அடடே.. பெங்களூரில் 38 ஆயிரத்திற்கு ஒரு பவுன் தங்கம் வாங்கி ரூ.57 ஆயிரம் மிச்சம் பிடிக்கும் மக்கள்!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: தங்கத்தின் விலை யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு கடுமையாக தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. இதனால் தங்கத்தை திருமணத்தின் போது சீதனமாகவும், பெண்களுக்கனாக பாதுகாப்பாகவும், கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் அடையாளமாகவும், நீண்ட கால முதலீடாகவும் பார்க்கும் நம் நாட்டு மக்களிடையே பாரம்பரியத் தங்க நகைகளை வாங்குவது சவாலாக மாறியுள்ளது. அதேநேரம் பெங்களூர் மக்கள் பவுனுக்கு 57000 வரை மிச்சம் பிடிக்கிறார்கள்.

22 காரட் தங்கம் விலை ஒரு சவரன் 95000த்தை நெருங்கிவிட்டது.இதன் காரணமாக தங்கத்தை நினைத்தே பார்க்க முடியாத என்று ஏங்கிய மக்களுக்காகே 9 காரட் தங்கம் இப்போது அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை ஏற ஏற 18 காரட், 9 காரட் தங்கம் விற்பனையும் அதிகரித்துள்ளது. பெங்களூருவில், 9-காரட் தங்க நகைகள் ஒரு பவன் 38000 ரூபாய் என்கிற விலையில் விற்கப்படுகிறது. இதனால் 22 காரட், 24 காரட் என்ற உயர்ந்த காரட் நகைகளுடன் ஒப்பிடும்போது, 57,000 ரூபாய் வரை மக்கள் சேமிக்கிறார்கள்.

People in Bangalore buy a pound of gold for 38 thousand and save 57 000 rupees

பெங்களுரில் விருப்பம் ஏன்

இந்த 9 காரட் தங்க நகைகளை பொறுத்தவரை இளைய தலைமுறையினர் அதிகம் விரும்பும் நகையாக இருக்கிறது. 2 கே கிட்ஸ். ஜென் இசட் கிட்ஸ் மத்தியில் 9 காரட் நகைகள் பிரபலமாக இருக்கிறது. ஏனெனில் 9-காரட் நகைகள் மலிவானதாக இருக்கிறது. தினசரி பயன்படுத்த முடியும். கல்லூரி அல்லது வேலைக்குச் செல்வதற்கு ஏற்ற வகையில் இருப்பதால், ஆர்வம் காட்டுகிறார்கள். அதேபோல் இந்த நகைகளில் சில சமயங்களில் ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட வைரங்களும் சேர்க்கப்படுகிறது. இதனால்
தரமான நகைகளை குறைந்த விலையில் பெறுகிறார்கள் 2 கே கிட்ஸ் இளைஞர்கள்.

சென்னையில் நிலைமை வேறு

அதேநேரம் தென்னிந்தியா முழுக்கவோ, இந்தியா முழுக்கவோ 9 காரட் நகைகள் இன்னமும் பிரபலம் ஆகவில்லை. பெங்களூருவில் தான், 9-காரட் நகைகள் மிகவும் பிரபலமாக இருக்கினற்ன. சென்னையை பொறுத்தவரை, வாங்குபவர்கள் இன்னும் தூய தங்கத்தையே ( 22 காரட் ) விரும்புகிறார்கள். எனினும், குறைவான பட்ஜெட் உள்ளவர்கள் சில சமயங்களில் 18 காரட் 14-காரட் தங்கத்தைத் தேர்வு செய்வதும் நடக்கிறது.

ஹால்மார்க் முத்திரை

இது ஒருபுறம் எனில் அண்மையில் மத்திய அரசு 9-காரட் நகைகளுக்கும் ஹால்மார்க் முத்திரை வழங்குவதற்கு ஒப்புதல் அளித்திருக்கிறது. இப்போதைய நிலையில் 916 ஹால்மார்க் முத்திரைகள் கட்டாயாக்கப்பட்டுள்ளது. ஹால்மார்க் முத்திரை இல்லாத நகைககளை விற்க அனுமதி இல்லை.. இதனால் பல பிராண்ட் நிறுவனங்கள ஹால்மார்க் முத்திரையுடன் 22 காரட் நகைகளுடன், 9 காரட் நகைகளையும் தற்போது அதிகமாக தயாரிக்கின்றன. 9 காரட் நகைகளை பொறுத்தவரை அன்றாட மற்றும் திருமணம் உள்ளிட்ட விஷேசங்களுக்கும் ஏற்றவகையில் இருக்கிறதாம்.

கேரளாவில் பிரபலம்

அதேநேரம் கேரளாவை பொறுத்தவரை 22 காரட் தங்க நகைகளையே விரும்புகிறார்க. ஒரு பவுன்" விலை சுமார் ₹94,360 மற்றும் 18-காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு சுமார் ₹9,755க்கும் விற்பனையாகிறது. எனினும் விலை குறைவு காரணமாகக் குறைந்த காரட் தங்கம் வாங்கும் பழக்கம் கேரளாவில் உள்ள இளம் பெண்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் மெதுவாக பிரபலமடைந்து வருகிறது.

9-காரட் தங்கத்தின் பாதகங்கள் என்ன

தங்கத்தின் தூய்மை மிக குறைவு ஆகும். 24 காரட் தான் 100 சதவீதம் தூய்மையான தங்கம் ஆகும். 22 காரட் தங்கத்தில் தான் நகை செய்ய முடியும். மீதி செம்பு கலப்பார்கள். ஆனால் 9-காரட் தங்கத்தில் 37.5% மட்டுமே தூய தங்கம் உள்ளது. மீதமுள்ளவை செம்பு அல்லது வெள்ளி போன்ற மற்ற உலோகங்களாக இருக்கும். மற்ற உலோகங்கள் கலந்திருப்பதால், வியர்வை, ரசாயனங்கள் அல்லது சுற்றுச்சூழல் காரணங்களால் மிக விரைவில் நிறம் மங்கவோ அல்லது கருக்கவோ வாய்ப்பு அதிகமாககும்.

அதேநேரம் நீண்ட நாள் பயன்படுத்த முடியும் என்கிறார்கள். 22 காரட் தங்க நகைகள் எப்படி ஆடம்பர தோற்றம் தருகிறதோ, அதேபோல் தான் 9 கேரட் நகையும் இருக்கும். எனினும் 22 காரட் நகைகளை விட 9 காரட் நகைகளின் மறுவிற்பனை மதிப்பு மிக மிக குறைவாகவே இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+