Gold Rate Today: நகைப் பிரியர்களுக்கு குட் நியூஸ்.. குறைந்தது தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா?
சென்னை: சென்னையில் தங்கத்தின் விலை ஞாயிற்றுக்கிழமையான நேற்று மார்க்கெட் விடுமுறை என்பதால் ஒரு சவரன் ரூ 74,520-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ரூ 9,315-க்கு விற்கப்பட்டது. இந்நிலையில், இன்று மார்கெட் திறந்தது தங்கத்தின் விலை என்னவாக இருக்குமோ என்ற நிலையில், நகைப் பிரியர்களுக்கு குட் நியூஸ் கிடைத்துள்ளது. சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 குறைந்துள்ளது. ஒரு சவரன் ரூ. 74,440 க்கு விற்பனை செய்யப்படவுள்ளது. ஒரு கிராம் தங்கம் விலை கிராமுக்கு ரூ. 10 குறைந்து ரூ. 9,305-க்கு விற்கப்படுகிறது
தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. டிரம்ப் பதவியேற்பு, உலகில் பல்வேறு பகுதிகளில் நடக்கும் போர் உள்ளிட்ட காரணங்களால் சர்வதேச பொருளாதார சந்தைகளில் தங்கத்தின் விலை ஏற்றம், இறக்கம் என மாறிக் கொண்டே வருகிறது. அண்மைக்காலமாக தங்கத்தின் விலை ரூ. 74 ஆயிரம், ரூ. 75 ஆயிரம் என உயர்ந்து கொண்டே இருப்பது நகைப் பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜூலை மாதம் தங்கத்தின் விலை குறைந்தபட்சமாக 7 ஆம் தேதி ஒரு சவரன் ரூ.72,080-க்கு விற்பனையாகியுள்ளது. அதிகபட்சமாக 23ஆம் தேதி ஒரு சவரன் ரூ. 75,040- க்கு விற்பனையானது. கடந்த ஏப்ரல் மாதம் ரூ 75 ஆயிரத்தை தங்கம் விலை நெருங்கிய நிலையில் இந்த ஜூலை மாதத்தில் ரூ 75 ஆயிரத்தை தாண்டியது.
ஆகஸ்ட் 24 ஆம் தேதியான நேற்று ஞாயிற்றுக்கிழமை மார்க்கெட் விடுமுறை என்பதால் தங்கம் விலையில் மாற்றமில்லாமல் ஒரு கிராம் ரூ 9,315-க்கும், சவரனுக்கு ரூ. 800 உயர்ந்து ஒரு சவரன் ரூ 74,520-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், ஆகஸ்ட் 25 ஆம் தேதியான இன்று சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 80 குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 74,440 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ. 10 குறைந்து ஒரு கிராம் தங்கம் விலை ரூ. 9,305-க்கு விற்கப்படுகிறது. அதேபோல, வெள்ளி கிராமுக்கு ரூ. 1 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 131க்கு விற்பனை செய்யபடுகிறது.
கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் தங்கத்தின் விலையை பார்க்கலாம்:
25.08.2025-ஒரு சவரன் ரூ.74,440
24.08.2025-ஒரு சவரன் ரூ.74,520
23.08.2025-ஒரு சவரன் ரூ.74,520
22.08.2025-ஒரு சவரன் ரூ.73,720
21.08.2025-ஒரு சவரன் ரூ.73,840
20.08.2025 - ஒரு சவரன் ரூ.73,440
19.08.2025 - ஒரு சவரன் ரூ.73,880
18.08.2025 - ஒரு சவரன் ரூ.74,200
17.08.2025 - ஒரு சவரன் ரூ.74,200
16.08.2025 - ஒரு சவரன் ரூ.74,200
15.08.2025 - ஒரு சவரன் ரூ.74,240
14.08.2025 - ஒரு சவரன் ரூ.74,320
13.08.2025 - ஒரு சவரன் ரூ.74,320
12.08.2025 - ஒரு சவரன் ரூ.74,360
11.08.2025- ஒரு சவரன் ரூ.75,000
10.08.2025 - ஒரு சவரன் ரூ.75,560
09.08.2025 - ஒரு சவரன் ரூ.75,560
08.08.2025 - ஒரு சவரன் ரூ.75,760
07.08.2025 - ஒரு சவரன் ரூ.75,200
06.08.2025 - ஒரு சவரன் ரூ.75,040
05.08.2025 - ஒரு சவரன் ரூ.74,960
04.08.2025 - ஒரு சவரன் ரூ.74,360
03.08.2025 - ஒரு சவரன் ரூ.74,320
02.08.2025 - ஒரு சவரன் ரூ.74,320
01.08.2025 - ஒரு சவரன் ரூ.73,200












Click it and Unblock the Notifications