Gold Rate Today: எகிறியது தங்கம் விலை.. 3 நாளாக தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் இன்று ரூ.600 உயர்வு

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த 3 நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் இன்று விலை கூடுமா? குறையுமா என நகைப் பிரியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. இந்நிலையில், இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 600 அதிகரித்துள்ளது.

இந்தியாவில் சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகள் தங்கம் விலையை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

Gold price Gold Chennai

தங்கம் விலை நிலவரம்

கடந்த சில மாதங்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை கடந்த ஏப்ரல் மாதம் புதிய உச்சம் தொட்டது. இதையடுத்து மே மாதத்தில் ஏற்ற இறக்கங்களுடன் இருந்து வந்தது. இந்த நிலையில், ஜூன் மாதம் தொடங்கியதில் இருந்தே தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை, கடந்த 3 நாட்களாக சரிவைச் சந்தித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஜூன் 4 ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.72,720க்கும், கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,090க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஜூன் 5 ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.73,040க்கும், கிராமுக்கு ரூ.40 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,130க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த ஜூன் மாதம் தொடங்கி 5 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,680 உயர்ந்தது.

ஒரே நாளில் 1,200 ரூபாய் விலை சரிந்தது

ஜூன் 6 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சென்னையில் தங்கம் விலையில் மாற்றமில்லை. ஜூன் 7 ஆம் தேதி சனிக்கிழமை 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1200 குறைந்து, ஒரு சவரன் ரூ.71,840க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.150 குறைந்து, ஒரு கிராம் ரூ.8,980க்கு விற்பனை செய்யப்பட்டது. அடுத்த நாள் ஜூன் 8 ஞாயிற்றுக்கிழமை மார்க்கெட் விடுமுறை என்பதால் முந்தைய நாளின் விலையிலேயே தங்கம் விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் விலை - நேற்று

ஜூன் 9 ஆம் தேதி திங்கட்கிழமை தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூபாய் 200 குறைந்தது. 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.8,955-க்கும், ஒரு சவரன் ரூ.71,640-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஜூன் 10 ஆம் தேதியான நேற்று (செவ்வாய்க்கிழமை) 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.10 குறைந்து, ஒரு கிராம் ரூ.8,945-க்கும், சவரனுக்கு ரூ.80 குறைந்து, ஒரு சவரன் ரூ.71,560-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

அதேசமயம், 18 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.15 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.7,350-க்கும், சவரனுக்கு ரூ.120 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.58,880-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.119-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,19,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்று தங்கம் விலை மீண்டும் உயர்வு

இன்று தங்கம் விலை கூடுமா? அல்லது குறையுமா? என நகைப் பிரியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.600 உயர்ந்துள்ளது. ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.72,160க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் ஆபரண தங்கம் ஒரு கிராமுக்கு ரூபாய் 75 உயர்ந்து இன்று ரூ.9,020க்கு விற்பனை ஆகிறது.

கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்

11.06.2025 - ஒரு சவரன் ரூ.72,160

10.06.2025 - ஒரு சவரன் ரூ.71,560
09.06.2025 - ஒரு சவரன் ரூ.71,640
08.06.2025- ஒரு சவரன் ரூ.71,840
07.06.2025- ஒரு சவரன் ரூ.71,840
06.06.2025- ஒரு சவரன் ரூ.73,040
05.06.2025- ஒரு சவரன் ரூ.73,040
04.06.2025- ஒரு சவரன் ரூ.72,720
03.06.2025- ஒரு சவரன் ரூ.72,640
02.06.2025- ஒரு சவரன் ரூ.71,600
01.06.2025- ஒரு சவரன் ரூ.71,360
31.05.2025- ஒரு சவரன் ரூ.71,360
30.05.2025- ஒரு சவரன் ரூ.71,360
29.05.2025- ஒரு சவரன் ரூ.71,160

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+