பாலக்கீரை.. பொல பொலன்னு உடல் எடையை குறைக்கும் பாருங்க.. அற்புதம் கொண்ட பசலைக்கீரை.. விடாதீங்க பெண்களே
சென்னை: பசலைக்கீரை அல்லது பாலக்கீரை என்பார்கள்.. இதிலுள்ள சத்துக்கள் பல உள்ளன என்றாலும், இந்த கீரை தலைக்கு பயன்படுத்தலாமா? முகப்பொலிவுக்கு பயன்படுத்தலாமா? என்து குறித்து பார்ப்போம்.
100 கிராம் பசலையில், 23 கலோரிகள், 3.6 கிராம் கார்போஹைட்ரேட், 2.9 கிராம் புரதம், 2.2 கிராம் நார்ச்சத்து, 0.4 கிராம் கொழுப்புக்கள் உள்ளன. இதைத்தவிர, வைட்டமின் A, B1, B2, B3, B6, B9 மற்றும் கணிசமான அளவு வைட்டமின் C, K, E, போன்றவை நிறைந்துள்ளன..

மேலும், மாங்கனீசு, கால்சியம், இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், துத்தநாகம் மற்றும் சோடியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன.
நார்ச்சத்துக்கள்: உடல் எடை குறைப்பவர்களுக்கு இந்த கீரை ஒரு வரப்பிரசாதமாகும்.. காரணம், இதிலுள்ள கரோட்டினாய்டு என்ற லுடின், கொலஸ்ட்ராலை கரைக்கும் தன்மைக்கொண்டவை. தினமும் டயட்டில் சேர்த்தால், கொலஸ்ட்ரால் குறைய துவங்கும். பசலைக்கீரையில் கொழுப்பு சத்து கிடையாது.
நிறைய நார்ச்சத்துக்கள் இதில் உள்ளன. செரிமான கோளாறுகள் ஏற்படுவதை தடுக்கின்றன. சரியான நேரத்தில் பசியை தூண்டுவதற்கு, இந்த கீரைகளில் உள்ள நார்ச்சத்துக்கள் உதவுகின்றன.. மேலும், உடலில் தேவையற்ற கலோரிகள் தங்கி உடல் எடை கூடுவதை கீரைகளில் உள்ள வைட்டமின்கள் தடுத்து நிறுத்துகின்றன.. எனவே, டயட் இருப்பவர்கள், வாரம் 2 முறையாவது, எண்ணெய் குறைவாக சேர்த்து இந்த கீரையை, சப்பாத்திக்கு கூட்டு போல செய்து சாப்பிடலாம்.
இரும்பு சத்துக்கள்: அதேபோல, பெண்களுக்கான இரும்புச்சத்துக்கள் இதில் நிறைய இருக்கிறது.. அதனால், முடி வளர்ச்சிக்கு உதவுவதுடன், ரத்த உற்பத்திக்கும் துணைபுரிகிறது.. ஹீமோகுளோபின் அளவையும் அதிகரிக்க செய்யும். பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதல் பிரச்சனையை, இந்த கீரையை சமைத்து சாப்பிடுவதன் மூலமாக சரிசெய்யலாம்..
அதேபோல, இந்த கீரையை சாறு எடுத்து தவறாமல் குடித்து வந்தால், முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் நீங்கிவிடும்.. அதேபோல, இந்த கீரையின் சாற்றினை, முகப்பருக்கள் மீது பூசி வந்தால், அவையும் மறைந்துவிடும்.
தலைமுடி வளர்ச்சி: இந்த கீரையை தலைமுடிக்கும் "பேக்" போல போடலாம்.. 2 கைப்பிடி அளவு கீயுடன், 2 ஸ்பூன் தயிர், 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து மிக்சியில் அரைத்து, அதை ஹேர்பேக் போல தலையில் போட்டுக் கொள்ளலாம். பிறகு, சிறிது நேரம் கழித்து தலையை அலசினால் போதும்.. வாரம் 2 நாள் இதை செய்தாலே, முடி உதிர்வு நின்றுவிடும்.. முடியும் வளர்ச்சி பெற ஆரம்பிக்கும்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications