Gold Rate Today: இன்று ஒரே நாளில் ரூ.1000 சரிந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் செம குஷி!
சென்னை: சென்னையில் இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. சவரனுக்கு ரூ.1000 குறைந்து ஒரு சவரன் ரூ.74,040 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.125 குறைந்து ஒரு கிராம் ரூ.9255 க்கு விற்பனை ஆகிறது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவை தங்கத்தின் விலையை நிர்ணயிப்பதில் முக்கியக் காரணிகளாக உள்ளன. அந்த வகையில், ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகவே கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

தங்கம் விலை
கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில் ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.58 ஆயிரமாக இருந்தது. பின்னர் தங்கம் விலை படிப்படியாக உயர்ந்தது. கடந்த ஏப். 22-ல் தங்கம் விலை ரூ.74,320-ஆக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டது. பின்னர், இஸ்ரேல் ஈரான் இடையேயான போரால் ஜூன் 14 ஆம் தேதி ரூ.74,560 என்ற புதிய உச்சத்தை எட்டியது. தொடர்ந்து, தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது.
நேற்று (ஜூலை 23) சென்னையில் ஆபரணத் காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.95 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,380-க்கும், சவரனுக்கு ரூ.760 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.75,040-க்கும் விற்பனை செய்யப்பட்டது. கடந்த ஐந்து நாட்களாக 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வந்தது.
5 நாட்களில் தொடர் அதிகரிப்பு
கடந்த ஐந்து நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,160 அதிகரித்தது. இது நகை வாங்குவோர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், இன்று தங்கம் விலை அதிகரிக்குமா? குறையுமா என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
இந்நிலையில், இன்று (ஜூலை 24) தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 1000 குறைந்துள்ளது. கடந்த 5 நாட்களாக ஏறி வந்த தங்கம் விலை இன்று ஒரே நாளில் அதிரடியாக சரிந்துள்ளது.
இன்று கடும் சரிவு
தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூபாய் 1000 சரிவைக் கண்டுள்ளது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரன் ரூ.74,040க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 125 குறைந்து ரூ.9,255க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.129-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.128-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி 1,28,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த ஜூலை 1 ஆம் தேதி முதல் தங்கத்தின் விலை
24.07.2025 - ஒரு சவரன் ரூ.74,040
23.07.2025 - ஒரு சவரன் ரூ.75,040
22.07.2025 - ஒரு சவரன் ரூ.74,280
21.07.2025 - ஒரு சவரன் ரூ.73,440
20.07.2025 - ஒரு சவரன் ரூ.73,360
19.07.2025 - ஒரு சவரன் ரூ.73,360
18.07.2025 - ஒரு சவரன் ரூ.72,880
17.07.2025 - ஒரு சவரன் ரூ.72,840
16.07.2025 - ஒரு சவரன் ரூ.72,800
15.07.2025 - ஒரு சவரன் ரூ.73,240
14.07.2025 - ஒரு சவரன் ரூ.73,240
13.07.2025 - ஒரு சவரன் ரூ.73,120
12.07.2025 - ஒரு சவரன் ரூ.73,120
11.07.2025 - ஒரு சவரன் ரூ.72,600
10.07.2025 - ஒரு சவரன் ரூ.72,160
09.07.2025 - ஒரு சவரன் ரூ.72,000
08.07.2025 - ஒரு சவரன் ரூ.72,480
07.07.2025 - ஒரு சவரன் ரூ.72,080
06.07.2025 - ஒரு சவரன் ரூ.72,480
05.07.2025 - ஒரு சவரன் ரூ.72,480
04.07.2025 - ஒரு சவரன் ரூ.72,400
03.07.2025 - ஒரு சவரன் ரூ.72,840
02.07.2025 - ஒரு சவரன் ரூ.72,520
01.07.2025 - ஒரு சவரன் ரூ.72,160












Click it and Unblock the Notifications