Zero Sugar: ஜீரோ சுகர், ஜீரோ கலோரி பிஸ்கட், சாக்லேட், கூல்டிரிங்ஸ் வெள்ளை சர்க்கரையை விட ஆபத்து!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜீரோ சுகர் என குறிப்பிடப்பட்டிருக்கும் உணவு பொருட்களை சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடலாமா, அப்படி சாப்பிடுவதால் அவர்களது உடல்நலனுக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்படுமா, சர்க்கரையே இல்லை பிறகு எப்படி இனிக்கிறது? என்றெல்லாம் நமக்கு சந்தேகம் இருக்கிறது. இவற்றை தெளிவுப்படுத்திக் கொள்ள யோகா மற்றும் இயற்கை மருத்துவத் துறையின் மருத்துவர் ஒய்.தீபாவை, ஒன் இந்தியா சார்பில் தொடர்பு கொண்டோம்.

அவர் நம்மிடம் கூறியதாவது: ஜீரோ சுகர், ஜீரோ கலோரிஸ் என நிறைய பிஸ்கெட்டுகள், கூல்டிரிங்க்ஸ்களில் இருக்கும். ஜீரோ சுகர் என குறிப்பிட்டிருக்கும் உணவு பொருட்களை நாம் சாப்பிட்டால் நேரடியாக ரத்த சர்க்கரையின் அளவு திடீரென அதிகரிக்காமல் இருக்கும். அது போல்தான் ஜீரோ கலோரியும்!

health dr y deepa

ஆனால் மறைமுகமாக இது சர்க்கரையின் அளவுகளை அதிகரிக்கத்தான் செய்யும். இந்த ஜீரோ சுகர் என சொல்லக் கூடிய Aspartame, Sucralose உள்ளிட்டவை சர்க்கரையை உடைக்காமலேயே நம் உடலில் செல்லும் தன்மை கொண்டவை.

சர்க்கரை அளவு

இதை சாப்பிட்ட கொஞ்ச நேரத்தில் பார்த்தால் இது சர்க்கரையின் அளவை அதிகரிக்காமல் சர்க்கரை நோயாளிகள் இனிப்பு சாப்பிட்டால் என்னென்ன பாதிப்புகளை கொடுக்குமோ அத்தனையையும் கொடுக்கும்.

இந்த ஜீரோ சுகரில் மறைமுகமாக கார்போ ஹைட்ரேடு இருப்பதாக சொல்கிறார்கள். ஜீரோ சுகர், சுகர் ஃப்ரீ என லேபிளில்தான் இருக்குமே தவிர, அதன் பொருட்களில் சர்க்கரை இருக்கத்தான் செய்யும்.

ஏன் ஜீரோ சுகர் சாப்பிடக் கூடாது?

உதாரணமாக சாக்லேட், பிஸ்கெட், பேக் செய்யப்பட்ட ஸ்நாக்ஸ்களில் உள்ளிட்டவைகளில் மாவு, ஸ்டார்ச், மற்ற கார்போ ஹைட்ரேட்ஸ் எல்லாம் இருக்கிறது. ஆனால் இந்த சுகர் ஃப்ரீயில் சுகர் என்ற வார்த்தை இருக்காது, ஆனால் கட்டாயம் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கக் கூடியதாகவே இருக்கும்.

சுகர் ஃப்ரீயால் என்ன பிரச்சினை?

சுகர் ஃப்ரீ கூல்டிரிங்க்ஸ்களில் பாலியால், சார்பிட்ரால், சைலிட்டால் உள்ளிட்டவை எல்லாம் ஜீரோ கலோரி ஸ்வீட்னர் மாதிரிதான். இவை எல்லாம் மெதுவாக ஜீரணமாகும். அதே நேரத்தில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிக அளவுக்கு உயர்த்திவிடும்.

சர்க்கரை நோயாளிகள் என்றில்லை, இது போன்று ஜீரோ சுகர், செயற்கை ஸ்வீட்னர்களை நாம் பயன்படுத்தும் போது , சர்க்கரை டேஸ்ட் குறைவாக தெரிகிறது என்பதற்காக இன்னும் அதை அதிகமாக பயன்படுத்துவோம். இப்படி அதிகம் பயன்படுத்துவதால் ஜீரரணிக்கும் தன்மையை குறைக்கும். வாயுத் தொல்லை அதிகரிக்கும். வயிறு வலி, வயிறு உப்புசம், வயிறு இழுத்து பிடித்தல், வயிற்றுப்போக்கு, தலைச்சுற்றல், தலைவலி, ஒவ்வாமை உள்ளிட்டவை ஏற்படும்.

மூளைக்கு செல்லும் ரத்தம்

இந்த லோ சுகர் பொருட்கள் நம் மூளைக்கு சென்று அதை அதிகம் உட்கொள்ள வேண்டும் என்பதை தூண்டிவிடும். அளவுக்கு அதிகமாக சாப்பிட வைக்கும் என ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். இந்த ஜீரோ சுகர் பொருட்களை நாம் அடிக்கடி சாப்பிடுவதால் சர்க்கரை அளவு கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு சென்றுவிடும்.

மரபு நோய்

பினால் கியூட்டோ நியூரியா (Phenylketonuria) மரபு நோய் இருப்பவர்கள் இது போன்ற ஸ்வீட்னர்களை 100 சதவீதம் தவிர்க்க வேண்டும். இந்த நோய் உள்ளவர்களுக்கு கீடோன் சிறுநீர் மூலம் வெளியேறி கொண்டே இருக்கும். உடல் பருமனுக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது, அதிக சர்க்கரை அளவு கொண்ட உணவுகளை எடுப்பதுதான்.

ஜீரோ சுகர்

ஜீரோ கலோரி, ஜீரோ சுகர் என இருப்பதால் இது உடல் எடையை கூட்டாது, சர்க்கரை அளவை கூட்டாது என பலர் நினைக்கிறார்கள். ஆனால் இவற்றில் உண்மையான சர்க்கரைக்கு பதிலாக , chemically synthesized sugars சேர்க்கிறார்கள். இவை சுகர் லெவலை 300 இல் இருந்து 13 ஆயிரம் மடங்கு அதிகரிக்கிறது. இந்த Aspartame, Sucralose உள்ளிட்டவைகளில் வைட்டமின்கள், மினரல்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இல்லை. இதனால் இவை ஜீரோ கலோரி மட்டுமில்லை ஜீரோ நியூட்டிரியன்ட்டும் கூட!

செயற்கை ஸ்வீட்னர்கள் ஆசிட் அளவை அதிகம் சுரந்து, ஆபத்தை விளைவிக்கும் பாக்டீரியாக்கள் மூலம் பற்கள் சொத்தையாகும் நிலை ஏற்படும். எனவே இந்த ஜீரோ சுகர் பொருட்கள் சர்க்கரை அளவை உயர்த்தாது, குறைக்கும் என எந்த ஆராய்ச்சியிலும் நிரூபிக்கப்படவில்லை.

சர்க்கரை நோய் இல்லாதவர்கள்

சர்க்கரை நோய் இல்லாதவர்கள் இந்த ஜீரோ சுகர்களை சாப்பிட்டால் உடல் எடை கூடும், கூடிய விரைவில் சர்க்கரை நோய் வந்துவிடும். அது மட்டுமில்லை, இதனால் பிளேட்டர் கேன்சர் (bladder cancer), கிட்னியில் கேன்சர் வரும் என்றும் ஆய்வறிக்கைகள் சொல்கின்றன. மாதவிடாய் நின்ற பெண்கள் இதை அதிகமாக எடுத்துக் கொண்டால் ஹார்மோன் மாற்றத்தால் இதய நோய், ஸ்ட்ரோக் (பக்கவாதம்) கூட வரலாம். இது கட் பாக்டரியாவை அழித்து கேன்சரை வரவழைக்கும் என்றும் ஆய்வுகள் சொல்கின்றன. இந்த ஸ்வீட்னர்கள், மூளைக்குச் செல்லும் ரத்தத்தில் பிரச்சினையை ஏற்படுத்தி ரத்தக் குழாய்கள் சுருங்கி இதயம் அல்லது மூளையில் அடைப்பை ஏற்படுத்தி மாரடைப்பு அல்லது பக்கவாதம் வரலாம்.

ஸ்வீட்னர்கள்

இந்த ஸ்வீட்னர்கள் குறித்து உலக சுகாதார நிறுவனம் (WHO) என்ன சொல்கிறார்கள் என்றால் இவை உயிரிழப்பை ஏற்படுத்தக் கூடிய இதய சம்பந்தமான நோயோ அல்லது பக்கவாதமோ வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இவை தோல் நோயையும் ஏற்படுத்தும் என்கிறார்கள்.

செயற்கை ஸ்வீட்னர்கள்

செயற்கை ஸ்வீட்னர்கள், அர்டிகேரியா எனச் சொல்லப்படும் hives, அதாவது உடலில் சிகப்பாக, தடிமனாக தோல் மாறி அங்கு அரிப்பை ஏற்படுத்தும். அது போல் நாக்கில் சுவை மொட்டுகளையும் பாதித்து, சுவையே தெரியாத வகையில் பிரச்சினையை ஏற்படுத்தும் என்கிறார்கள். எனவே செயற்கை ஸ்வீட்னர்களை தவிர்த்துவிட்டு இயற்கை ஸ்வீட்னர்களான பேரீச்சம் பழம், காய்ந்த திராட்சைகள், தேன் ஆகியவற்றை எடுத்துக்கலாம். சர்க்கரை நோயாளிகள் கூட இவற்றை எடுத்துக் கொள்ளலாம். இதை விட செயற்கை ஸ்வீட்னர்கள் எடுத்துக் கொள்வது ஆபத்தில்தான் முடியும். இவ்வாறு டாக்டர் ஒய்.தீபா தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+