Gold Rate Today: வரலாறு காணாத உச்சம்.. கிராமுக்கு ரூ.25 உயர்வு; ஒரு சவரன் ரூ.74,560க்கு விற்பனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த 3 நாட்களாக தங்கம் விலை உச்சத்திற்கு சென்றுள்ள நிலையில், இன்றும் சவரனுக்கு ரூ.200 உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.25 உயர்ந்துள்ள தங்கம், ஒரு கிராம் ரூ.9,320ஆகவும், சவரனுக்கு ரூ.200 அதிகரித்துள்ள நிலையில், ஒரு சவரன் ரூ.74,560க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகள் தங்கம் விலையை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் வந்த பின், கடந்த சில மாதங்களாக தங்கம் விலை உயரத் தொடங்கியது.

gold price gold

தங்கம் விலை உயர்வு

மே மாதம் தொடக்கத்தில் உச்சத்திற்கு சென்ற நிலையில், சாமானிய மக்கள் தங்கம் வாங்க முடியாத அளவிற்கு உயர்ந்தது. இதன்பின் மே மாதம் கடைசியில் மீண்டும் தங்கம் விலை சரியத் தொடங்கியது. திருமண சீசன் தொடங்கிய போது மீண்டும் தங்கம் விலை சரியத் தொடங்கியதால், பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

புதிய உச்சம்

தற்போது ஜூன் மாதம் 2வது வாரத்தில் இருந்து மீண்டும் தங்கம் விலை அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. ஜூன் 11 ஆம் தேதி புதன்கிழமை சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் நேற்று கிராமுக்கு ரூ.75 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,020-க்கும், சவரனுக்கு ரூ.600 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.72,160-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

ரூ.75 ஆயிரத்தை நெருங்கும் தங்கம்

ஜூன் 12ஆம் தேதி வியாழன் அன்று சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்தது. இதனால் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.72,800க்கு விற்பனை செய்யப்பட்டது. 22 காரட் ஆபரண தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து 9,100க்கு விற்பனையானது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.195 அதிகரித்து ரூ.9,295க்கும், சவரனுக்கு ரூ.1,560 அதிகரித்து ரூ.74,360க்கும் உயர்ந்தது. வரலாறு காணாத உச்சத்தில் இருப்பதால், இன்றும் உயரும் என்று பார்க்கப்படுகிறது.

அதற்கேற்ப இன்று ஒரு கிராமுக்கு ரூ.25 அதிகரித்து சவரனுக்கு ரூ.200 அதிகரித்துள்ளது. இதனால் ஒரு கிராம் தங்கம் ரூ.9,320 ஆகவும், ஒரு சவரன் ரூ.74,560க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் வி ரூ.75 ஆயிரத்தை நெருங்கி இருப்பதால் பொதுமக்கள் கவலையை வெளிப்படுத்தி வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக தங்கம் விலை

13.06.2025 - ஒரு சவரன் ரூ.74,360

12.06.2025 - ஒரு சவரன் ரூ.72,800

11.06.2025 - ஒரு சவரன் ரூ.72,160

10.06.2025 - ஒரு சவரன் ரூ.71,560

09.06.2025- ஒரு சவரன் ரூ.71,640

08.06.2025- ஒரு சவரன் ரூ.71,840

07.06.2025- ஒரு சவரன் ரூ.71,840

06.06.2025- ஒரு சவரன் ரூ.73,040

05.06.2025- ஒரு சவரன் ரூ.73,040

04.06.2025- ஒரு சவரன் ரூ.72,720

03.06.2025- ஒரு சவரன் ரூ.72,640

02.06.2025- ஒரு சவரன் ரூ.71,600

01.06.2025- ஒரு சவரன் ரூ.71,360

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+