Gold Rate Today: வரலாறு காணாத உச்சம்.. தங்கம் விலை கிராமுக்கு ரூ.195 உயர்வு.. சவரன் ரூ.74,360-க்கு விற்பனை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த சில நாட்களாக தங்கம் விலை குறைந்து வந்த நிலையில், தற்போது தொடர்ந்து 3வது நாளாக அதிகரித்துள்ளது. தங்கம் கிராமுக்கு ரூ.195 அதிகரித்து ரூ.9,295க்கும், சவரனுக்கு ரூ.1,560 அதிகரித்து, ரூ.74,360க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மீண்டும் தங்கம் வரலாறு காணாத உயர்வை நோக்கி செல்கிறது.

சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகள் தங்கம் விலையை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் வந்த பின், கடந்த சில மாதங்களாக தங்கம் விலை உயரத் தொடங்கியது.

gold price gold

மே மாதம் தொடக்கத்தில் உச்சத்திற்கு சென்ற நிலையில், சாமானிய மக்கள் தங்கம் வாங்க முடியாத அளவிற்கு உயர்ந்தது. இதன்பின் மே மாதம் கடைசியில் மீண்டும் தங்கம் விலை சரியத் தொடங்கியது. திருமண சீசன் தொடங்கிய போது மீண்டும் தங்கம் விலை சரியத் தொடங்கியதால், பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

ஜூன் 11 ஆம் தேதி புதன்கிழமை சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் நேற்று கிராமுக்கு ரூ.75 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,020-க்கும், சவரனுக்கு ரூ.600 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.72,160-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று சென்னையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.640 உயர்ந்தது. சென்னையில் நேற்று தங்கம் விலை ஒரு சவரன் ரூ.72,800க்கு விற்பனை செய்யப்பட்டது. 22 காரட் ஆபரண தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து 9,100க்கு விற்பனையானது.

இந்த நிலையில் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.195 அதிகரித்து, ரூ.9,295க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.1,560 அதிகரித்து, ரூ.74,360க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து 3வது நாளாக தங்கம் விலை அதிகரித்திருப்பதால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக தங்கம் விலை

13.06.025 - ஒரு சவரன் ரூ.74,360

12.06.2025 - ஒரு சவரன் ரூ.72,800

11.06.2025 - ஒரு சவரன் ரூ.72,160

10.06.2025 - ஒரு சவரன் ரூ.71,560

09.06.2025- ஒரு சவரன் ரூ.71,640

08.06.2025- ஒரு சவரன் ரூ.71,840

07.06.2025- ஒரு சவரன் ரூ.71,840

06.06.2025- ஒரு சவரன் ரூ.73,040

05.06.2025- ஒரு சவரன் ரூ.73,040

04.06.2025- ஒரு சவரன் ரூ.72,720

03.06.2025- ஒரு சவரன் ரூ.72,640

02.06.2025- ஒரு சவரன் ரூ.71,600

01.06.2025- ஒரு சவரன் ரூ.71,360

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+