கருணைகிழங்கு.. அட, இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே.. கண்டிப்பாக கருணை காட்டும் "கருணை".. வரப்பிரசாதம்
சென்னை: கிழங்கில் சிறந்தது கருணை என்பார்கள்.. அந்த அளவுக்கு கருணைக்கிழங்கு பல சத்துக்களை அடக்கி வைத்திருக்கிறது.. பெரும்பாலும் மூலநோய்க்கு மருந்தாகிறது என்றாலும், பெண்களுக்கு பல வழிகளில் இந்த கருணை உதவுகிறது.
கிழங்கு வகைகள் என்றாலே உடல் எடையை அதிகப்படுத்திவிடும் என்று உணவில் தவிர்த்து விடுவார்கள்.. ஆனால், கருணைக்கிழங்கு இதற்கு நேர்மாறானது. உடல் எடையை குறைக்க உதவுகிறது என்பதுதான் ஆச்சரியமான உண்மை.

உடல் எடை: உடல் எடையை குறைக்க விரும்புவர்கள், இந்த கருணைக்கிழங்கை தாராளமாக சாப்பிடலாம். குடலில் கிருமி சேராமல் தடுத்து, கொழுப்பு அதிகமாக சேர்வதை குறைக்கிறது இந்த கருணைக்கிழங்கு.. "குண்டுடல் கொடுக்கும் உருளைக்கிழங்கு, குண்டுடல் குறைக்கும் கருணைக்கிழங்கு" என்றே பொன்மொழி உண்டு. அந்த அளவுக்கு கொழுப்பு சத்தை கரைக்க கூடியது அதாவது, கொழுப்பு சத்து ரத்தநாளங்களில் படிவதை கருணை கிழங்கு தடுக்கிறது...
நச்சுக்களையும் வெளியேற்றும் நல்மருந்தாக இருப்பதால், உடல் எடை குறைப்பவர்களுக்கு அருமருந்தாக விளங்குகிறது.. வாரம் 2 முறையாவது கருணை கிழங்கை பக்குவம் செய்து சாப்பிட்டாலே உடல் எடை குறைய துவங்குமாம். உடல் எடையை மட்டுமல்ல, உடல் எடையால் மூட்டுவலி உட்பட கோளாறுகளால் அவதிப்படுவோரும் தினசரி சாப்பிட வேண்டியது கருணைக்கிழங்காகும்.
ரத்தப்போக்கு: பெண்களுக்கு, ரத்தப்போக்கு உட்பட மாதவிடாய் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளையும் இந்த கிழங்கு தீர்த்துவிடும்.. அதிகப்படியான ரத்தபோக்கையும் இது தடுக்கிறது. மாதவிடாய் நேரத்தில் உடலும், மனமும் சோர்ந்து போகாமல் இருக்கவும் இந்த கிழங்கு உதவுகிறது..
அதேபோல, பெண்களின் வெள்ளைப்பாடு பிரச்சனைகளுக்கும், சிறந்த மருந்தாக இந்த கிழங்கு விளங்குகிறது... அதனால்தான், கருணைக்கிழங்கை கொண்டு மாதவிலக்கு பிரச்னைக்கான மருந்து தயாரிக்கிறார்கள்.. வேகவைத்து மசித்த கருணைக்கிழங்கு, ஒரு ஸ்பூன் அளவுக்கு எடுத்துக் கொண்டு, இதனுடன் வெல்லம் சேர்த்து கலந்து மாதவிலக்கு முன்பு சாப்பிட்டுவர கைகால் வலி இடுப்பு வலி, வயிற்று வலி, தலைவலி போன்றவை வராமல் இருக்குமாம்.
ஹார்மோன் பிரச்சனை: எனவே, பெண்கள் இதை உணவில் எடுத்துக்கொள்வதால், மாதவிலக்குக்கு முன்பு ஏற்படும் பிரச்னைகள் கட்டாயம் நீங்கும்..பெண்களின் ஹார்மோன் பிரச்சனைகளைக்கூட கட்டுப்படுத்தும். முக்கியமாக, 40 வயதுக்கு மேல் வரும் மெனோபாஸ் பிரச்சனையின் போது, பெண்களின் ஈஸ்ட்ரோஜன் அளவை இது அதிகப்படுத்துகிறது.
இந்த கிழங்கு, ஒருவித நமைச்சலை தந்துவிடும் என்பதாலேயே பலரும் இதை சமைக்க முன்வருவதில்லை.. புளிக்கரைசலில் அரைமணி நேரம் ஊறவைத்தாலே, இந்த நமைச்சல் நீங்கும்.. கருணையின் தோலை சீவும்போதே, கைகளில் நமைச்சலை தரக்கூடியது.. கருணைக்கிழங்கு நறுக்குவதற்கு முன்பு, கைகளில் எண்ணெய்யை தடவிக்கொண்டு சீவ வேண்டும் என்கிறார்கள்..
அதேபோல, கருணைக்கிழங்கை சரியான பக்குவத்தில் சமைக்காவிட்டால், உண்ணும்போது நாக்கில் அரிப்பு ஏற்படும். அதனால், சமைக்கும்போது கிழங்கை நன்றாக வேக வைக்க வேண்டும்.... பிறகு, அதன் தோலை உரித்து, புளி சேர்த்து சமைத்தால், அரிப்பு அவ்வளவாக இருக்காது..
கருணைக்கிழங்கு: அல்லது அரிசி கழுவிய நீரில், கருணைக்கிழங்கை வேக வைத்தாலும், நமைச்சல் கட்டுப்படும். இந்த கிழங்கை சமைக்கும்போது, புளிக்கு பதிலாக சிலர் மோர் பயன்படுத்துவார்கள். கருணைக்கிழங்கு சாப்பிட்டால் அறுவை சிகிச்சை செய்வதற்கான தேவை குறையும் என்பதால், உணவில் கட்டாயம் சேர்த்து கொள்ள வேண்டும்.
-
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2!












Click it and Unblock the Notifications