Gold Rate Today: இன்றும் உயர்ந்தது தங்கம் விலை.. நகை பிரியர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!
சென்னை: தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூபாய் 120 உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.9,405க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூபாய் 75,240க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவுகள், உலகில் பல்வேறு பகுதிகளில் நடக்கும் போர் உள்ளிட்ட காரணங்களால் சர்வதேச பொருளாதார சந்தைகளில் தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கம் என மாறிக் கொண்டே வருகிறது. அண்மைக்காலமாக தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே இருப்பது நகைப் பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம் விலை தொடர் உயர்வு
கடந்த ஜூலை மாதம் 7 ஆம் தேதி தங்கத்தின் விலை குறைந்தபட்சமாக ஒரு சவரன் ரூ.72,080-க்கு விற்பனையானது. அதிகபட்சமாக 23ஆம் தேதி ஒரு சவரன் ரூ. 75,040- க்கு விற்பனையானது. கடந்த ஏப்ரல் மாதம் ரூ 75 ஆயிரத்தை தங்கம் விலை நெருங்கிய நிலையில் இந்த ஜூலை மாதத்தில் ரூ 75 ஆயிரத்தை தாண்டியது.
ஆகஸ்ட் 26 ஆம் தேதி நேற்று முன்தினம் ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ 9,355-க்கும், சவரனுக்கு ரூ. 400 உயர்ந்து ஒரு சவரன் ரூ 74,840-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று மீண்டும் தங்கத்தின் விலை ரூ. 75 ஆயிரத்தை தாண்டி அதிர்ச்சி கொடுத்தது.
நேற்றும் இன்றும்
ஆகஸ்ட் 27 ஆம் தேதியான நேற்று சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 280 உயர்ந்தது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 75,120 க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ. 9,390-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூபாய் 120 உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஆபரண தங்கம் கிராமுக்கு ரூபாய் 15 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,405க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூபாய் 75,240க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை நிலவரம்
28.08.2025-ஒரு சவரன் ரூ.75,240
27.08.2025-ஒரு சவரன் ரூ.75,120
26.08.2025-ஒரு சவரன் ரூ.74,840
25.08.2025-ஒரு சவரன் ரூ.74,440
24.08.2025-ஒரு சவரன் ரூ.74,520
23.08.2025-ஒரு சவரன் ரூ.74,520
22.08.2025-ஒரு சவரன் ரூ.73,720
21.08.2025-ஒரு சவரன் ரூ.73,840
20.08.2025 - ஒரு சவரன் ரூ.73,440
19.08.2025 - ஒரு சவரன் ரூ.73,880
18.08.2025 - ஒரு சவரன் ரூ.74,200
17.08.2025 - ஒரு சவரன் ரூ.74,200
16.08.2025 - ஒரு சவரன் ரூ.74,200
15.08.2025 - ஒரு சவரன் ரூ.74,240
14.08.2025 - ஒரு சவரன் ரூ.74,320
13.08.2025 - ஒரு சவரன் ரூ.74,320
12.08.2025 - ஒரு சவரன் ரூ.74,360
11.08.2025- ஒரு சவரன் ரூ.75,000
10.08.2025 - ஒரு சவரன் ரூ.75,560
09.08.2025 - ஒரு சவரன் ரூ.75,560
08.08.2025 - ஒரு சவரன் ரூ.75,760
07.08.2025 - ஒரு சவரன் ரூ.75,200
06.08.2025 - ஒரு சவரன் ரூ.75,040
05.08.2025 - ஒரு சவரன் ரூ.74,960
04.08.2025 - ஒரு சவரன் ரூ.74,360
03.08.2025 - ஒரு சவரன் ரூ.74,320
02.08.2025 - ஒரு சவரன் ரூ.74,320
01.08.2025 - ஒரு சவரன் ரூ.73,200












Click it and Unblock the Notifications