Gold Rate Today: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. நேற்று குறைந்து இன்று அதிகரிப்பு.. இன்றைய ரேட் என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் விலை விண்ணை முட்டும் அளவுக்கு கிடுகிடுவென உயர்ந்து வந்த நிலையில் நேற்று அதிரடியாக சரிந்தது. ஒரே நாளில் இரண்டு முறை தங்கம் விலை அதிரடியாக சரிந்தது நகை பிரியர்களை குஷியில் ஆழ்த்தியது. நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 2,360 குறைந்து இருந்தது. இதனால் இன்றும் தங்கம் விலை குறையும் என பலரும் எதிர்பார்த்த நிலையில், அவர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தங்கம் விலை இன்று சற்று அதிகரித்துள்ளது. சவரனுக்கு ரூ.120 உயர்ந்துள்ளது.

தங்கம் விலை தொடர்ந்து கிடுகிடுவென உயர்ந்து நகை பிரியர்களை கலக்கம் அடைய வைத்து வந்த நிலையில் நேற்று ஒரே நாளில் இரண்டு முறை அதிரடியாக விலை குறைந்து இன்ப அதிரச்சியை கொடுத்தது. நேற்று காலை ஒரு கிராம் தங்கம் ரூ.165-ம், ஒரு பவுன் ரூ.1,320-ம் குறைந்து முறையே, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 880-க்கும், ஒரு சவரன் ரூ.71 ஆயிரத்து 40-க்கும் விற்பனையானது.

gold price Chennai gold

அதிரடியாக சரிந்த தங்கம் விலை

தங்கம் விலை குறைந்தது நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. தங்க நகை வாங்க திட்டமிட்டவர்கள் கூட, விலை குறைந்த நேரத்தில் போய் வாங்கிவிடலாம் என திட்டமிட்டனர். இவர்கள் நகைகடைக்குள் போவதற்குள் மறுபடியும் விலை குறைந்துவிட்டது என சொல்லும் அளவுக்கு மாலையிலும் தங்கம் விலை குறைந்தது. காலை நேர விற்பனையை காட்டிலும் மாலையில் கிராம் ரூ.130-ம், சவரனுக்கு ரூ.1040-ம் குறைந்தது.

இதனால் நேற்று, ஒரு கிராம் தங்கம் ரூ.8 ஆயிரத்து 750-க்கும், ஒரு சவரன் ரூ.70 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது. அந்த வகையில் நேற்று ஒரே நாளில், கிராமுக்கு ரூ.265-ம், சவரனுக்கு ரூ.2,360-ம் தங்கம் விலை குறைந்தது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது.

இன்றைய ரேட் என்ன?

நேற்று ஒரு சவரன் தங்கம் விலை ரூ.70,000 விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ.120 அதிகரித்து ரூ. 70,120க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் நேற்று ரூ.8,750க்கு விற்கப்பட்ட ஒரு கிராம் தங்கம் விலை இன்று ரூ.8,765க்கு விற்பனை செய்யப்படுகிறது.

விலை குறைவுக்கு என்ன காரணம்?

இந்தியா - பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டது. இருநாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் உச்சத்தில் இருந்த போது, பங்குச்சந்தையில் வீழ்ச்சி ஏற்பட்டது. சண்டை நிறுத்தம் ஏற்பட்ட நிலையில், நேற்று பங்குச்சந்தைகளில் கடும் எழுச்சி ஏற்பட்டது. நேற்று பிற்பகலில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 3.36 சதவீதம் உயர்ந்து 82,124 புள்ளிகளில் வர்த்தகமானது. தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 3.46% உயர்ந்து 24,840க்கு வர்த்தகமானது.

பங்கு சந்தையில் ஏற்பட்ட மாற்றமே, ஒரே நாளில் 2 முறை தங்கம் விலை குறைந்திருக்க காரணம் என கூறப்படுகிறது. வெள்ளி விலையை பொறுத்த வரையில், காலையில் கிராம் ரூ.1 குறைந்து ரூ.109-க்கு விற்பனையானது. ஆனால், மாலையில் வெள்ளி மீண்டும் ரூ.1 உயர்ந்து ரூ.110-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிலோ வெள்ளி, ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்துக்கு விற்பனையானது.

73,000 ஆயிரத்தை தாண்டி குறைந்தது

முன்னதாக தங்கம் விலை இந்த மாத தொடக்கத்தில் இருந்தே ஏறுமுகத்துடன் காணப்பட்டது. மே 1 ஆம் தேதி, ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.70 ஆயிரத்து 40-க்கு விற்பனை செய்யப்பட்டது. இது தொடர்ந்து அதிகரித்து, மே 5 ஆம் தேதி சவரனுக்கு, ரூ.71 ஆயிரத்து 200-க்கும், மே 6 ஆம் தேதி சவரனுக்கு ரூ.72 ஆயிரத்து 800க்கும் விற்பனையானது. மே 8 ஆம் தேதி, ஒரு சவரன் ரூ.73 ஆயிரத்து 40-க்கு விற்பனை செய்யப்பட்டது.

அதன்பிறகு, தங்கத்தின் விலை படிப்படியாக குறைய தொடங்கியது. அந்த வகையில் கடந்த 10 ஆம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.9 ஆயிரத்து 45-க்கும், ஒரு சவரன் ரூ.72 ஆயிரத்து 360-க்கும் விற்பனையானது. ஞாயிற்றுகிழமை விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் மாற்றம் இன்றி விற்பனையானது.

தங்கம் விலை நிலவரம்:

13.05.2025 - ஒரு சவரன் ரூ.70,120 (இன்று)
12.05.2025 - ஒரு சவரன் ரூ.70,000 ( நேற்று மாலை)
12.05.2025 - ஒரு சவரன் ரூ.71,040 (நேற்று காலை)
10.05.2025 - ஒரு சவரன் ரூ.72,360
09.05.2025- ஒரு சவரன் ரூ.72,120
08.05.2025 - ஒரு சவரன் ரூ.73,040
07.05.2025 - ஒரு சவரன் ரூ.72,600
06.05.2025 - ஒரு சவரன் ரூ.72,800
06.05.2025 - ஒரு சவரன் ரூ.72,200
05.05.2025 -ஒரு சவரன் ரூ.71,100
05.05.2025 - ஒரு சவரன் ரூ.70,200
04.05.2025 - ஒரு சவரன் ரூ.70,040
03.05.2025 - ஒரு சவரன் ரூ.70,040
02.05.2025 - ஒரு சவரன் ரூ.70,040
01.05.2025 - ஒரு சவரன் ரூ.70,200
30.04.2025 - ஒரு சவரன் ரூ.71,840
29.04.2025 - ஒரு சவரன் ரூ.71,840
28.04.2025 - ஒரு சவரன் ரூ.71,520
27.04.2025 - ஒரு சவரன் ரூ.72,040
26.04.2025 - ஒரு சவரன் ரூ.72,040
25.04.2025 - ஒரு சவரன் ரூ.72,040
24.04.2025- ஒரு சவரன் ரூ.72,040
23.04.2025- ஒரு சவரன் ரூ.72,120
22.04.2025- ஒரு சவரன் ரூ.74,320
21.04.2025- ஒரு சவரன் ரூ.72,120
20.04.2025- ஒரு சவரன் ரூ.71,560.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+