Gold Rate Today: தங்கம் விலையில் இன்று லக்தான்! சென்னையில் நகைக் கடைக்கு விரையும் மக்கள்!
சென்னை: சென்னையில் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 6) எந்தவித மாற்றமும் இல்லாமல் ஒரு சவரன் ரூ 73,040-க்கு விற்பனையாகிறது. பொதுவாக சனிக்கிழமைகளில் தங்கம் விலை மாற்றமில்லாமல் இருக்கும். ஆனால் இன்று வெள்ளிக்கிழமையே தங்கம் விலையில் மாற்றமில்லை.
சர்வதேச பொருளாதார சந்தைகளில் தங்கத்தின் விலை மாறிக் கொண்டே வருகிறது. இதன் விலை ஏறவும் செய்கிறது. இறங்கவும் செய்கிறது. இதற்கு காரணமாக அமெரிக்கா அதிபராக டிரம்ப் பதவியேற்றது, உலகில் பல்வேறு இடங்களில் நடக்கும் போர் உள்ளிட்டவைகளால் தங்கம் விலை அதிகரித்து வருகிறது.

கடந்த மே மாதம் தங்கத்தின் விலை குறைந்தபட்சமாக 15 ஆம் தேதி ஒரு சவரன் ரூ.68,880-க்கு விற்பனையாகியுள்ளது. அதிகபட்சமாக 8ஆம் தேதி ஒரு சவரன் ரூ.73,040 க்கு விற்பனையாகிறது. கடந்த ஏப்ரல் மாதம் ரூ 75 ஆயிரத்தை தங்கம் விலை நெருங்கிய நிலையில் இந்த மாதம் அது போன்று எதுவும் நடக்கவில்லை.
ஜூன் 6 ஆம் தேதியான இன்று தங்கம் விலையில் மாற்றமில்லாமல் ஒரு கிராம் ரூ 9,130-க்கும் ஒரு சவரன் ரூ 73,040-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த ஜூன் 1 ஆம் தேதி முதல் தங்கத்தின் விலையை பார்க்கலாம்:
06.06.2025- ஒரு சவரன் ரூ.73,040
05.06.2025- ஒரு சவரன் ரூ.73,040
04.06.2025- ஒரு சவரன் ரூ.72,720
03.06.2025- ஒரு சவரன் ரூ.72,640
02.06.2025- ஒரு சவரன் ரூ.71,600
01.06.2025- ஒரு சவரன் ரூ.71,360
31.05.2025- ஒரு சவரன் ரூ.71,360
30.05.2025- ஒரு சவரன் ரூ.71,360
29.05.2025- ஒரு சவரன் ரூ.71,160












Click it and Unblock the Notifications