Gold Price: தடாலடியாக சரிந்த தங்கம் விலை.. ஒரே நாளில் ரூ.1,200 குறைந்தது.. சென்னையில் இன்றைய ரேட் என்ன?
சென்னை: தங்கம் விலை கடந்த இரண்டு நாட்களாக உயர்ந்து வந்தது. வரும் 20 ஆம் தேதி அட்சய திருதியை நாள் வருவதால் அன்று தங்கம் வாங்க பலரும் திட்டமிட்டு இருக்கின்றனர். இந்த சூழலில் நேற்றும் தங்கம் விலை அதிகரித்ததால் இன்றாவது குறையுமா என நகை பிரியர்கள் எதிர்பார்த்து இருந்தனர். இந்த நிலையில் தடாலடியாக இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,200 குறைந்து இருப்பதால் நகை பிரியர்கள் குஷியடைந்துள்ளனர்.
கடந்த ஆண்டு ஜனவரியில் இருந்து தினம் தினம் உச்சம் பெற்ற தங்கம் விலை இந்த ஆண்டின் தொடக்கத்திலும் வரலாற்றில் இல்லாத அளவாக உயர்ந்தது. இதுவரை இல்லாத அளவாக ஒரு சவரன் பிப்ரவரி மாதம் ரூ.1.30 லட்சத்தை தொட்டு ஷாக் கொடுத்து இருந்தது. ஆனால் அதன்பிறகு தங்கம் விலை சற்று சரியத் தொடங்கியது.

உயரும் தங்கம் விலை
பின்னர் ஏற்ற இறக்கத்துடன் தங்கம் விலை காணப்பட்டது. இதற்கிடையே கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுத்ததாலும், டாலர் மதிப்பு குறைவு ஆகிய காரணங்களினாலும் தங்கம் விலை சற்று சரியத் தொடங்கியது. மார்ச் மாதத்தின் முதல் 15 நாட்களுக்கு தங்கம் விலை தினமும் குறைந்துகொண்டே சென்றது.
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில நாட்களாக அதிக ஏற்றத் தாழ்வுடன் காணப்படுகின்றன. குறிப்பாக அமெரிக்கா-ஈரான் இடையேயான மோதல் முடிவுக்கு வரும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதால் முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தின் பக்கம் திரும்பியுள்ளது. வரும் நாட்களில் தங்கத்தின் விலை மீண்டும் உச்சத்தை தொடலாம் என நிபுணர்கள் தெரிவித்து வருகிறார்கள்.
இன்று விலை குறைந்தது
நேற்று முன் தினம் ஆபரணத் தங்கம் சென்னையில் ஒரு கிராம் ரூ.100 உயர்ந்து ரூ. 14,320க்கும், சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,14,560-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்றும் விலை சற்று உயர்ந்தது. அதன்படி, ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 14,360-க்கும், சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,14,880-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
அட்சய திருதியை வரும் 20 ஆம் தேதி என்பதால் அது வரை தங்கம் விலை உயராமல் இருக்க வேண்டும் என நகை பிரியர்கள் எதிர்பார்த்து உள்ளனர். இதனால் இன்றைய விலை எப்படி இருக்குமோ என எதிர்பார்த்த நிலையில் தங்கம் விலை இன்று அதிரடியாக சரிந்துள்ளது. இன்று ஒரே நாளில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.1,200 குறைந்து ரூ.ரூ.1,13,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் இன்று ரூ.150 குறைந்து ரூ.14,210-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை திடீரென குறைந்து இருப்பதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வெள்ளி விலை இன்று மாற்றமில்லை. இதன்படி சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.275-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்:
17.04.2026 - ஒரு சவரன் ரூ.1,13,680 (இன்று)
16.04.2026 - ஒரு சவரன் ரூ. 1,14,880 (நேற்று)
15.04.2026 - ஒரு சவரன் ரூ. 1,14,560
14.04.2026 - ஒரு சவரன் ரூ.1,13,760
13.04.2026 - ஒரு சவரன் ரூ.1,12,480
12.04.2026 - ஒரு சவரன் ரூ. 1,12,800
11.04.2026 - ஒரு சவரன் ரூ.1,12,800
10.04.2026 - ஒரு சவரன் ரூ.1,13,000
09.04.2026 - ஒரு சவரன் ரூ.1,12,000
08.04.2026 - ஒரு சவரன் ரூ.1,13,600
07.04.2026 - ஒரு சவரன் ரூ.1,10,880
06.04.2026 - ஒரு சவரன் ரூ.1,11,920 (பிற்பகல்)
06.04.2026 - ஒரு சவரன் ரூ.1,10,480 (காலை)
05.04.2026 - ஒரு சவரன் ரூ.1,11,600 (நேற்று)
04.04.2026 - ஒரு சவரன் ரூ.1,11,600
03.04.2026 - ஒரு சவரன் ரூ.1,10,800
02.04.2026 - ஒரு சவரன் ரூ.1,10,000 (மாலை)
02.04.2026 - ஒரு சவரன் ரூ.1,11,600 (காலை)
01.04.2026 - ஒரு சவரன் ரூ.1,12,400














Click it and Unblock the Notifications