிராமுக்கு சுமார் ₹340 வரை குறைந்துள்ளது.

ஒரு சவரன் (8 கிராம்) தங்கம் விலையில் கடந்த சில வாரங்களில் ₹2,700-க்கும் மேல் சரிவு ஏற்பட்டுள்ளது. சர்வதேசச் சந்தையில் ஏற்பட்ட பொருளாதார மாற்றங்கள் மற்றும் முதலீட்டாளர்களின் லாப நோக்கம் காரணமாக இந்த விலை சரிவு ஏற்பட்டுள்ளது.

பிப்ரவரி 2 மற்றும் பிப்ரவரி 13 ஆகிய தேதிகளில் தங்கம் விலை கணிசமான அளவு சரிவைச் சந்தித்தது. பிப்ரவரி 13 அன்று ஒரே நாளில் சவரனுக்கு ₹1,500-க்கும் மேல் குறைந்து நகைப்பிரியர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்தது.

ஜனவரி மாதத்தின் அதிகபட்ச விலையோடு ஒப்பிடுகையில், தற்போது தங்கம் விலை சவரனுக்கு ₹10,000-க்கும் மேல் குறைந்து காணப்படுகிறது. இந்த விலை வீழ்ச்சி நகை வாங்குபவர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் ஒரு நல்ல வாய்ப்பாகக் கருதப்படுகிறது.

சென்னை நகரில் இன்று 1 கிராம் 24 கேரட் தங்கம் விலை ₹15,883 ஆக உள்ளது, இதேபோல் 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை ₹14,559 ஆகவும், 1 கிராம் 18 கேரட் தங்கம் விலை ₹12,449 ஆகவும் உள்ளது. சர்வதேச அளவில் 1.6 ட்ரில்லியன் டாலர் தங்க மார்க்கெட்டில் மட்டும் அழிந்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கியின் தங்க இருப்பு ஜனவரி 26, 2025 நிலவரப்படி 880 மெட்ரிக் டன்களைத் தாண்டி, அதன் மொத்த மதிப்பு 95 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டில் உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள் 3,16,000 கிலோகிராம் தங்கத்தை சேர்த்துள்ளன.

தங்கத்தின் விலை உயர்வு

சர்வதேச அளவில் தங்கத்தின் விலை சரிவு மற்றும் உயர்வுக்கு உலகப் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைகளே காரணம் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இது முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளை நாடத் தூண்டியுள்ளது. இந்த நிலை ஒரு எச்சரிக்கை மணி.. அதாவது ஒரு ரெட் அலர்ட் என 'டாக்ஸ் பட்டி' நிறுவனர் சுஜித் பங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

உலக அரசியலில், தங்க மார்க்கெட்டில், பொருளாதாரத்தில் ஏற்படும் மாற்றத்திற்கான சிவப்பு எச்சரிக்கை இது என அவர் எச்சரிக்கிறார். அதாவது World Order மாற்றம் அடைகிறது. தங்கம் விலை இப்போது ஏறி இறங்குவது அதற்கான அறிகுறிதான் என்று 'டாக்ஸ் பட்டி' நிறுவனர் சுஜித் பங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

தங்கம் விலை சரிவு

போன வாரம் வரி புதிய உச்சத்தைத் தொட்டிருந்த தங்கத்தின் விலை திடீரென வீழ்ச்சியடைந்தது. முதலீட்டாளர்கள் லாபத்தை ஈட்டுவதில் முனைப்புக் காட்டினர். அதாவது கையில் உள்ள தங்கத்தை விற்று அதை டாலராக மாற்றும் பணிகளை செய்தனர். இதனால், சந்தையில் தங்கத்தின் விலை வெகுவாகக் குறைந்தது. இந்த திடீர் வீழ்ச்சி தங்கத்தின் தொடர்ச்சியான ஏற்றம் குறித்த நம்பிக்கையில் இருந்த பலரை வியப்படையச் செய்தது.

தங்கம் விலை சரிவு

இந்த கடுமையான வீழ்ச்சிக்கு பல காரணிகள் பங்களித்தன. நீண்டகால ஏற்றத்திற்குப் பிறகு பலர் லாபத்திற்காக தங்கத்தை விற்றது, அமெரிக்கா-சீனா வர்த்தக உறவுகள் போன்ற புவிசார் அரசியல் பதட்டங்கள் குறைதல், அமெரிக்க டாலர் வலுவடைதல், மற்றும் தங்கத்தின் கையிருப்பு அதிகரிப்பு , சில மத்திய வங்கிகள் தங்கத்தை விற்பது ஆகியவை காரணங்கள் ஆகும்.

தங்கத்துடன் சேர்ந்து வெள்ளியின் விலையும் அக்டோபர் 21, 2025 அன்று கடுமையாகச் சரிந்தது. ஒரு அவுன்ஸ் $47.12 ஆகக் குறைந்து, கிட்டத்தட்ட 7.5% வீழ்ச்சியைச் சந்தித்தது. இது வெள்ளியின் விலையில் சமீபத்திய ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப்பெரிய ஒருநாள் சரிவுகளில் ஒன்றாகும். 2013ஆம் ஆண்டிலிருந்து தங்கத்தின் மிகப்பெரிய தினசரி வீழ்ச்சிக்கு இது சமமானதாகக் கருதப்பட்டது.

தங்கம் வாங்க சரியான நேரம்

தங்கம் விலை கடந்த 1 வாரமாக வேகமாக சரிந்து வருகிறது. சர்வதேச அளவில் தங்கம் விலை சரியும் இந்த சூழல்தான் தங்கம் வாங்க சரியான நேரம் என்று வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

அதாவது விலை குறையும் நேரத்தில் தங்கம் சரிகிறது என்று அச்சப்படாமல்.. தங்கத்தை வாங்க வேண்டும். இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு தங்கம் வாங்க வேண்டும். அப்படி வாங்கும் போது வரும் காலங்களில் தங்கம் உயரும் போது அது நல்ல பலன் அளிக்கும் என்று வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+