Gold Rate in Coimbatore: ‘டபுள் ஷாக்’ கொடுத்த தங்கம்.. மதியம் மீண்டும் விலை உயர்வு! கோவை, மதுரையில் இன்று என்ன ரேட்?

Subscribe to Oneindia Tamil

மதுரை: தங்கம் விலை இன்று கோவை மற்றும் மதுரையில் சவரனுக்கு ரூபாய் 1,480 உயர்ந்துள்ளது. நேற்று தங்கம் ஒரு சவரன் ரூபாய் 65,800க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ரூபாய் 67,280 ஆக உயர்ந்துள்ளது.

தங்கத்தின் விலையானது கடந்த சில மாதங்களில் கிடு கிடுவென உயர்ந்து புதிய உச்சத்தை எட்டி வந்தது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளதன் விளைவாகவே இந்திய சந்தையில் தங்கம் விலை பெரிய அளவில் உயர்ந்து வந்தது.

Gold Price Up in Madurai and Coimbatore Rs 520 Increase Shocks Buyers

கடந்த சில மாதங்களிலேயே ஆபரண தங்கம் சவரன் ஒன்றுக்கு 15 ஆயிரம் ரூபாய் வரை அதிகரித்துள்ளது. தொடர்ந்து புயல் வேகத்தில் தங்கம் விலை அதிகரித்து வந்ததன் காரணமாக நகைப் பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் இன்று மீண்டும் டபுள் ஷாக் கொடுத்துள்ளது தங்கம்.

கடந்த 5 நாட்களில்

தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. கடந்த சில வாரங்களாக தொடர்ந்து உச்சத்தில் இருந்த தங்கத்தின் விலை கடந்த 5 நாட்களில் குறைந்து வந்தது. கடந்த 5 நாட்களில் மட்டும் ரூபாய் 2,680 என்ற அளவுக்கு தங்கம் விலை குறைந்தது.

தங்கம் விலை கடந்த 4 ஆம் தேதி ரூ.160 குறைந்து ரூ.8,400-க்கும், சவரனுக்கு ரூ.1,280 குறைந்து ரூ.67,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து 5 ஆம் தேதி கிராமுக்கு ரூ.90 குறைந்து ரூ.8,310-க்கும், சவரனுக்கு ரூ.720 குறைந்து ரூ.66,480 விற்பனையானது. தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ.8,285-க்கும், கிராமுக்கு ரூ.200 குறைந்து ரூ.66,280-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்று 2 முறை விலை உயர்வு

தங்கம் விலை நேற்று (ஏப்8) மீண்டும் அதிரடியாக குறைந்தது. அதன்படி, ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.8,225-க்கும், சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.65,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி ஒரு கிராம் ரூ.1 குறைந்து ரூ.102-க்கு விற்பனையானது.

இந்நிலையில், 5 நாட்களுக்குப் பிறகு இன்று தங்கம் விலை மீண்டும் உயர்வை நோக்கித் திரும்பி உள்ளது. கோவை மதுரையில் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.8,290க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு சவரன் தங்கம் ரூ.66,320க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் தற்போது இரண்டாம் முறையாக தங்கம் விலை உயர்ந்துள்ளது. இன்று காலையில் வணிகம் தொடங்கியதும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்த நிலையில் இன்று வணிகம் நிறைவடையும் போது மீண்டும் சவரனுக்கு ரூ.960 உயர்ந்துள்ளது.

இன்று மதிய நிலவரப்படி, 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.120 அதிகரித்து ஒரு கிராம் தங்கம் ரூ.8,410-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.960 உயர்ந்து ரூ.67,280-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மதுரை, கோவை - இன்றைய 22 காரட் தங்க விலை நிலவரம்

1 கிராம் - ரூபாய் 8,410

1 சவரன் - ரூபாய் 67,280

மதுரை, கோவை - இன்றைய 24 காரட் தங்க விலை நிலவரம்

1 கிராம் - ரூபாய் 9,044

1 சவரன் - ரூபாய் 72,352

மதுரை, கோவை - இன்றைய 18 காரட் தங்க விலை நிலவரம்

1 கிராம் - ரூபாய் 6,935

1 சவரன் - ரூபாய் 55,480

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+