Gold Rate Today: எதிபார்த்தது நடந்துருச்சு.. மீண்டும் குறைந்த தங்கம் விலை.. இன்றைய ரேட் எவ்வளவு?
சென்னை: தங்கம் விலை நேற்று முன் தினம் ஒரே நாளில், காலை மாலை என இரு வேளைகளில் அதிரடியாக குறைந்து நகை பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தது. ஆனால் அடுத்த நாளே அதாவது நேற்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்து ஷாக் கொடுத்துள்ளது. நேற்றும் ஒரே நாளில் இரண்டு முறை தங்கம் விலை உயர்ந்துள்ளது. இதனால் இப்படியே தங்கம் விலை உயர்ந்துகொண்டே செல்லுமா என நகை பிரியர்கள் அச்சமடைந்த நிலையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ 400 குறைந்துள்ளது.
தங்கம் விலை நேற்று முன் தினம் ஒரே நாளில் இரண்டு முறை குறைந்து நகை பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தது. அதாவது ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 2,360 அதிரடியாக சரிந்தது. இதனால், தங்கம் விலை 70 ஆயிரம் என்ற நிலைக்கு வந்ததால் நகை பிரியர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். நகை வாங்க திட்டமிட்டவர்களும் விலை குறைந்துள்ளது வேகமாக வாங்கிவிடுவோம் என நினைத்துக்கொண்டு ஆர்வத்துடன் வாங்கினர்.

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை
சவரன் ரூ.74 ஆயிரத்து 500 வரை சென்று இதுவரை இல்லாத உச்சமாக பதிவான தங்கம் விலை நேற்று முன்தினம் விலை குறைந்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 750-க்கும், ஒரு சவரன் ரூ.70 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது. அதிகபட்ச விலை உயர்வில் இருந்து கிட்டத்தட்ட 4 ஆயிரத்து 500 குறைவாக இருந்ததால் விலை மேலும் குறையுமா என்ற எதிர்பார்ப்பு நகை பிரியர்கள் மத்தியில் எழுந்தது.
ஆனால், நேற்று தங்கம் விலை மீண்டும் ஏறுமுகத்தை சந்தித்தது நகை பிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது. நேற்று காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.15-ம் சவரனுக்கு ரூ.120-ம் உயர்ந்து இருந்தது. பின்னர் மாலை நேரத்திலும் விலையில் மாற்றம் இருந்தது. கூடுதலாக கிராமுக்கு ரூ.90-ம், சவரனுக்கு ரூ.720-ம் அதிகரித்தது. அந்தவகையில் நேற்று ஒரே நாளில் மட்டும் கிராமுக்கு ரூ.105-ம், சவரனுக்கு ரூ.840-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 855-க்கும், ஒரு சவரன் ரூ.70 ஆயிரத்து 840-க்கும் விற்பனை ஆனது.
இன்றைய தங்கம் விலை
வெள்ளி விலையை பொறுத்தவரையில், கிராமுக்கு ரூ.1-ம், கிலோவுக்கு ரூ.1,000-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.109-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 9 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை இறங்கிய வேகத்தில் மீண்டும் ஏறியது நகை பிரியர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இன்றாவது விலை குறைய வாய்ப்பு உள்ளதா? என ஏக்கத்துடன் காத்திருந்தனர்.
இந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. சவரனுக்கு ரூ.400 குறைந்தது. இதன் மூலம் நேற்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் சென்னையில் ரூ.70,840க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ஒரு சவரன் தங்கம் ரூ.70,440 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் இன்று சென்னையில் ரூ. 50 குறைந்து ஒரு கிராம் ரூ.8,805க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வல்லுனர்கள் சொல்வது என்ன?
தங்கம் விலையை பொறுத்தவரை சர்வதேச சந்தையில் நிலவும் நிச்சயமற்ற தன்மை, அமெரிக்க அதிபர் டிரம்பின் அதிரடி வரி விதிப்பு கொள்கை ஆகியவற்றால் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே வரலாறு காணாத அளவில் உயர்ந்து வருகிறது. இடையிடையே விலை குறைந்தாலும் பெரும்பாலான நாட்களில் விலை அதிகரித்தே காணப்பட்டது. பொருளாதார நிச்சயமற்ற சூழல் அதிகரித்ததால், தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்ததே விலை உயர்வுக்கு முக்கிய காரணியாக அமைந்து இருப்பதாக சர்வதேச வல்லுனர்கள் தரப்பில் கூறப்பட்டது.
எனினும், அமெரிக்கா சீனா இடையே கடந்த சில காலமாகவே நீடித்து வந்த வர்த்தகப் போர் போக்கு தற்போது முடிவுக்கு வரும் சூழல் ஏற்பட்டு இருக்கிறது.. இரு நாடுகளும் பரஸ்பர வரியை நிறுத்தி வைக்க ஒப்புக்கொண்டுள்ளன. வர்த்தக போர் முடிந்த காரணத்தால் டாலர் விலை உயர்ந்தது.. தங்கம் விலை சரிய தொடங்கி உள்ளது என்றும் வல்லுனர்கள் கூறியிருந்தனர்.
தங்கம் விலை நிலவரம்:
14.05.2025 - ஒரு சவரன் ரூ.70,440 (இன்று)
13.05.2025 - ஒரு சவரன் ரூ. 70,840 (நேற்று மாலை)
13.05.2025 - ஒரு சவரன் ரூ.70,120 (நேற்று காலை)
12.05.2025 - ஒரு சவரன் ரூ.70,000
12.05.2025 - ஒரு சவரன் ரூ.71,040
10.05.2025 - ஒரு சவரன் ரூ.72,360
09.05.2025- ஒரு சவரன் ரூ.72,120
08.05.2025 - ஒரு சவரன் ரூ.73,040
07.05.2025 - ஒரு சவரன் ரூ.72,600
06.05.2025 - ஒரு சவரன் ரூ.72,800
06.05.2025 - ஒரு சவரன் ரூ.72,200
05.05.2025 -ஒரு சவரன் ரூ.71,100
05.05.2025 - ஒரு சவரன் ரூ.70,200
04.05.2025 - ஒரு சவரன் ரூ.70,040
03.05.2025 - ஒரு சவரன் ரூ.70,040
02.05.2025 - ஒரு சவரன் ரூ.70,040
01.05.2025 - ஒரு சவரன் ரூ.70,200
30.04.2025 - ஒரு சவரன் ரூ.71,840
29.04.2025 - ஒரு சவரன் ரூ.71,840
28.04.2025 - ஒரு சவரன் ரூ.71,520
27.04.2025 - ஒரு சவரன் ரூ.72,040
26.04.2025 - ஒரு சவரன் ரூ.72,040
25.04.2025 - ஒரு சவரன் ரூ.72,040
24.04.2025- ஒரு சவரன் ரூ.72,040
23.04.2025- ஒரு சவரன் ரூ.72,120
22.04.2025- ஒரு சவரன் ரூ.74,320
21.04.2025- ஒரு சவரன் ரூ.72,120
20.04.2025- ஒரு சவரன் ரூ.71,560.












Click it and Unblock the Notifications