Gold rate today: தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்தது.. நகை பிரியர்களுக்கு ஷாக்.. இன்றைய ரேட் எவ்வளவு?
சென்னை: தங்கம் விலை (Gold rate today) கடந்த 12 நாட்களாக விலை குறைந்து வருகிறது. கடந்த 8 ஆம் தேதி ஒரு சவரன் ரூ. 75,760 என்ற அளவில் விற்பனை ஆன நிலையில், இது தற்போது தொடர்ச்சியாக குறைந்து வருகிறது. நேற்றும் தங்கம் விலை குறைந்து நகை பிரியர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து நகை பிரியர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
தங்கத்தை பொறுத்தவரை தொடர்ந்து விலை அதிகரித்தே வருகிறது. இந்த ஆண்டின் துவக்கத்தில் தங்கம் விலை ஒரு கிராம் ரூ. 7,150 ஆகவும், ஒரு சவரன் தங்கத்திற்கு இது ரூ. 57,200 என்று விற்பனை செய்யப்பட்டது. இதுவே கடுமையான விலை உயர்வாக பார்க்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ராக்கெட் வேகத்தில் தங்கம் விலை உயரந்தது.

குறைந்து வரும் தங்கம் விலை
தினம் தினம் புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை நகை பிரியர்களை கலங்கடித்தது. சர்வதேச அளவில் நிலவும் போர் பதற்றம், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நடத்திய வரி யுத்தம் என பல்வேறு காரணிகள் இதற்கு சொல்லப்பட்டது. பலரும் தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக வாங்கி குவிக்க தொடங்கியதாலும் தங்கம் விலை உச்சம் தொட ஆரம்பித்தது. கடந்த 8 ஆம் தேதி ஒரு சவரன் ரூ.75,760- ஆக விற்பனையானது.
தங்கம் விலையில் இது புதிய உச்சமாக அமைந்தது. அதன்பிறகு கொஞ்சம் ஆறுதல் கொடுக்கும் விதமாக தங்கம் விலை சரிந்து வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தங்கம் விலை சரிந்து வருவது நகை பிரியர்களுக்கு கொஞ்சம் நிம்மதியாக உள்ளது. ஆவணி மாதம் தொடங்கி விட்டது. கல்யாண சீசன் ஆரம்பித்துள்ளதால், நகை வாங்குவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
இன்றைய ரேட் என்ன?
இந்த சூழலில் தங்கம் விலை குறைந்து வருவது அவர்களுக்கு கொஞ்சம் ஆறுதலாக உள்ளது. இந்நிலையில், நேற்றும் தங்கம் விலை சரிவை சந்தித்தது. அதன்படி, கிராமுக்கு ரூ. 55 குறைந்து ரூ. 9,180-க்கும், சவரன் ரூ. 440 குறைந்து ரூ. 73,440-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனால், தங்கம் விலை இன்றும் குறையுமா என்ற எதிர்பார்ப்பு நகை பிரியர்கள் இடையே ஏற்பட்டு இருந்தது.
இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் ஒரு சவரன் தங்கம் ரூ.440 அதிகரித்துள்ளது. அதன்படி சென்னையில் இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.440 உயர்ந்து ரூ. 73,840க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் சென்னையில் இன்று ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,230-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் இன்று ஒரு கிராம் ரூ.1 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.126-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 12 நாட்களாக குறைந்து வந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிகரித்துள்ளது நகை பிரியர்களை கலக்கமடைய செய்துள்ளது.
கடந்த சில நாட்களின் தங்கம் விலை நிலவரம்:
21.08.2025 - ஒரு சவரன் ரூ.73,840 (இன்று)
20.08.2025 - ஒரு சவரன் ரூ.73,440 (நேற்று)
19.08.2025 - ஒரு சவரன் ரூ.73,880
18.08.2025 - ஒரு சவரன் ரூ.74,200
17.08.2025 - ஒரு சவரன் ரூ.74,200
16.08.2025 - ஒரு சவரன் ரூ.74,200
15.08.2025 - ஒரு சவரன் ரூ.74,240
14.08.2025 - ஒரு சவரன் ரூ.74,320
13.08.2025 - ஒரு சவரன் ரூ.74,320
12.08.2025 - ஒரு சவரன் ரூ.74,360
11.08.2025- ஒரு சவரன் ரூ.75,000
10.08.2025 - ஒரு சவரன் ரூ.75,560
09.08.2025 - ஒரு சவரன் ரூ.75,560
08.08.2025 - ஒரு சவரன் ரூ.75,760
07.08.2025 - ஒரு சவரன் ரூ.75,200
06.08.2025 - ஒரு சவரன் ரூ. 75,040
05.08.2025 - ஒரு சவரன் ரூ.74,960
04.08.2025 - ஒரு சவரன் ரூ.74,360
03.08.2025 - ஒரு சவரன் ரூ.74,320
02.08.2025 - ஒரு சவரன் ரூ.74,320
01.08.2025 - ஒரு சவரன் ரூ.73,200
31.07.2025 - ஒரு சவரன் ரூ.73,360
31.07.2025 - ஒரு சவரன் ரூ.73,360
30.07.2025 - ஒரு சவரன் ரூ. 73,680
29.07.2025 - ஒரு சவரன் ரூ.73,200
28.07.2025 - ஒரு சவரன் ரூ.73,280
27.07.2025 - ஒரு சவரன் ரூ.73,280
26.07.2025 - ஒரு சவரன் ரூ.73,280
25.07.2025 - ஒரு சவரன் ரூ.73,680
24.07.2025 - ஒரு சவரன் ரூ.74,040
23.07.2025 - ஒரு சவரன் ரூ.75,040
22.07.2025 - ஒரு சவரன் ரூ.74,280
21.07.2025 - ஒரு சவரன் ரூ.73,440
20.07.2025 - ஒரு சவரன் ரூ.73,360
19.07.2025 - ஒரு சவரன் ரூ.73,360
18.07.2025 - ஒரு சவரன் ரூ.72,880
17.07.2025 - ஒரு சவரன் ரூ.72,840
16.07.2025 - ஒரு சவரன் ரூ.72,800
15.07.2025 - ஒரு சவரன் ரூ.73,240.












Click it and Unblock the Notifications