மீனை இப்படி செஞ்சு பாருங்க.. சால்மன் மீனில் இத்தனை நன்மையா.. உடல் எடை அதிகரிக்கணுமா? அப்ப இதை பாருங்க
சென்னை: மீன்கள் சாப்பிட்டால் உடலுக்கு நன்மைகள் கிடைக்கும் என்றாலும், அதை எப்படி சமைத்து சாப்பிட வேண்டும் என்பதில்தான், ஆரோக்கியத்தின் சூட்சுமம் அடங்கியிருப்பதாக சொல்கிறார்கள். அதேபோல, உடல் எடையை அதிகரிக்க செய்யும் மீன்கள் என்னென்ன தெரியுமா?
ஒவ்வொரு வகையான மீனிலும் ஒவ்வொரு சத்துக்கள் இருக்கின்றன.. அசைவ உணவுகளிலேயே, சத்துக்களில் முதன்மை பெற்றுள்ளது இந்த கடல் மீன்கள்தான்.. அதனால்தான், சர்க்கரை நோயாளிகளையும் இருதய நோயாளிகள், கர்ப்பிணிகளையும், ஒருகுறிப்பிட்ட அளவுடன் மீன்களை சாப்பிட சொல்கிறார்கள்.

உடல் எடை: மற்ற இறைச்சி வகைகளுடன் ஒப்பிடுகையில் மீனில் குறைந்த அளவு புரதம் மட்டுமே இருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது. ஆனால், உடல் எடையை குறைக்க வேண்டுமானால், அதற்கும் இந்த மீன்கள் உபயோகப்படுகின்றன.
சாச்சுரேட் கொழுப்புக்கள் இந்த மீன்களில் உள்ளதால் உடல் எடையை அதிகரிக்காது... சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், 8 வார காலத்தில், மீன்களை மட்டுமே சாப்பிட்டவர்கள் எடை குறைந்திருக்கிறதாம்..
என்னென்ன மீன்கள்: உடல்எடை குறைய வேண்டுமானால், கானாங்கெளுத்தியை தேர்ந்தெடுக்கலாம். அதேபோல முரல் மீனை தாராளமாக பயன்படுத்தலாம்.. சங்கரா மீனையும் தேர்ந்தெடுக்கலாம்.
வைட்டமின்கள், பொட்டாசியம், கால்சியம், விட்டமின் பி5 மற்றும் பி6, ஜிங்க், மெக்னீசியம், பாஸ்பரஸ், சோடியம், நல்ல கொழுப்புகளின் இந்த மீன்களில் உள்ளன.. அதேபோல, மத்தி, சாளை மீன், சங்கரா மீன், நெத்திலி, சூரை மீன், மத்தி மீன் போன்றவைகளை தேர்ந்தெடுக்கலாம்..
முள் அதிகமாக இருப்பதால், இவைகளை பலரும் தவிர்த்துவிடுவார்கள். ஆனால், அதிக ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது இந்த மீன்கள்தான். சால்மன், டுனா, கானாங்கெளுத்தி அல்லது ஹெர்ரிங் போன்ற கொழுப்பு நிறைந்த மீன்களில் சில கலோரிகள் இருந்தாலும், இந்த மீன்களை முற்றிலுமாக தவிர்க்க வேண்டாம் என்கிறார்கள்..
எப்படி சமைப்பது?: மீன்களை எப்படி சமைத்து சாப்பிட்டாலும் ருசி என்றாலும், உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், சில டிப்ஸ்களை கடைப்பிடிக்கலாம். மீன்களில் அதிக எண்ணெய், அல்லது அதிக மசாலாக்களை சேர்த்து சமைக்கக்கூடாது.. அதிக எண்ணெய் சேர்த்தால், மீனில் உள்ள சத்துக்களை இழக்க செய்வதுடன், உடல்எடையை குறைக்க எடுக்கும் முயற்சியும் கை கொடுக்காது.
உப்பு, மிளகு, ஆலிவ் எண்ணெயுடன் சேர்த்து மீனை வேகவைத்து சாப்பிடலாம்.. அல்லது, மிகக்குறைவான மசாலா பொருட்களை மேரனேட் செய்து, கிரில் செய்து சாப்பிட்டால், முழு சுவையும் கிடைக்கும்.. அல்லது நெருப்பில் சுட்டும் சாப்பிடலாம்.. அல்லது சாலட் செய்தும் சாப்பிடலாம். உடல் எடையை குறைக்க வாரத்திற்கு மூன்று முறை மீன்களை சாப்பிட்டாலே போதும் என்று ஆய்வுகள் பரிந்துரைக்கின்றன.
அதுமட்டுமல்ல, மீன் மற்றும் மீன் எண்ணெய் சேர்க்கைகள், உடலில் கொழுப்பை சேமிக்கும் செல்களை கொழுப்பை கரைக்கும் செல்லாக மாற்றுவதால், நடுவயதில் உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு இது உதவுகிறது என்று
ஜப்பானில் உள்ள கியோட்டோ பல்கலைக்கழகம் தெரிவித்திருக்கிறது.
மீன் எண்ணெய்: அதேபோல, உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு மீன் எண்ணெய் ஒரு சிறந்த தேர்வு என்கிறார்கள்.. இந்த மாத்திரைகள், உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, கலோரிகள் எரிப்பதை துரிதப்படுத்துகிறது.. எனவே, உடல்எடை குறைக்க முயற்சியில் இறங்குபவர்கள், மருத்துவர்களின் பரிந்துரையுடன், தாராளமாக மீன் எண்ணெயை தங்கள் உணவுகளில் சேர்த்து சாப்பிடலாம்.
உடல் எடை குறைவதற்கு இப்படி மீன்வகைகள் உள்ளதுபோலவே, உடல் எடை அதிகமாவதற்கும் சில மீன்கள் உள்ளன.. தினமும் ஒன்று அல்லது 2 சால்மன் மீன்களை சாப்பிட்டால், உடலுக்கு தேவையான புரதச்சத்துக்கள் கிடைத்துவிடும்.. அதிலுள்ள அத்தியாவசிய எண்ணெய்கள் சோம்பலில் இருந்து விடுவித்து, தேவையான நல்ல கொழுப்பையும் உடலுக்கு கிடைக்கச்செய்யும்.
இறால் மீன்: அதேபோல, சூரை மீன்களையும் அதிகம் சாப்பிடலாம்.. இந்த மீன்களில் கொழுப்பு அமிலங்கள், உடல் எடையை மட்டும் கூட்டாமல், உடலை ஆரோக்கியத்துடன் இருக்கவும் துணைபுரிகிறது.. எனவே, மதிய உணவில், சூரை மீன் குழம்பு அல்லது சாலட்டை சேர்த்து கொள்ளலாம். உடல்எடை கூட்டுவதில் இறால் மீன்களுக்கும் முக்கிய பங்குள்ளது. இந்த மீனிலுள்ள வளமான ஊட்டச்சத்தும், அத்தியாவசிய அமிலங்களும் உடல் எடையை கூட்டுகிறது.
(இது பொதுவான தகவல்களை அடிப்படையாக கொண்டது. உங்கள் பிரச்சனைக்கு மருத்துவரை அணுகுவதே சிறந்தது. இந்த தகவலுக்கு "One India Tamil News" பொறுப்பேற்காது)
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications