Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை
சென்னை: தங்கம் விலை (gold price) கடந்த ஒரு வாரமாக கடகடவென சரிந்து வந்தது. இன்று ஒரே நாளில் 3 முறை தங்கம் விலை மாறியது. காலை, பிற்பகல் என இரு வேளையும் குறைந்த தங்கம் விலை அதற்கெல்லாம் சேர்த்து வைத்து மாலையில் திடீரென உயர்ந்தது. இந்த நிலையில் தான் தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொட உள்ளது என்றும், இனி குறையாது.. நாளுக்கு நாள் உச்சம் தொடும் என்றும் நகை வியாபாரி சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியுள்ளார்.
போர் சூழல் காரணமாக கச்சா எண்ணெய் மீதான முதலீடு அதிகரித்து வருகிறது. கச்சா எண்ணெய் சார்ந்த தொழில்களில் பங்குச்சந்தை முதலீடுகள் அதிகரித்து வருவதும் தங்கம் விலை சரிவு ஒரு காரணமாக உள்ளது.

திடீரென உயர்ந்த தங்கம் விலை
தங்கம் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் உயர்ந்து இருக்கிறது. கடந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை உயரத் தொடங்கியது. நடப்பு ஆண்டிலும் ஜனவரி, பிப்ரவரி தொடக்கத்தில் தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து நகை பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கடந்த ஆண்டு ஜனவரியில் ஒரு சவரன் தங்கம் சென்னையில் ரூ.57 ஆயிரம் என இருந்தது.
ஆனால் அடுத்த ஒரு ஆண்டில் கடந்த ஜனவரி மாதம் அப்படியே அதிகரித்து ஒரு லட்சத்தை தொட்டது. தொடர்ந்து பிப்ரவரி தொடக்கத்திலும் மளமளவென தங்கம் விலை அதிகரித்தது. ஆனால் அதற்கு பிறகு தங்கம் விலை ஏறுவதும், பின்னர் இறங்குவதுமாக இருந்தது. ஈரான் மீது அமெரிக்கா தாக்குதலை தொடர்ந்த பிறகு தங்கம் விலை மேலும் ஏறும் என நினைத்த நிலையில், மாறாக தங்கம் விலை கடகடவென சரியத் தொடங்கியது.
ஒரு சவரன் சென்னையில் ரூ.1.17 லட்சத்திற்கு விற்பனை ஆன நிலையில் தொடர்ந்து சரிந்து வந்து இன்று 1.03 லட்சம் என்ற அளவுக்கு குறைந்தது. குறிப்பாக இன்று ஒரே நாளில் தங்கம் விலை மூன்று முறை மாறியது. அதாவது, காலை மற்றும் பிற்பகலில் தங்கம் விலை சரிந்து நகைப் பிர்யர்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்திருந்தது. ஆனால் மாலையில் திடீர் ஷாக் கொடுத்தது. அதாவது சவரனுக்கு ரூ.5,680 அதிகரித்து அதிர்ச்சி கொடுத்தது.
ஒரு சவரன் ரூ.2 லட்சத்தை தொடும்
ஈரானுடனான போரை 5 நாட்கள் ஒத்தி வைப்பதாக அதற்கு முன்னர் தான் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்து இருந்தார். இதையடுத்து தான் தங்கம் விலை உயரத் தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தங்கம் விலை இனிமேல் உயருமா? அல்லது குறையுமா? என நகை பிரியர்கள் குழப்பமடைந்துள்ளனர். இந்த நிலையில் தங்கம் விலை இனி குறையவே குறையாது.. ஒரு சவரன் ரூ.2 லட்சத்தை எட்டும் என சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கத் தலைவரான ஜெயந்திலால் சலானி கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது:- உலகம் முழுவதும் ஒரு அமைதியற்ற சூழல் உள்ளது. எல்லா நாடுகளும் ஒரு சிக்கலை சந்தித்து வருகின்றன. இதுபோன்ற சூழ்நிலையில்தான் தங்கத்தின் மீதான முதலீடு சரிந்து வருவதும் அதன் விலை சர்வதேச அளவில் குறைந்து வருவதுமாக நீடிக்கிறது. இந்த விலை சரிவு ஓரிரு நாட்கள் நீடிக்கும். ஏனெனில் ரம்ஜான் பண்டிகை முடிந்த பிறகு ஈரான் -அமெரிக்கா போர் முடிவுக்கு வரும் என்ற ஒரு நம்பிக்கை நிலவியது.
1 லட்சம் வரை சரிய வாய்ப்பு
இதன் காரணமாக தொடர்ந்து விலை குறைவு நடந்துள்ளது. ரம்ஜான் முடிந்துள்ள நிலையில், பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பேச்சுவார்த்தை முடிந்து சுமுக முடிவு எட்டப்பட்டு இயல்பு நிலை திரும்பினால் தங்கம் விலை மீண்டும் உயரும். ஏறக்குறைய ஒரு சவரன் 1 லட்சமாக வரும் வரை அளவுக்கு சரிவுகளை எதிர்பார்க்கலாம்.
இருந்தாலும் விரைவாக இந்த நிலை எட்டப்பட்டால், மீண்டும் தங்கம் விலை உயரத்தொடங்கும். தங்கம் விலை குறைந்து இருப்பதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விலை குறைந்து வருவதால் அதிக அளவில் தங்கம் வாங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது. தங்கத்தின் மீதான முதலீடு செய்தவர்கள் இந்த விலை சரிவினால் கவலைப்பட மாட்டார்கள்.
இப்போதே தங்கத்தை வாங்கிடுங்க
ஏனென்றால் நீண்ட கால முதலீடு அடிப்படையில்தான் தங்கத்தை தேர்வு செய்து இருப்பார்கள். நீண்ட கால முதலீடாக பார்க்கப்பட்டால் நிச்சயமாக அது பாதிப்பை ஏற்படுத்தாது. ஏனென்றால் போர் முடிந்து இயல்பு நிலை திரும்பிவிட்டால் தங்கம் விலை முன்பு இருந்ததை விட மிக அதிகமாக செல்லும். இதனால் அவர்களின் முதலீடுக்கு எந்த பாதிப்பும் வராது.
ஆனால் இனி தங்கம் விலை நிற்காது.. வேகமாக உயரத் தொடங்கும். கச்சா எண்ணெய் மீது முதலீடு செய்து வந்தவர்கள் இனிமேல் தங்கத்தின் மீது முதலீடு செய்ய வாய்ப்பு உள்ளது. இதனால் தங்கம் விலை ரூ.2 லட்சத்தை கூடிய விரைவில் தொடும். எனவே இப்போதே நகை வாங்க நினைப்பவர்கள் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். இனி தங்கம் விலை தாறுமாறாக உயர வாய்ப்பு உள்ளது" என்று கூறினார்.
-
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
படக்குனு 10 கிராம் வாங்கிப் போடுங்க மக்களே! சட்டுனு சரிந்த தங்கத்தின் விலை.. இன்னும் சரியப் போகுதாம் -
20% வரை சரிந்த தங்கம் விலை! ஆனாலும் இந்தியாவுக்கு முழு பலன் கிடைக்காது! நிபுணர்கள் சொல்லும் விளக்கம் -
சட்டுபுட்டுனு அள்ளிப் போடுங்க! தங்கத்தை வாங்கி குவிக்கும் ரிசர்வ் வங்கிகள்.. குறுக்கே வந்த மலேசியா! -
Gold Rate: தங்கம் விலை சரிவு! ஆனாலும் 1 லட்சத்திற்கு கீழே இறங்காது போலயே! -
Gold Rate Today: திடீர் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. குறைந்த வேகத்தில் மீண்டும் உயர்வு! மாலையில் அதிர்ச்சி! -
தயவு செஞ்சு குறைஞ்சுடாத தங்கமே.. மீண்டும் திருப்பி வைக்க முடியாது.. தங்கம் விலை சரிவால் ட்விஸ்ட் -
Gold Price: ஒரே நாளில் 7,000 சரிந்த தங்கம்.. இப்போ வாங்குறது சரியாக இருக்குமா? நிபுணர்கள் சொல்வது என்ன? -
கன்னியாகுமரியில் 45 சவரன் தங்கம்.. கப்பல் என்ஜினியர் வீட்டில் திருடன் கொடுத்த ஒற்றை க்ளூ -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி














Click it and Unblock the Notifications