முருங்கைக்கீரை பெஸ்ட்.. உடல்வலி முதல் தொண்டை வலி வரை ஓடிரும்.. அற்புத முருங்கையிலை சூப் .. சிம்பிள்
சென்னை: இரும்பு சத்து நிறைந்த முருங்கைக் கீரையில் பலவிதமான சூப்களை செய்யலாம்.. எளிய முறையில் 2 வகையான சூப்களை மட்டும் பார்க்கலாம்.
முருங்கையில் உள்ள சத்துக்களை லிஸ்ட் போட முடியாது.. இரும்புச்சத்து, பொட்டாசியம், சோடியம், கால்சியம், காப்பர், ஜிங்க், மக்னீசியம், மாங்கனீசு, வைட்டமின் A, C, B, பீட்டா கரோட்டீன், B காம்ப்ளக்ஸ், டைட்டாஜீ பைபர், கார்போஹைட்ரேட்ஸ், புரோட்டீன், கொழுப்பு சத்துக்கள் நிறைந்துள்ளன.

முருங்கைக்கீரை: அதனால்தான், சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற கீரையாக இன்றும் திகழ்கிறது.. முருங்கையில் உள்ள குர்செடின், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க உதவும் ஆன்டிஆக்ஸிடன்ட் ஆகும். இதிலுள்ள குளோரோஜெனிக் அமிலம், இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கவும் ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தவும் உதவுகிறது..
வழக்கமாக, முருங்கைக்கீரையில் சாம்பார், பொரியல், கூட்டு, குழம்பு செய்வோம்.. முட்டைகளை உடைத்து ஊற்றி பொரியல் செய்வோம்.. வேர்க்கடலையை பொடித்து போட்டு பொரியல் செய்வோம்.. கம்பு மாவுடன் சேர்த்து தோசை போல சுட்டும் சாப்பிடலாம்.. எளிய முறையில் 2 விதமான சூப்களை செய்யலாம்.
இதற்கு இளசாக உள்ள முருங்கை இலைகள் ஒரு கைப்பிடி எடுத்து கொண்டு சுத்தம் செய்து கொள்ள வேண்டும். காம்புகள் முற்றலாக இருக்கக்கூடாது. பிறகு, நன்றாக அலசி வைத்து கொள்ள வேண்டும்..
முருங்கை கீரை: இப்போது ஒரு வாணலில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்ற வேண்டும். அதில், இந்த முருங்கையிலையை சேர்க்க வேண்டும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததுமே, ஒரு கைப்பிடி சின்ன வெங்காயம், சிறிது நசுக்கிய பூண்டு, சிறிது மஞ்சள் தூள், சிறிது மிளகுத் தூள், சிறிது சீரகத் தூள், சிறிது உப்புத்தூள் சேர்க்க வேண்டும். 2 டம்ளர் தண்ணீர், ஒரு டம்ளர் அளவுக்கு வரும்வரை சுண்ட வேண்டும். அவ்வளவுதான், முருங்கை சூப் தயார்.
இந்த முருங்கையிலையை வேறு மாதிரியாகவும் சூப் வைக்கலாம்.. நீர்க்கோர்ப்பு, சளி, தொண்டைவலி, இருமலுக்கு இந்த சூப் பயன்படுத்தலாம். ஒரு பாத்திரத்தில், அரிசி ஊற வைத்த தண்ணீரை கொதிக்க விட வேண்டும்.. தண்ணீர் கொதித்து வரும்போது, சுத்தம் செய்யப்பட்ட முருங்கை இலைகளை சேர்க்க வேண்டும்..
எண்ணெய்: 2 நிமிடம் கழித்து வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், சிறிது உப்பு, சிறிது மஞ்சள் தூள் சேர்த்து வேக விட வேண்டும்.. முருங்கைக்கீரை வெந்ததும், இதில் சிறிது தேங்காய் பால், மிளகு தூள், சீரக தூள் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கிவிட வேண்டும். இப்போது ஒரு வாணலில், எண்ணெய், சீரகம், கருவேப்பிலை சேர்த்து தாளித்து கொட்டினால் சூப் ரெடி.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications