நாடி துடிப்பை பார்த்து கர்ப்பத்தை கன்ஃபார்ம் செய்வது உண்மைதானா? அது எப்படி தெரியும்?
சென்னை: அந்த காலத்து திரைப்படங்களில் எந்த பெண்ணாவது மயங்கி விழுந்தால் உடனே அங்கிருக்கும் மருத்துவரோ மருத்துவச்சியோ அந்த பெண்ணின் நாடியை பிடித்து பார்ப்பார்கள். அப்போது கர்ப்பமாக இருப்பது அவர்களுக்கு தெரியுமாம். அது எப்படி என்பதை பார்க்கலாம்.
இதுகுறித்த தமிழ் குவோராவில் சாமுவேல் ஜோசப் என்பவர் தனது பதிவில் கூறியிருப்பதாவது: நமது இதயத்துடிப்பு தான் நாடித்துடிப்பு. நமது இயல்பான நாடித்துடிப்பு/இதயத்துடிப்பு 72. கர்ப்பிணி பெண்களுக்கு அப்படியே இரு மடங்காக இருக்கும். இதனை வைத்து தான் உறுதி செய்கின்றனர்.

அனைவரும் சில தகவல்களை அறிந்துகொள்ள வேண்டுமென சில தமிழ் தளங்களின் உதவியுடன் தகவல்களைத் தொகுத்துள்ளேன். ஆங்காங்கே சிறுசிறு மாற்றங்கள் செய்து, படிப்பதற்கு ஏதுவாக எழுதுகிறேன்.
நாடித்துடிப்பு என்றால் என்ன?: நம் உடலின் ரத்த ஓட்டத்தின் ஆதாரம் இதயம். இதயம் எப்படி செயல்படுகிறதோ அதற்கு ஏற்றார்போல்தான் நம் உடல் முழுவதும் இரத்த ஓட்டம் இருக்கும். மிகை ரத்த அழுத்தம், குறை ரத்த அழுத்தம் என்று சொல்வதெல்லாம் இதயத்தின் செயல்பாட்டைப் பொறுத்துத்தான்.
அப்படி இதயம் சுருங்கி விரியும் தன்மைக்கு ஏற்ப உருவாவதுதான் நாடி. அதாவது இதயத் துடிப்பும் நாடியும் ஒன்றையொன்று ஒத்திருக்கும்.
நாடி பார்க்கும் முறை : மணிக்கட்டுக்கு ஓர் அங்குலம் மேலே, மூன்று விரல்களால் (நடு விரல், மோதிர விரல், சுண்டு விரல்) ஒரே நேரத்தில் மெதுவாக அழுத்தி நாடி பார்க்க வேண்டும். பிறகு, விரல்களை மாறி மாறி அழுத்தியும், தளர்த்தியும் பார்த்தால் நாடியின் தன்மையை முழுமையாக அறிந்து கொள்ளலாம்.
எந்தெந்த இடங்களில் நாடி பார்க்கலாம்?: கை மணிக்கட்டு, முழங்காலின் பிற்பகுதி, கழுத்து, முழங்கை உட்பகுதி, குதிக்கால் மேற்பகுதி, பாதத்தின் ஒரு பகுதி.
ஒருவருக்கு எவ்வளவு துடிப்புகள் இருந்தால் அது சரியானது? ஒரு ஆரோக்கியமான இளைஞனுக்கு ஒரு நிமிடத்திற்கு 72 முறை துடிக்கும். ஆனால் அந்த துடிப்பு, பாலினம், வாழ்க்கை முறையை பொறுத்து மாறுபடும்.
உதாரணமாக, ஒரு விளையாட்டு வீரர் என்றால் அவர்களுக்கு நிமிடத்திற்கு 50 முதல் 60 துடிக்கும். கைக் குழந்தைகளுக்கு அதிகமாக 100 முதல் 160 வரையில் துடிக்கும். சிறு குழந்தைகளுக்கு 100 முதல் 120 வரை துடிக்கும். பெரிய குழந்தைகள் என்றால் 70 முதல் 80வரை துடிக்கும். ஆனால் இயற்கையாகவே சாப்பிடும் போதும், உடற்பயிற்சி செய்யும் போதெல்லாம் நாடித்துடிப்புகள் அதிகரிக்கும். அந்நேரத்தில் எண்ணிக்கையைக் கணக்கிலெடுத்துக் கொள்ளக் கூடாது.
கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு நாடித் துடிப்புகள் ஒரு நிமிடத்திற்கு சராசரியாக 150 துடிப்புகள் ஏற்படும். பழைய காலத்தில் எல்லாம் கர்ப்பமாக இருக்கிறார்களா என்று அறிய எந்த ஒரு சோதனைகளும் செய்ய இயலாது; சாதனங்களும் கிடையாது. அப்போது அவர்கள் நாடித்துடிப்பை வைத்து தான் கர்ப்பத்தை அறிவார்கள். ஏனெனில் அந்த நேரத்தில் உடலில் உள்ள இரத்தத்தின் அளவு அதிகரிக்கும். மேலும் இதயம் உடல் முழுவதும் இரத்தத்தை செலுத்துவதற்கு சற்று கடினமாக வேலை செய்யும். இதனால் அதன் துடிப்பு வேகமும் அதிகமாக இருக்கும். கருவின் இதயமும் துடிப்பதால் தான் இந்த வேறுபாடு.
ஒரு கருவோட இதயத்துடிப்ப கேட்க 7 வாரம் ஆகுமாம். கரு உருவான 51/2 - 6 வாரத்துக்குள்ளயே துடிக்க ஆரம்பிச்சிடுமாம். இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications