Gold Rate Today: தங்கம் விலையில் மாற்றமில்லை.. ஒரு சவரன் ரூ.74,320க்கு விற்பனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் தங்கம் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. கடந்த 4 நாட்களாக தொடர்ந்து தங்கம் விலை ரூ.1,440 வரை குறைந்துள்ளது. இன்று தங்கம் விலையில் மாற்றம் இல்லாததால், ஒரு கிராம் ரூ.9,390க்கும், ஒரு சவரன் ரூ.74,320க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகள் தங்கம் விலையை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அமெரிக்கா அதிபராக டொனால்ட் டிரம்ப் வந்த பின், இந்தியாவில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயரத் தொடங்கியது.

gold price gold

தங்கம் விலையை பொறுத்தவரை ஆகஸ்ட் 1ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.73 ஆயிரம் என்று இருந்த நிலையில், அதற்கு அடுத்த நாள் ரூ.74 ஆயிரத்தை தாண்டியது. அதன் பிறகும் விலை உயர்ந்து கொண்டே வந்து, ஆகஸ்ட் 8ஆம் தேதி ரூ.75 ஆயிரத்து 760க்கு விற்பனையானது. ஆடி மாதத்தில் திருமண சீசன் இல்லையென்றாலும், தங்கம் விலை உயர்ந்து கொண்டே சென்று மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

பொதுமக்கள் பலரும் தங்கம் வாங்கலாமா, வேண்டாமா என்ற யோசனைக்கு செல்லும் வகையில் விலையில் ஏற்றம் இருந்தது. குறிப்பாக முகூர்த்த நாட்களுக்கு முன்பாக தங்கம் விலை ஏற்றம் கண்டது. ஆனால் ஆடிப் பெருக்கு முடிவடைந்த பின், வழக்கம் போல் தங்கம் விலை சரியத் தொடங்கியது. ஆவணி மாதம் முழுவதும் திருமண சீசன் என்பதால், பொதுமக்கள் நகைக் கடைகளை நோக்கி செல்ல தொடங்கி இருக்கின்றனர்.

அதற்கேற்ப தங்கம் விலையும் கடந்த 3 நாட்களாக குறைந்து வருகிறது. கடந்த 4 நாட்களில் மட்டும் சுமார் ரூ.1,440 வரை தங்கம் விலை குறைந்திருக்கிறது. நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமிற்கு ரூ.80 குறைந்து ரூ.9,295க்கும், ஒரு சவரனுக்கு ரூ.640க்கு குறைந்து ரூ.74,360க்கும் விற்பனை செய்யப்பட்டது.

அதேபோல் நேற்று தங்கம் விலை கிராமிற்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம், ரூ.9,290க்கும், சவரனுக்கு ரூ.40 குறைந்து ஒரு சவரன் ரூ.74,320க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை இன்றும் குறையும் பட்சத்தில், மக்கள் நகைக் கடையை நோக்கி படையெடுக்க தயாராவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் தங்கம் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை என்று தெரிய வந்துள்ளது.

கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்

13.08.2025 - ஒரு சவரன் ரூ.74,320
12.08.2025 - ஒரு சவரன் ரூ.74,360
11.08.2025 - ஒரு சவரன் ரூ. 75,000
10.08.2025 - ஒரு சவரன் ரூ.75,560
09.08.2025 - ஒரு சவரன் ரூ.75,560
08.08.2025 - ஒரு சவரன் ரூ.75,760
07.08.2025 - ஒரு சவரன் ரூ.75,200
06.08.2025 - ஒரு சவரன் ரூ. 75,040
05.08.2025 - ஒரு சவரன் ரூ.74,960
04.08.2025 - ஒரு சவரன் ரூ.74,360
03.08.2025 - ஒரு சவரன் ரூ.74,320
02.08.2025 - ஒரு சவரன் ரூ.74,320
01.08.2025 - ஒரு சவரன் ரூ.73,200
31.07.2025 - ஒரு சவரன் ரூ.73,360

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+