தோசைக்கு அரைக்கும்போது இதை கலந்து போடுங்க.. பாக்கெட் இட்லி மாவில் இந்த விஷயங்களை நோட் பண்ணுங்க
சென்னை: இட்லி மிகச்சிறந்த உணவாக கருதப்பட என்ன காரணம்? இட்லியுடன் உளுந்து சேர்த்து அரைத்து பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? குடலில் தோன்றும் கெட்ட பாக்டீரியாக்களை அழிக்கும் சக்தி இட்லிக்கு எப்படி கிடைக்கிறது? உளுந்து தவிர வேறென்ன தானியங்களை பயன்படுத்தி இட்லி செய்யலாம்? சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற இட்லி வகைகள் என்னென்ன? இவைகளை பற்றி சுருக்கமாக பார்ப்போம்.
நொதித்தல் முறையிலேயே இட்லி மாவு நமக்கு கிடைக்கிறது. அரிசி, உளுந்தம்பருப்பு 12 மணி நேரம் ஊற வைக்கும்போது, மாவாகி புளித்த பிறகு, "புரோ பையோடிக்ஸ்" என்ற நுண்ணுயிர் கலந்த உணவாக மாறுகிறது.
அதாவது நன்மை செய்யும் பாக்டீரியா கிடைக்கிறது..

குடல் பாக்டீரியா
இந்த புளிப்பு மாவில், வைட்டமின் B12 உருவாவதால், உடலில் நமக்கு தேவையான வைட்டமின் சத்து இதன்மூலம் கிடைத்துவிடுகிறது. குடலில் தோன்றும் கெட்ட பாக்டீரியாக்களை அழித்து, செரிமான உறுப்புகள் சீராக இயங்க இட்லி உதவுகிறது.
இட்லி புரோ பையோடிக்ஸ் உணவு என்பதால், மூளையுடன் தொடர்பு கொண்டு பதற்றத்தை தவிர்க்க உதவுகிறது.. நாம் எடுத்துக்கொள்ளும் மருந்துகளின் நோய் எதிர்ப்பாற்றலை உடல் எளிதில் கிரகிக்க செய்ய தூண்டுகிறது.. நம்முடைய ஆரோக்கியமான மூளை வளர்ச்சிக்கு உளுந்தம் பருப்பு உதவுகிறது.
அல்சைமர், டிமென்ஷியாவையும் உளுந்து தடுக்கிறது.. இதனால் நீரிழிவு அபாயமும் கட்டுப்படுத்தப்படுகிறது.. உளுந்தம் பருப்பில், கால்சியம் சத்து அதிகம் என்பதால், பல் உறுதி, எலும்பு உறுதித்தன்மைக்கு உதவுகிறது.. நரம்பு மண்டலம் வலுவாகிறது.. தோல், சருமம், தலைமுடியின் வளர்ச்சிக்கும் துணைபுரிகிறது.
ஆண்கள் - புரத சமநிலை
அதேபோல, ஆண்களின் பாலியல் ஹார்மோனான டெஸ்டோஸ்டெரோன் அளவை அதிகரிக்கக்கூடிய தன்மை உளுந்துவுக்கு உண்டு.. இட்லி அரிசியுடன் உளுந்து சேர்ந்து அரைத்து பயன்படுத்தும்போது, புரத சமநிலையும், தரமான புரதமும் கிடைக்கின்றன.
அரிசி, உளுந்து இரண்டும் சேர்த்து அரைக்கும்போது, நாச்சத்து அதிகமாக கிடைக்கிறது.. பயறு வகை புரோட்டீன்களில் லைசின் என்ற அமினோ அமிலம் நிறைந்தும், தானிய வகை புரதத்தில் மெத்தியோனைன் என்ற அமினோ அமிலம் நிறைந்தும் உள்ளன.. மெக்னீசியம், பொட்டாசியம் இரண்டுமே உளுந்தம் பருப்பில் உள்ளதால், இதயம் சீராக இயங்க உதவுகிறது.. கொழுப்பு சத்து அதிகமாகிறது.. பெருந்தமனி தடிப்பு தோல் அழற்சியை தடுக்க செய்கிறது.
மேற்புற கறுப்பு தோல்
எனினும், வெள்ளை உளுந்துக்கு பதிலாக கருப்பு உளுந்து பயன்படுத்தலாம். ஏனென்றால், இந்த மேற்புற தோலின்மீது Leuconostec Mesenteroides என்ற பாக்டீரியா நிறைய உள்ளது.. கறுப்பு தோலை எடுக்காமல் அப்படியே பயன்படுத்த வேண்டும்.. இதனால் கூடுதல் நார்ச்சத்து கிடைக்கும்.
அதேபோல, வெறும் அரிசியை தவிர்த்து, கம்பு, கேழ்வரகு, திணை, சாமை போன்ற தானியங்களையும் சேர்த்து கொள்ளலாம்.. அதேபோல, பச்சை பயிறு, கொள்ளு, பாசிப்பருப்பு, அவல் போன்றவற்றை சேர்த்தும் மாவு அரைக்கலாம்.. இதய பாதிப்பு, நீரிழிவு நோயாளிகள், எடை குறைக்க விரும்புபவர்களுக்கு இதுபோன்ற வெரைட்டி இட்லிகள் பேருதவி புரிகின்றன.
போரிக் ஆசிட்
கூடுமானவரை பாக்கெட் மாவை தவிர்த்துவிடலாம்.. ஏனென்றால், பாக்கெட் மாவில் புளிப்பு வாசனை வராமல் இருக்க, புண்ணுக்கு தடவப்படும் போரிக் ஆசிட் கலக்கப்படுகிறதாம்.. இது உடம்பில் சேரும்போது, குடல் ஆரோக்கியம் கெட்டு, வயிற்று வலி, வயிற்று உபாதைகள், அஜீரணம் ஏற்பட்டுவிடுகிறது..
அதேபோல, கடைகளில் மாவு அரைக்கும்போது பயன்படுத்தப்படும் நீர், சுத்தமானதா என்று நமக்கு தெரியாது. அசுத்த நீராக இருந்தால் இரைப்பை நோய் வரை தாக்கிவிடும். அதனால் வீட்டிலேயே சுகாதாரமான முறையில் மாவு அரைத்து பயன்படுத்தலாம்.. வீட்டிலேயே அரைத்த மாவாக இருந்தாலும் 2 நாட்களிலேயே அவைகளை பயன்படுத்தி முடித்துவிட வேண்டும். அதற்கு மேல் மாவு நன்றாக இருந்தாலும்கூட, பயன்படுத்தக்கூடாது என்கிறார்கள்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications