சீனா மூளைக்கார நாடுதான்.. பக்காவாக போட்ட பிளான்.. இப்போ தங்கம் விலை சல்லி சல்லியா நொறுங்கிடுச்சு!
பெய்ஜிங்: உலக அளவில் நடந்த இரண்டு முக்கிய விஷயங்கள் காரணமாக தங்கம் விலை சரிய தொடங்கி உள்ளது. இதை முன்கூட்டியே கணித்து தங்கத்தை கொத்து கொத்தாக சீனா விற்றுள்ளது.
அமெரிக்கா சீனா இடையே கடந்த சில காலமாகவே வர்த்தகப் போர் போக்கு தொடர்ந்து வந்தது. இரு நாடுகளும் மாறி மாறி வரிகளை உயர்த்திக் கொண்டே போனது. இதற்கிடையே இப்போது இந்த இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகப் போர் முடிவுக்கு வருகிறது. இரு நாடுகளும் ரெசிப்ரோக்கல் வரியை நிறுத்தி வைக்க ஒப்புக்கொண்டுள்ளன. வர்த்தக போர் முடிந்த காரணத்தால் டாலர் விலை உயர்ந்தது.. தங்கம் விலை சரிய தொடங்கி உள்ளது.

இரண்டாவதாக அமெரிக்காவில் வட்டி விகிதத்தை குறைக்க மாட்டோம் என்று அந்நாட்டு பெடரல் வங்கி அறிவித்துள்ளது. அந்நாட்டு வட்டி விகிதங்களை 4.25% முதல் 4.5% வரை மாற்றாமல் வைத்திருக்க முடிவு செய்துள்ளனர்.
வட்டி விகிதம் பொதுவாக குறைந்தால் டாலர் மதிப்பு சரியும். டாலர் மதிப்பு சரிந்தால் பலரும் தங்கத்தில் முதலீடு செய்வார்கள். இதனால் தங்கள் விலை உயரும். ஆனால் இங்கே அப்படியே எதிர்மறையாக நடந்துள்ளது. வட்டி விகிதம் பொதுவாக குறைக்கப்படாமல் போனால் டாலர் மதிப்பு உயரும் . டாலர் மதிப்பு உயர்ந்தால் பலரும் தங்கத்தில் முதலீடு செய்ய மாட்டார்கள். இதனால் தங்கள் விலை சரியும் அபாயம் ஏற்பட்டு உள்ளது
சீனா மூளைக்கார நாடு
சர்வதேச அளவில் உலக நாடுகள் தங்கம் வாங்குவது தங்கத்தின் விலையை பாதிக்கும். அதாவது ஒரு நாடு அதிகம் தங்கம் வாங்கினால்.. அதாவது சர்வதேச அளவில் தங்கத்தின் தேவை அதிகரிக்கும். இதனால் தங்கம் விலை உயரும்.
உலக அளவில் இப்படி தங்கம் விலை உயர் முக்கிய காரணங்களில் ஒன்று சீனா. அங்கே தங்கம் குவிக்கப்பட்டது. சீனா தொடர்ந்து தங்கத்தை வாங்கி குவித்தது. மார்ச் 2025 நிலவரப்படி சீனாவின் அதிகாரப்பூர்வ தங்க இருப்பு தோராயமாக 2,292 மெட்ரிக் டன்கள் ஆகும். இது சீனாவை உலகின் முன்னணி தங்கம் வைத்திருக்கும் நாடுகளில் ஒன்றாக ஆக்குகிறது, சீனாவில் கடந்த சில ஆண்டுகளாக தங்க இருப்புக்கள் சீராக அதிகரித்து வருகின்றன.
சீன மக்கள் வங்கி (PBoC) அதன் தங்க இருப்பை தீவிரமாக உயர்த்தி வந்தது, பிப்ரவரி 2025 இல் 50 டன்களும் மார்ச் 2025 இல் 5 டன்களும் அதிகரித்தது. இதனால் சர்வதேச அளவில் தங்கம் விலை உயர்ந்தது.
விற்பனை:
வர்த்தக போர் முடிவு, அமெரிக்க வட்டி விகிதத்தை முறையாக கணித்த சீனா, திடீரென தங்கத்தை விற்க தொடங்கி உள்ளது. இதனால் தங்கம் விலையும் சரிய தொடங்கி உள்ளது. கடந்த வாரம் 10 லட்சம் அவுன்ஸ் தங்கத்தை விற்றது. அதற்கு முதல் வாரமும் 10 லட்சம் அவுன்ஸ் தங்கத்தை விற்றது.
இதனால் சர்வதேச மார்கெட்டில் தங்கத்தின் விலை சரிந்து.. பெரிய சரிவு ஏற்பட்டது. சர்வதேச அளவில் தங்கம் விலை சரிய தொடங்கி உள்ளது. சென்னை நகரில் இன்று 1 கிராம் 24 கேரட் தங்கம் விலை ₹9,687 ஆக உள்ளது, இதேபோல் 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை ₹8,879 ஆகவும், 1 கிராம் 18 கேரட் தங்கம் விலை ₹7,319 ஆகவும் உள்ளது.
தங்கத்தின் விலை 1 லட்சம் ரூபாயை அடையும் என்று பலரும் கூறி வந்தனர். ஆனால் தங்கத்தின் விலை கடந்த 2 வாரங்களில் மட்டும் 2500 ரூபாய்க்கு மேல் குறைந்து உள்ளது. இதனால் 1 லட்சம் ரூபாயை தங்கத்தின் விலை அடையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சர்வதேச அளவில் தங்கம் விலை சரிய தொடங்கி உள்ளது. அமெரிக்காவில் ஸ்பாட் தங்கம் ஒரு அவுன்ஸ் 0.9 சதவீதம் குறைந்து $3,119.97 ஆக உள்ளது. அமெரிக்க தங்க எதிர்கால வர்த்தகம் 0.1 சதவீதம் குறைந்து $3179 ஆக உள்ளது. அமெரிக்க டாலர் குறியீடு 0.3 சதவீதம் உயர்ந்து உள்ளது.
1 அவுன்ஸ் = 28.3495 கிராம் ஆகும். 3500 டாலர் வரை விற்ற இந்த தங்கம் தற்போது 3179 டாலர் என்று சரிந்து உள்ளது. அதாவது 1 மாதத்தில் 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை கிட்டத்தட்ட 23,372 ஆயிரம் ரூபாய் சரிந்து உள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 2 ஆயிரத்திற்கும் மேல் மதிப்பில் சரிந்து உள்ளது.












Click it and Unblock the Notifications