1 வருடமாக.. பொட்டு தங்கம் கூட வாங்காத ஆர்பிஐ.. என்ன காரணம்? மத்திய அரசின் மாஸ்டர் பிளான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய ரிசர்வ் வங்கி (RBI), 2025 நிதியாண்டில் இதுவரை தனது தங்க இருப்புகளில் எந்த மாற்றமும் செய்யாமல், அதே அளவை தொடர்ந்து பராமரித்து வருகிறது. தங்கம் ஒரு பாதுகாப்பான முதலீடாக பார்க்கப்படுவதால், அதன் விலை குறையும்போது வாங்கலாம் என்ற எண்ணத்தில் ரிசர்வ் வங்கி இருக்கலாம் என கருதப்படுகிறது.

உலகளாவிய வர்த்தகம் மற்றும் அரசியல் நிலையற்ற தன்மை காரணமாக கடந்த ஐந்து ஆண்டுகளில் தங்கத்தின் விலை 80% உயர்ந்துள்ளது. சமீபத்திய தரவுகளின்படி, ரிசர்வ் வங்கியின் தங்க கையிருப்பு இந்த ஆண்டு மார்ச் இறுதி முதல் மே இறுதி வரை 880 மெட்ரிக் டன்களாக நிலையாக உள்ளது. இது ஒரு வருடத்திற்கும் மேலாக எந்த கொள்முதலும் இல்லாமல் ஒரே மாதிரியாக இருக்கிறது.

gold rate silver investment

இந்திய ரிசர்வ் வங்கி ஏன் தங்க இருப்பை அதிகரிக்கவில்லை?

Citi, Fitch ஆராய்ச்சி பிரிவு, மோதிலால் ஓஸ்வால் செக்யூரிட்டீஸ், ICICI வங்கி ஆகியவற்றின் விலை கணிப்புகள் ஒரு ட்ராய் அவுன்ஸ் தங்கம் $3,445ல் இருந்து பெரிய அளவில் குறையும் என்று கூறுகின்றன. உலகளாவிய அரசியல் பதட்டங்கள் குறையக்கூடும் மற்றும் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களை குறைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு இதற்கு காரணமாக கூறப்படுகிறது. இதனால் ரிசர்வ் வங்கி தற்போது தங்கம் வாங்குவதை நிறுத்தி வைத்து வைத்துள்ளது.

உலக அளவில் மத்திய வங்கிகளில் 95% வங்கிகள் அடுத்த 12 மாதங்களில் தங்க இருப்பை அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது. இது கடந்த ஆண்டு 81% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் எதிர்காலத்தில் ஆர்பிஐயும் தங்கத்தை அதிகம் வாங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரிசர்வ் வங்கியின் சமீபத்திய ஆண்டு அறிக்கையின்படி, நிகர வெளிநாட்டு சொத்துக்களில் தங்கத்தின் பங்கு மார்ச் 2024 இறுதியில் 8.3% ஆக இருந்தது. இது மார்ச் 2025 இறுதியில் 12% ஆக உயர்ந்துள்ளது.

தங்கம் விலை

தங்கம் விலையில் அடுத்து என்ன நடக்கும் என்ற கேள்விகள் மக்கள் பலரிடமும் எழுந்துள்ளது. கடந்த ஒரு வருடத்தில் தங்கம் விலை 40% உயர்ந்துள்ளது. 2025ஆம் ஆண்டில் இதுவரை 27%க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. ஆனால், கடந்த ஒரு மாதமாக தங்கம் விலை ஒரு குறுகிய வரம்புக்குள்ளேயே வர்த்தகமாகி வருகிறது. ஒரு அவுன்ஸ் தங்கம் சுமார் $3,350 என்ற அளவில் விற்பனையாகிறது.

கடந்த சில மாதங்களாக தங்கள் விலையில் பெரிய முன்னேற்றம் இல்லை. அதேபோல் பெரிய அளவில் அதிர்ச்சி தரும் சரிவுகளும் இல்லை.

இந்தியாவில் தங்கம் விலை நிலவரம்

இந்தியாவில் இன்றைய தங்கம் விலை ரூ.97,570 ஆக உள்ளது. கடந்த சில வாரங்களாக தங்கம் ஒரு குறுகிய வரம்புக்குள்ளேயே வர்த்தகமாகி வருகிறது. மோதிலால் ஓஸ்வால் வெல்த் மேனேஜ்மென்ட் (MOWM) நிறுவனம், தங்கம் விலையின் ஏற்றம் முடிவுக்கு வந்துவிட்டதாகக் தெரிவித்துள்ளது.

MOWM நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்ரேல்-ஈரான் மற்றும் ரஷ்யா-உக்ரைன் இடையேயான உறவுகள் உள்ளிட்ட புவிசார் அரசியல் பதற்றங்கள் தணிந்துள்ளதால், அதிலிருந்து வரக்கூடிய ஆபத்து குறைந்துள்ளது என்று தெரிவித்துள்ளது. மேலும், வர்த்தக ரீதியான நிச்சயமற்ற நிலையும் குறைந்து, வர்த்தக போர் முடியும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் தங்கம் விலை இனி ஏற்றம் அடையாது, என்று தெரிவிக்கின்றனர். இதனால் தங்கம் விலை மேலும் குறைந்த பின் ஆர்பிஐ அதிக அளவில் தங்கம் வாங்கும் வாய்ப்புகள் உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+