Gold Rate Today: இடியை இறக்கிய தங்கம் விலை.. சென்னையில் இன்றும் ரேட் தாறுமாறாக உயர்ந்தது!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஒவ்வொரு நாளும் தொடர்ந்து உயர்ந்து புதிய உச்சம் தொட்டு வந்தது. இன்றைய தினமும் தங்கம் விலை அதிகரித்தே இருக்கிறது. இன்றைய தினம் சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து, ரூ.94,880க்கு விற்பனை செய்யப்படுகிறது. அமெரிக்கா- சீனா வர்த்தக போர், பெடரல் வங்கி வட்டி குறைப்பு எதிர்பார்ப்பு இதற்குப் பிரதான காரணமாகும்.

நமது நாட்டில் இப்போது திருமண சீசன் என்பதால் பலரும் தங்கம் வாங்கி வருகிறார்கள். இருப்பினும், சமீப காலங்களாகவே தங்கம் விலை உயர்ந்து எங்கேயோ போய்விட்டது. இதனால் மக்களால் எதிர்பார்த்த அளவுக்குத் தங்கம் வாங்க முடியவில்லை. தங்கத்திற்கான செலவு கல்யாண பட்ஜெட்டில் கணிசமாகப் போகும் அளவுக்குத் தங்கம் விலை பறந்துவிட்டது.

Gold Price Gold

காரணம்

தங்கம் விலை உயர புவிசார் அரசியலே பிரதானக் காரணமாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக டிரம்ப் தான் முக்கிய காரணம். கடந்த வாரம் வெள்ளிக்கிழமை சீனா மீது வர்த்தக போரை டிரம்ப் ஆரம்பித்தார். வரும் நவம்பர் 1ம் தேதி முதல் சீனா பொருட்களுக்கு 100% வரி விதிப்பேன் என அவர் அறிவித்தார். சீனாவும் இதற்கு இறங்கிப் போவதாக இல்லை. அமெரிக்கக் கப்பல்களுக்குக் கூடுதல் கட்டணம் வசூலிப்போம் எனச் சொல்லி பதிலடி கொடுத்துள்ளது. இது சர்வதேச வணிக பதற்றத்தை அதிகரித்துள்ளது.

அமெரிக்கா மீட்டிங்

அதேபோல அமெரிக்க மத்திய வங்கியின் கூட்டம் இந்த மாதம் இறுதியில் நடைபெறுகிறது. அதில் வட்டி விகிதம் குறைக்கப்படவே வாய்ப்புகள் அதிகம் எனச் சொல்லப்படுகிறது. அப்படி வட்டி விகிதம் குறைக்கப்பட்டால் டாலர் மதிப்பு சரியும். தங்கம் விலை மேலும் உயரும். அதேபோல அமெரிக்க அரசும் கூட கடந்த இரு வாரங்களாக முடங்கியுள்ளது. அந்த பிரச்சனையும் இப்போதைக்குச் சீராவது போலத் தெரியவில்லை. இவை எல்லாம் சேர்த்தே தங்கம் விலையை எங்கோ புதிய உச்சத்திற்கு எடுத்துப் போய்விட்டது.

விலை என்ன

சரியாக ஒரு மாதத்திற்கு முன்பு அதாவது செப்டம்பர் 16ம் தேதி தங்கம் விலை ஒரு சவரன் ரூ.81,160க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் ஒரே மாதத்தில் தங்கம் விலை கிட்டத்தட்ட ரூ.13,500க்கு மேல் உயர்ந்துவிட்டது. இன்றைய தினம் சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து, ரூ.94,880க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.35 உயர்ந்து ரூ.11,860க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.1 உயர்ந்து, ரூ.207க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில நாட்களாகத் தங்கம் விலை

15.10.2025 - ஒரு சவரன் ரூ.94,880

14.10.2025 - ஒரு சவரன் ரூ.94,600

13.10.2025 - ஒரு சவரன் ரூ.92,640 (மாலை)

13.10.2025 - ஒரு சவரன் ரூ.92,200 (காலை)

12.10.2025 - ஒரு சவரன் ரூ.92,000

11.10.2025 - ஒரு சவரன் ரூ.92,000 (மாலை)

11.10.2025 - ஒரு சவரன் ரூ.91,400 (காலை)

10.10.2025 - ஒரு சவரன் ரூ.90,720 (மாலை)

10.10.2025 - ஒரு சவரன் ரூ.90,080 (காலை)

09.10.2025 - ஒரு சவரன் ரூ.91,400 (மாலை)

09.10.2025 - ஒரு சவரன் ரூ.91,200 (காலை)

08.10.2025 - ஒரு சவரன் ரூ.91,080 (பிற்பகல்)

08.10.2025 - ஒரு சவரன் ரூ.90,400 (காலை)

07.10.2025 - ஒரு சவரன் ரூ.89,600

06.10.2025 - ஒரு சவரன் ரூ.89,000 (மாலை)

06.10.2025 - ஒரு சவரன் ரூ.89,000 (காலை)

05.10.2025 - ஒரு சவரன் ரூ.87,600

04.10.2025 - ஒரு சவரன் ரூ.87,600

03.10.2025- ஒரு சவரன் ரூ 86,720

02.10.2025- ஒரு சவரன் ரூ 87,600 (மாலை)

02.10.2025- ஒரு சவரன் ரூ 87,040 (காலை)

01.10.2025- ஒரு சவரன் ரூ.87,600 (மாலை)

01.10.2025- ஒரு சவரன் ரூ.87,120 (காலை)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+